இயேசுகிறிஸ்துவை பற்றிய வெளிப்படுத்துதல் Jeffersonville, Indiana, USA 60-1204M 1சகோ. நெவில் அவர்களே! தங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் அனைவரும் அமரலாம். “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன்'' என்பதாக ஒரு சமயம் சொல்லப் பட்டது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது இங்கு இருக்கிற அனைவருக்கும் உட்கார இட வசதி போதுமானதாக இல்லாதிருக்கிறதற்காக நாங்கள் வருந்து கிறோம். ஒரு வேளை இன்னும் எதிர்வரும் வாரங்களில் இச்செய்திகளைக் கேட்க மேலும் அதிகமதிகமாக மக்கள் வரக்கூடும். ஆனால் இந்த விசேஷித்த கூட்டங்களுக்கான காரணம் என்னவெனில், நாம் செய்யப் போவதென்னவெனில்... ''சபை யானது இந்நாளில் இச்செய்தியைப் பெற்றிருத்தல் வேண்டும்'' என்ற எச்சரிக்கை உணர்வை பரிசுத்த ஆவியானவர் எனதுள்ளத்தில் ஆழப்பதித்திருந்தார். ஏனெனில் இச்செய்தியானது வேதம் முழுவதிலும் மிகவும் தலைசிறந்ததாகக் காணப்படுகிறதென நான் விசுவாசிக்கிறேன். மேலும், இச்செய்தியானது இவ்வேளையில் கிறிஸ்துவை அவருடைய சபையில் வெளிப்படுத்திக் காண்பிக் கிறது. 2ஒருவருக்கு தன் எண்ணங்களையும் விசுவாசத்தையும் ஆதார மாகக் கொண்டுள்ள ஒன்று இல்லாமல் போனால், எவருக்குமே விசுவாசம் இருக்க முடியாது. அவர் செய்கிறது என்னவென்றும் அவர் எங்கே செல்கின்றார் என்றும் அறிந்து கொள்ள இயலாது. எனவே வேத வசனங்கள் கிறிஸ்துவையும் காலத்தின் நிலையையும் நமக்கு இக்கடைசி நாட்களில் வெளிப்படுத்தியிருக்குமானால், அதை ஆராய்ந்து நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்வது, நமக்கு நன்மை பயக்கும். இப்பொழுது நமது சபையானது பெரிதாக இல்லாமைக்கு வருந்துகின்றோம். ஒரு நாளில் அவ்வாறான பெரிதான கட்டிடத்தை நாம் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம். 3கடந்த நான்கு தினங்களாக வெளிப்படுத்தின விசேஷத்தின் வரலாற்றுப் பூர்வமானவைகளை நான் ஆராய்ந்து கொண்டிருக் கையில், உண்மையாக இவ்வாறாக சம்பவித்திருக்கும் என்று நான் எதிர்பாராதவைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் வேதத்தில் காணப்படும் “உண்மையான திராட்சைச் செடி'', ”கள்ளத் திராட்சைச் செடி'யைப் பற்றி அத்தலைப்பில் ஒரு பிரசங்கத்தை நிகழ்த்துவதற்காக முயற்சியொன்றை எடுத்துக் கொண்டேன். அதைப் போலவே, இந்த ஏழு சபைக் காலங்களைப் பற்றிய செய்தித் தொடர் அளிக்கப்பட்டதற்குப் பிறகு, வரலாற் றையும், வேதத்தையும் அடிப்படையாகக் கொண்டு, ''மெய்யான சபை', 'கள்ளச் சபை' என்ற தலைப்பில் ஒரு செய்தித் தொடரை அளிக்கலாம் என்ற எண்ணம் எனக்குண்டானது. 4இன்னும் கூடுதலாக இருக்கைகளை பின்னால் உள்ள காலி யிடங்களில் கொண்டு வந்து நிரப்பி இன்னும் கொஞ்சம் மக்களை உட்கார வைக்க வேண்டும் என்று நாம் முயன்று கொண்டிருக் கிறோம். அதற்காக கூடுதல் இருக்கைகளை பெற நாம் முயலு கிறோம். அப்படிச் செய்தால் ஆராதனை சமயங்களில் மேலும் கூடுதலாக மக்களை நாம் அமர வைக்க இயலும். இப்பொழுது இச்செய்திகளைப் பற்றி, நான் இங்குள்ளவர் களில் இதைப் பற்றிய உண்மையாகவே கரிசனை கொண்டவர் களைப் பார்த்துக் கேட்டுக் கொள்வதென்னவெனில், இச் செய்தியை நாம் விளக்கிக் கூறும் ஒவ்வொரு கூட்டங்களுக்கும் தவறாது வரவேண்டு மென்பதே. இந்த மகத்தான நூலாகிய வெளிப்படுத்தின விசேஷத்தையும், ஏழு சபைகளைப் பற்றியும் நானே விளக்குவேன் என்பதாக நான் என் மேல் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் நான் பயபக்தியுடன் தேவன் மேல் சார்ந்து, இதனிடத்தில் நான் வருகையில், தேவனே இதை வெளிப்படுத்த வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன். இச்செய்தியில் உள்ள வரலாற்றுப் பூர்வ சான்றுகள், எனக்குத் தெரிந்த வரை மிகவும் தலை சிறந்த வரலாற்றாசிரியர் களின் வரலாற்று நூல்களிலிருந்து எடுத்து கையாளப்பட்டவை களாகும். இப்பொழுது எனது படிக்கும் அறையில், ஐந்தாறு விளக்கவுரை நூல்கள் உள்ளன. அவையாவன: ஹிஸ்லோப்பின் 'இரண்டு பாபிலோன்கள்'' (Two Babylons) ஃபாக்ஸ் என்பவரின் “இரத்த சாட்சிகளின் புத்தகம்'' (Book of the Martyrs) மற்றும் இதர மகத்தான புத்தகங்களாகும். “நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முந்தைய காலம்'' அதைப் பற்றிய நான்கு புத்தகங்கள், ஒவ்வொன்றும் நானூறு பக்கங்கள் கொண்டதாகும். அவைகளில் நாம் நிசாயா ஆலோசனை சங்கம் மற்றும் அனைத்து வரலாற்று உண்மைகளையும் பெறலாம். ஏனெனில் இவ்வொலி நாடாவிலுள்ள செய்திகளை பின்னணியாகக் கொண்டு, ஏழு சபைக் காலங்களைப் பற்றிய ஒரு வியாக்கி யானத்தை எழுதித் தயாரித்து, அதை உலகம் முழுவதிலும் நாம் அனுப்பப் போகிறோம். ஏனெனில் நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். 5இது கடந்த தேர்தல் வரையிலுங்கூட எனதுள்ளத்தில் உதிக்க வில்லை. அதன் பின்பு தான் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நான் கண்டேன். மேலும் பரிசுத்தாவியானவர் எனக்கு இதைப் பற்றி வெளிப்படுத்த ஆரம்பித்து, இச்செய்தியை மக்கள் மத்தியில் வைத்து அவர்களை எச்சரிக்கச் சொன்னார். இவ்விதமானதொரு சபையில் இச்செய்தியை போதுமான அளவு என்னால் அளிக்க இயலாது. மேலும் நான் அமர்ந்து ஒரு புத்தகத்தை இச்செய்திக்காக எழுதினால்... நான் பிரசங்க பீடத்தில் நிற்கையில், கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் பரிசுத்த ஆவியானவரின் ஊக்கு விக்கும் அசைவு (inspiration) எனக்குதவ என் மேல் வருகிறது என்று நான் உணருகிறேன். இப்பொழுது, இச்செய்தியானது ஆவியானவரின் ஊக்குவிக்கும் அசைவுடன் ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டு விடுகிறபடியால், அவ்வசைவு, ஒலி நாடாவில் அடங்கியுள்ள இச்செய்தியின் பேரில் ஒரு நூலை நான் எழுத என்னை போதுமான அளவு தகுதிப்படுத்திவிடும். இங்கே பிரசங்கத்தில் கூறுகிறவைகளெல்லாவற்றையும் புத்தகத்தில் நாம் போட முடியாது. எனவே வாஸ்தவமாகவே, எழுதப்படும் புத்தகமானது சற்று நேர்செய்யப்பட்டதாகக் காணப்படும். நான் உரைக்கும் பிரசங்கங்களில், சொன்னவைகளை திரும்பச் சொல்லி விளக்குவதில் நிறைய நேரம் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் எழுதப்படும் புத்தகத்தில் அவையெல்லாம் சரி செய்யப்பட்டு விடும். ஆனாலும் ஒலிநாடாக்களில் உள்ளவைகளில் இருந்து எவ்வளவு அதிகமாக எழுதப்படும் புத்தகத்தில் சேர்க்க முடியுமோ அவ்வளவாக சேர்க்க முயற்சிப்போம். 6இப்பொழுது ஒவ்வொரு இரவிலும் இக்கட்டிடத்தின் முகப்பில், வாலிபர் ஒலிநாடாக்களையும் புத்தகங்களையும் வைத்திருப்பர். இந்த ஏழு சபைக் காலங்களின் செய்திகளை அல்லது, ஏழு சபைக் காலங்களை, ஒவ்வொன்று வீதம் ஏழு இரவுகளில் தேவனுடைய மகிமைக்காக அளிக்க வேண்டு மென்று நாம் தீர்மானித்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு சபைக் கால செய்தியை கொடுத்துவிட ஒரு வேளை இயலாமற் போகலாம். நாம் ஒவ்வொரு இரவிலும் ஒரு சபைக் காலத்தை எடுத்துக் கொள்ளலாம். அதாவது, திங்கள் இரவில் எபேசு சபைக் காலத்தையும், செவ்வாய் இரவில் சிமிர்னாவையும், புதன் இரவில் பெர்கமுவையும், வியாழன் இரவில் தீயத்தீராவையும், வெள்ளி இரவில் சர்தையையும், சனி இரவில் பிலதெல்பியாவையும், ஞாயிறு காலை, ஞாயிறு இரவில், நாம் வாழும் லவோதிக்கேயா சபைக் காலத்தையும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆதிச் சபையின் வரலாற்றுப் பூர்வ காரியங்களையும், அதன் வரலாற்றையும், அவ் வரலாற்று ஆசிரியர்களைப் பற்றியும், ஒவ்வொரு சபையின் தூதன் யார் என்பதையும், அதனதற்குரிய செய்தியையும் நாம் பார்ப்பதோடு, சபையானது இந்தக் காலம் வரையிலும் எவ்வாறு காலங்கள் தோறும் வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் குறித்து நாம் பார்க்கலாம். வேத வாக்கியங்களிலுள்ள முன்னுரைத்தல் ஒவ்வொன்றும் எவ்வாறு மிகச் சரியாக வரலாற்றோடு அமைந் திருக்கிறது என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அதைப் பற்றிய நினைவே... அவைகளை நான் படித்த போது நேற்று வரையிலும் என் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. 7நான் எனது படிக்கும் அறையிலிருந்து வெளியே வந்தபோது என் மனைவியிடம், “இவ்வாறான வகையில் காரியங்கள் இருந் திருக்கும் என்று நான் கனவு கூட காணவில்லை. இது எத்தனை மகத்துவமானதாக இருக்கிறது என்று பார்'' என்று கூறினேன். மேலும் இப்பொழுது, ஒவ்வொரு சபைக்குரிய செய்தியை ஒரே இரவில் நான் அளிக்க இயலாமற் போகலாம். அவ்வாறு ஒவ்வொரு இரவிலும் அந்தந்த சபைக்குரிய செய்தியை பூர்த்தியாக அளிக்க இயலாமற்போனால், அடுத்த நாள் காலை 10 மணிக்கு மீதியை அளிக்கலாம். எனவே, இவ்வாறு இரவில் கொடுத்த செய்தியின் தொடர்ச்சியான மீதமுள்ள செய்தியை அடுத்த நாள் காலையில் கொடுக்கும் போது, வந்து கேட்க விருப்பமுள்ளவர் களுக்காக ஒவ்வொரு இரவிலும் அதற்கான அறிவிப்பு கொடுக் கப்படும். ஏனெனில் நாம் இச்செய்தியை ஒலிநாடாவில் முழு வதும் பதிவு செய்யப் போகிறோம். எனவே, இரவில் கொடுத்த செய்தி முற்றுப் பெறாத போது மீதியை அடுத்த நாள் காலையில் கொடுப்பதற்காக, காலை 10 மணி முதல் பிற்பகல் வரையிலும் ஆராதனை இருக்கும். அப்பொழுது செய்தியை ஒலி நாடாவில் பதிவு செய்து கொள்ளலாம். 8வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை கருத்தாய் ஊன்றி கற்க நாம் முயன்று கொண்டிருக்கிறபடியால், இவ்விசேஷித்த கூட்டங்களின் நாட்களில் நமக்கு சுகமளித்தல் ஆராதனைகள் இருக்காது என்று நாம் அறிவிப்பு செய்து விட்டோம். சமீபத்தில் தான், நமக்கு சுகமளித்தல் ஆராதனை உண்டாயிருந்தது. எனவே, இவ்விசேஷித்த கூட்டங்கள் முடிந்த பிறகு மீண்டுமாக இங்கே சுகமளிக்கும் கூட்டங்களை நாம் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் நான் இப்பொழுது, நீங்கள் நினைவில் கொண்டிருக்கத்தக்கதாக, ஒன்றை மிகவும் தெளிவாக சொல்லப் போகிறேன். இச்செய்தியானது, அது அளிக்கப்படுகையில், ஒரு வேளை உங்களை வெட்டலாம், உலுக்கலாம், அல்லது பெரிதாக அசைக்கக்கூடும். ஆனால் வசனத்தை பிரசங்கிப்பதைத் தவிர வேறு எதற்கும் நான் பொறுப்பாளி அல்ல. அவ்வளவுதான்வார்த்தையை சரியாக அப்படியே பற்றிக் கொண்டிருப்பதைத் தான் நான் செய்கிறேன். அநேக சமயங்களில் இந்த சபைக் காலங்களில் சம்பவித்தவைகள், யாரோ ஒருவரின் ஸ்தாபனத்தில் நடப்பவைகளுக்கு மாறாக இருக்கக் கூடும். அப்படி இருக்கு மானால் அதை கடுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வேத வாக்கியங்கள் உரைப்பதென்னவோ அதையும் அதைக் குறித்து எனக்குண்டாயிருக்கும் வெளிப்பாடு இவற்றை அது எடுத்துரைப் பதுவே ஆகும். அதில் நான் தவறாக இருக்கிறேன் என்று நீங்கள் கருதினால், அப்பொழுது அதை எனக்கெதிராக விரோதம் பாராட் டாமல், தேவன் சரியானது எது என்பதை எனக்குக் காண்பிக்க எனக்காக ஜெபியுங்கள், ஏனெனில் நான் சரியாகவே இருக்க விரும்புகிறேன். 9பிறகு பிறிதொரு விஷயம் என்னவெனில், மக்களுக்கு போதிக்கும் இவ்வாறான கூட்டங்களில் நான் இப்பீடத்திலிருந்து உரைக்கும் வார்த்தைகளுக்கு பரிசுத்த ஆவியானவர் என்னைப் பொறுப்பாளியாக்குவார் என்பதை நான் நன்கு உணர்ந்தேயுள் ளேன். எனவே எவ்வளவு பயபக்தியுடன் நாம் இதை அணுகு கிறோம் என்பதைப் பாருங்கள். இப்பொழுது நம்முடைய.... நான் இச்செய்தியை வேறு எங்காகிலும் இருந்து அளித்திருக்கலாம். ஆனால் இது உபதேசமாக இருப்பதால்தான் நமது சபையில் இதை அளிக்கிறோம். வெளியில் சுவிசேஷ கூட்டங்களில், நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு எண்ணங்களும், பகுத்தறிதலும் உள்ளன. காலங்கள் தோறும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. மேலும் நம் ஒவ்வொருவருக்கும் நமது சொந்த சபைகளும், அவைகள் என்ன போதிக்கின்றனவோ அவைகளை நாம் விசுவாசிப்பவர்களாகவும் இருக்கிறோம். இன்னொருவருடைய சபையில் போய், அவர்கள் வழி வழியாகப் போதிக்கப்பட்டவைகளுக்கு ஒத்துப் போகாத ஒன்றை அவர்கள் மத்தியில் போதிக்க நான் விரும்ப மாட்டேன். ஏனெனில், எனது அறிக்கைகளை தெளிவாக இருக்க செய்யவே நான் முயலுகிறேன். அதாவது, ஒரு கத்தோலிக்கனாக இருந்தால், தனது இரட்சிப்புக்காக கத்தோலிக்க சபையை சார்ந்திருந்தால் அவன் இழந்து போகப்படுவான். ஒருவன் பாப்டிஸ்டாக இருந்தால், பாப்டிஸ்டு சபையை தன் இரட்சிப்புக்காக சார்ந்திருந்தால் அவனும் இழந்து போகப்படுவான். ஒருவன் பெந்தெகொஸ்தே யினனாக இருந்தால், பெந்தெகொஸ்தே சபையை அவன் சார்ந்து கொண்டால், அவனுங்கூட இரட்சிப்பைக் கண்டு கொள்ள மாட்டான். ஆனால்.... எந்த சபையானாலும்.... ஆனால் அந்த தனிநபர் கல்வாரியில் கிறிஸ்துவானவர் செய்து முடித்த கிரியைகளின் பேரில் விசுவாசத்தினால் சார்ந்திருப்பாராயின், அவர் எந்த சபையைச் சார்ந்தவராயினும் எனக்கு அக்கறையில்லை, அந்த மனிதர் இரட்சிக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில், ''கிருபையினால் விசு வாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்...'' (எபே. 2:8). 10சில வேளைகளில், இதை பிரசங்கிக்கையில்... பின்பு நான் எனது சொந்த சிறிய இக்கட்டிடத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பாக காங்க்ரீட் ப்ளாக்குகளால் கட்டி ஆரம்பித்ததாகும். இதில் அமர்ந்து நான் சிந்திக்கையில், ஒரு விதத்தில் இது நமக்கு ஒரு பரிசுத்த ஸ்தலமாக இருக்கிறது. இக்கட்டிடத்தில் சரியானதொரு தளம் கூட இல்லாத சமயத்தில், தேவன் முதன் முதலாக சந்திக்க ஆரம்பித்தார். எனவே, ஒரு விதத்தில் இக்கட்டிட அமைப்பை மாற்றி அமைப்பதை நாம் விரும்பவில்லை. ஆனால், இக்கட்டிட மானது மிகவும் பழமையானதாக ஆகிவிட்டது. எனவே, ஒரு புதிய சபைக் கட்டிடம் இவ்விடத்தில் கட்டி எழுப்ப நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். நான் வெளியில் ஊழியக்களங்களில் சகோதரருக்கு மனம் புண்படாமலிருக்கவும், உபதேசங்களைக் கொடுக்காமலும் செய்வேன். ஆனால் வெளி ஊழியங்களிலிருந்து திரும்பி இந்த எனது சபையில் வந்து இந்த பிரசங்க பீடத்தில் நான் நிற்கையில், எனது சொந்த கருத்தை வெளியிட எனக்கு உரிமை உள்ளது. எனவே, ''நான் சிறிது வித்தியாசமாக போதிக்கப்பட்டிருக் கிறேன்'' என்று நீங்கள் கூறினால்... நான் கூறுவேன்... இங்கே வர விரும்பும் எவரையும் வாருங்கள் என்று நாம் வரவேற்கிறோம். வேறு யாரும் இக்கூட்டங்களை நமக்காக ஏற்படுத்தித் தரவில்லை. இங்கே நமது கூடாரத்தில் இது பிரசங்கிக்கப்படுகிறது. வர விரும்புவோர் எவரையும் வாரீர் என்று வரவேற்கிறோம். வாருங்கள். ஒவ்வொரு கூட்டங்களுக்கு வரும்போதும், உங்கள் வேதாகமத்தையும், பென்சிலையும், தாளையும் கொண்டு வாருங்கள். 11இப்பொழுது, இங்கே நான் மேற்கோள் காட்ட விரும்பும் வியாக்கியானப் புத்தகங்களையும், மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் இங்கே கொண்டு வர இயலாது. எனவே, நான் இங்குள்ள இத்தாளில், அவ்வரலாற்று நூல்களிலிருந்தும், வியாக்கியானப் புத்தகங்களிலிருந்தும் சிறு குறிப்புகளை வரைந் துள்ளேன். அதனால், இப்புத்தகங்களையே இங்கு கொண்டு வந்து அதின் பக்கங்களை திருப்பி வாசிப்பதற்குப் பதிலாக இச்சிறு குறிப்புகளிலிருந்து நான் தேவையான போது உங்களுக்கு வாசித்துக் காட்டலாம். ஆயினும், வேத வாக்கியங்கள் பற்றிய இடம் வரும்போது, அதற்காக நாம் நமது வேதாகமத்தையே உப யோகித்துக் கொள்வோம். வியாக்கியானப் புத்தகம், மற்றும் வரலாறு, வரலாற்று ஆசிரியன் யார் என்பதைப் பற்றி தேவை யான போது நான் விளக்கிக் கூறுவேன். பிறகு, நாம் எழுத நினைத்துள்ள அப்புத்தகத்தைப் பற்றியோவெனில், எல்லாம் சரியாக செய்யப்படத்தக்கதாக, நாம் அவை யாவையும் தட்டச்சு செய்து கொள்வோம். 12சீக்கிரமாய் கூட்டங்களை தொடங்கி சீக்கிரமாய் முடித்து மக்களை அனுப்பிவிட, எங்களால் ஆனதனைத்தையும் செய்வோம். இக் கூட்டங்கள் ஞாயிறு தொடங்கி, அடுத்த ஞாயிறு முடிய, மொத்தம் எட்டு நாட்கள் நடைபெறப்போகிறது. இக்காலையில் நான் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் முதலாம் அதிகாரத்தை ஆரம்பிக்கப் போகிறேன். இவ்வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் மூன்று பாகங்களாக அமைந்துள்ளது. இந்த எட்டு நாட்கள் கூட்டங்களில் முதல் மூன்று அதிகாரங்களைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். ஆனால் ஒரு சபைக் காலத்தைப் பற்றிய செய்தியோ நமக்கு ஒரு மாத காலம் பிடிக்கும். ஆனால் நாமோ, அவற்றில் உள்ள பிரதானமான விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். பிறகு, இச்செய்தி புத்தகமாக எழுதித் தயாரிக்கப்பட்டு வரும்போது அதில் இன்னும் விரிவாக கூறப் பட்டிருக்கும் (தீர்க்கதரிசி “ஏழு சபை காலங்களின் வியாக்கி யானம்'' என்ற புத்தகத்தைப் பற்றி கூறுகிறார் - மொழி பெயர்ப்பாளர்). 13இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் சபையைப் பற்றியே கூறுகின்றன. பின்பு, சபை யானது மறைந்து விடுகிறது. அதை கடைசி வேளை வரையிலும் காண முடிவதில்லை. வெளிப்படுத்தல் 1 முதல் 3 முடிய சபையைப் பற்றியது. வெளிப்படுத்தின விசேஷம் 4 முதல் 19 முடிய இஸ்ரவேல் என்ற ஜாதி முழுமையைப் பற்றியதாகும். பிறகு 19ம் அதிகாரம் முதல் 22 முடிய இரண்டையும் பற்றி பார்க்கிறோம். அதன் பிறகு வாதைகள் மற்றும் எச்சரிக்கைகள் முடிவாகப் பார்க்கிறோம். மூன்று பாகங்களாக அமைந்துள்ளதைப் பாருங்கள். சபையைப் பற்றியும், நாம் வாழும் சபைக் காலத்தையும் பற்றி உரைக்கிற முதல் மூன்று அதிகாரங்களையும் நாம் எடுத்துக் கொள்கிறோம். முதலில் இது ஒரு விதத்தில் ஏதோ வறட்சியாக காணப் படலாம். ஏனெனில், கடந்த காலத்திற்குள் நாம் திரும்பிச் சென்று ஒரு அஸ்திபாரத்தை நாம் அமைத்துக் கொள்ளுதல் அவசியமா யிருக்கிறது. மக்கள் இச்செய்தியை கண்டு கொள்ளத்தக்கதான முறையில் அவர்கள் மத்தியில் அதை அளிப்பதற்காக வேண்டி, பரிசுத்த ஆவியானவரின் அசைவைப் பெற்றுக் கொள்ளவும், நான் வேதத்தைப் படித்தும், ஜெபிக்கவும் செய்துள்ளேன். இச் செய்தியை நீங்கள் கண்டு கொண்டீர்களாயின், அப்பொழுது, உங்கள் மனக்கண்கள் பிரகாசிக்கப்பட்டு, கிறிஸ்துவண்டை நெருங்கி வர முடியும். ஏனெனில் நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். 14வரலாற்று நூல்களை நான் படித்துக் கொண்டிருக்கையில், சபையானது எவ்வாறு துவங்கியது, எவ்வாறு பின்னுக்கு தள்ளப்பட்டது, பின்பு என்ன நடந்தது, எவ்வாறு அந்த சிறிய தேவனுடைய வித்தானது அந்த ஒவ்வொரு காலங்கள் தோறும் கடந்து வந்து ஒரு கட்டத்தில் சற்று ஏறக்குறைய அது மறைந்தது போல் காணப்படுகிறது; ஆகிய இவ்விஷயங்களைப் பார்க்க அது அத்துணை பிரமிக்கத்தக்கதாக உள்ளது. நாளை இரவு கரும்பலகையைக் கொண்டு வந்து அதில் எழுதி விளக்கி போதிக்க விரும்புகிறேன். ஞாயிறு பள்ளி ஆசிரியர் வசம் ஒரு கரும்பலகை உள்ளது என்று நம்புகிறேன். நான் அதை பின் பக்கத்தில் பார்க்கிறேன். கட்டிட காப்போனை அக் கரும் பலகையை இங்கு கொண்டு வந்து முன்னால் வைத்திடுமாறு செய்யப் போகிறேன். அதில் நான் விளக்க வேண்டியவைகளை வரைந்தால், நீங்கள் அதைப் பற்றி சரியாக புரிந்து கொண்டு, அவைகளை நீங்களும் உங்கள் தாள்களில் வரைந்து கொண்டு அதை மிகவும் நன்றாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். 15ஆனால், துவங்கும் முன்னர், இதை நான் கூற விரும்புகிறேன். சபைக் காலத்தின் துவக்கத்தைப் பார்க்கவும், அப்போஸ்தலர்கள் உபதேசம் எவ்வாறு இருந்தது, வேதத்தின் அடிப்படை எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றி அறியலாம். பின்பு, இரண்டாவது கட்டத்தில் அப்போஸ்தலர்களையும், சபையையும், அது எவ்வாறு இறுதியில் மங்கிப் போனது என்பதை (உண்மையான சரியான உபதேசம்) அறியலாம். மூன்றாவது சுற்றில், சபையானது எவ்வாறு இன்னும் விலகிச் சென்றது, நான்காவது சுற்றில், சபையானது, வெதுவெதுப் பானதாக அது முடிவாக மங்கிப் போனது எவ்வாறு என்பதையும் பார்க்கலாம். சபையானது இறுதியில் ஒரு வெதுவெதுப்பான சபையைக் கொண்டு வந்தது. அதன் பிறகு ஆவியால் நிரப்பப்பட்ட சபையானது... (இதை நான் ஒவ்வொரு மனிதனின் தெய்வ நம்பிக்கைக்குமுரிய தேவதா மரியாதையுடன் கூறுகிறேன்) ஆரம்ப முதல் இக்காலம் வரை, உண்மையான, அந்த சபையானது, பெந்தெகொஸ்தே சபையாகவே இருந்து வந்துள்ளது. அது உண்மைதான். தேவன் இந்த சபையை காத்தே வந்திருக்கிறார். 16''பயப்படாதே, சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்'' என்று இயேசு கூறினதைப் பற்றி நான் அடிக்கடி வியந்ததுண்டு. ஏன் இயேசு இவ்வாறு கூறினார் என்பதைப் பற்றி நான் வியந்த துண்டு. ஆனால் இப்பொழுது அதை நான் புரிந்து கொண்டேன். கடந்த வாரத்தில், லூயிஸியானாவிலுள்ள ஷ்ரீவ் போர்ட்டில் என் வாழ்விலேயே கண்டிராத மகத்தான ஆவிக்குரிய கூட்டம் நமக்கு உண்டாயிருந்தது. எனக்கு கிடைத்த இரண்டு நாட்கள் விடுமுறையின் போது, நான் நமது சபையின் உதவிக்காரர்களில் ஒருவரான அல்லது டிரஸ்ட்டிகளில் ஒருவராகிய சகோதரன் உட் அவர்களுடன் கென்டக்கி ஊருக்கு வேட்டைக்காக சென்றிருந்தேன். நாங்கள் காடுகளுக்குள் சென்றோம். நான் முதல் அணிலைச் சுட்டேன். யாரோ ஒருவர் நாய் களுடன் வந்ததால், அணில்கள் மரப்பொந்துகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டதால், அவைகள் மீண்டும் பொந்துகளுக்குள் இருந்து வெளியே வரும்வரை காத்திருப்பேன் என்று கூறினேன். அப்பொழுது கடுங்குளிரும், உறைபனியுமாக இருந்தது, அதினால் தான் காதுகள் எரிச்சலெடுத்தன. சிறு பள்ளத்தாக்குகளின் வழி யாக தீவிரமான குளிர்காற்றுகள் வீசுவதை நீங்கள் அறிவீர்கள். “அணில்கள் மீண்டும் வெளியே வரும் வரை காத்திருப்பேன்'' என்றேன். 17இவ்வாறு நான் அங்கு எண்ணிக் கொண்டு சற்று உட்காரு வதற்குள், பரிசுத்த ஆவியானவர், என்னிடம், 'எழுந்து, வேட்டைக்காரன் குகை (Sportman's Hollow) என நீ குறிப் பிடும் இடத்திற்கு போ, நான் அங்கே உன்னுடன் பேசுவேன்'' என்றார். “வேட்டைக்காரன் குகை'' என நான் பெயரிட்டுள்ள அவ் விடத்திற்கு ஆவியானவர் கூறியபடி எழுந்து சென்றேன். நான் இவ்வாறு அக்குகைக்கு பெயரிட்டதின் காரணம் என்னவெனில், நான் இருந்த இடம் இன்ன இடம் என்று குறிப்பிட்டு அறிந்து கொள்ளும்படியாகத்தான். ”வேட்டைக்காரன் குகை'' என்பதின் காரணம் என்னவெனில், அவைகள் அங்கே... நான் அந்த இடத் திற்குச் சென்றபோது, அங்கே பதினாறு அணில்கள் ஒரு மரத்தின் மேல் இருக்கக் கண்டேன். அவைகளில் எனக்குத் தேவையான வைகளை மட்டுமே சுட்டுவிட்டு மீதமுள்ளவைகளை சுடாமல் அவைகள் தப்பித்துப் போக விட்டு விட்டேன். (வேட்டை என்பது இதுதான்), எனவே தான் அவ்விடத்தை “வேட்டைக் காரன் குகை'' என்று அழைத்தேன். அவ்விடத்தைப் பற்றி குறிப்பிடுகையில், கர்த்தர், “நீ வேட்டைக்காரன் குகை என்று அழைப்பாயே'' என்று தான் கூறினார். அவர் அவ்வாறு அவ்விடத்திற்கு பெயரிடவில்லை, நான் தான் அவ்வாறு அவ்விடத்தை அந்தப் பெயர் சொல்லி அழைத் தேன். பின்பு, நான் அந்த குகையின் வாயில் வரை சென்று, அங்குள்ள ஓர் 'ஓக்' மரத்தின் கீழ் அமர்ந்தேன். அங்கே அரை மணி நேரம் காத்திருந்தேன், ஒன்றும் சம்பவிக்கவில்லை. நான் என் உடலை நெடுஞ்சாண்கிடையாக தரையில் கிடத்தி கைகளை நீட்டிக் கொண்டேன். அப்பொழுது ஆவியானவர் என்னிடம் பேசினார். 18அவர் பேசிய போது, இன்று காலையில் இங்கு நாம் படிக்கப் போகிற இவ் வேதவாக்கியங்களை எனக்கு வெளிப்படுத்தித் தந்தார். என் வாழ்நாள் முழுவதிலும் நான் கண்டிராத வண்ணம் அது இருந்தது. அதன் பிறகு, நான் லூயிஸியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட் என்ற இடத்திற்கு சென்றேன். அங்கே வரம் பெற்ற ஒரு பெண் மணி உள்ளார்கள். அவர்கள் பெயர் திருமதி. ஷ்ரேடர் என்ப தாகும். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, கர்த்தருடைய தூதன் என்னை அந்த நதிக்கரையில் முதன்முதலாக சந்தித்து, அவ்வொளியில் தோன்றிய பொழுது, அவர் பேசிய அதே வார்த்தைகளை, பதினொரு ஆண்டுகளுக்கு பின்பு, ஒரு கூட்டம் நடக்கும் இடத்திற்கு நான் நுழைந்தபோது, அந்த சிறிய பெண்மணி எழும்பி, அந்நிய பாஷையில் பேசி, வியாக்கி யானித்து, தூதன் கூறிய அதே விஷயங்களை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உரைத்தாள். மேற்சொன்ன அதே பெண்மணி, ஷ்ரீவ் போர்டிலுள்ள லைஃப் கூடாரத்திற்குள்... நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு நான் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் தன் மேல் வரப்பெற்று, மலையின் மேல் ஆண்டவர் கூறிய அதே வார்த்தைகளை வார்த் தைக்கு வார்த்தை அப்படியே ஆவியினால் நிறைந்து பேசினாள். பிறகு ஆவியானவர், அசைவாட ஆரம்பித்து, வியாக்கியானம் செய்து, வெளிப்படுத்துதலினால் நடைபெறப் போகிறவைகளை தீர்க்கதரிசனத்தினால் முன்னுரைத்தார். அவ்வாறு முன்னுரைத்த வைகள், அடுத்து நாளிரவில் நடைபெறும் கூட்டத்தில் சம்பவிக் கப் போகிறவைகளைப் பற்றியதாக இருந்தது. ஒரு தடவை கூட அது நிறைவேறாமல் போனதில்லை. 19இச்சம்பவத்திற்கு முன்பு, நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஓர் இளம் பெண்மணி, செய்வதறியாது எழுந்து நின்றாள். கூட்டத்தினர் நடுவில் அவள் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவள் மேல் இறங்கி, அதனால் அவள் அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தாள். அப் பெண்மணி, ஷ்ரீவ்போர்ட்டிலுள்ள முதல் பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்தவள். தான் என்ன செய்தோம் என்பதை அறியாமல் திகைத்தவளாக நின்று கொண்டிருந்தாள். அவள் அவ்வாறு அந்நிய பாஷையில் தன்னையறியாமல் பேசி முடித்த பிறகு, அவள் வேறெதுவும் பேசும் முன்பாக, பரிசுத்த ஆவியானவர் அவள் அந்நிய பாஷையில் பேசியவைகளின் அர்த்தத்தை, பாஷையை வியாக்கியானித்துத் தந்தார். “கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இன்னும் மூன்று மாதத்திற்குள், இந்தக் கூடாரத்தில், மோசேயின் ஆவியும், எலியாவின் ஆவியும், கிறிஸ்துவின் ஆவியும், ஊழியத்தை நிறைவேற்றும்'' என்பது தான் அப் பெண்மணி அந்நிய பாஷையில் பேசியவைகளின் வியாக்கியானமாயிருந்தது. உரைக்கப்பட்ட அவ்வார்த்தைகளின்படியே முழுவதும் நிறைவேறிற்று. 20IRRப்பியிலுள்ள மெரிடியன் என்ற ஊரில் ஒரு பாப்டிஸ்டு மனிதர், தனது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எதையோ எடுக்க வேண்டி, அக்குளிர் சாதனப் பெட்டியின் மேல் கை வைத்தபோது, தேவ ஆவியானவர் அவர் மேல்வந்து, அவர் தன்னையறியாமல் அந்நிய பாஷையில் பேசினார். தான் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறிந்து கொள்ளும் முன்னர், பரிசுத்த ஆவியானவர் அவரிடம், ''லூயிஸியானாவிலுள்ள ஷ்ரீவ் போர்ட்டுக்கு போ, என் ஊழியக்காரன் நீ என்ன செய்ய வேண்டு மென்பதை உனக்கு உரைப்பான்'' என்று கூறினார். அவர் இங்கே வந்து, “இது என்னவென்று நான் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபோல் இதற்கு முன் சம்பவித்ததே யில்லை'' என்று கூறினார். ஓ, நாம் கர்த்தரின் வருகைக்கு சமீபமாக கடைசிக் காலத் தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெந்தெகொஸ்தே அனுபவத்தையுடைய அச்சிறிய சபை எப்பொழுதும் சிறுபான்மையாகவே இருந்து வந்துள்ளது. ஸ்தாபன ரீதியிலான பெந்தெகொஸ்தே சபையைக் குறித்து நான் குறிப்பிடவில்லை. அதை நான் குறிப்பிடவில்லை. ஆனால் பெந் தெகொஸ்தேயின் அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பற்றியே நான் குறிப்பிடுகிறேன். பெந்தெகொஸ்தே என்பது ஒரு ஸ்தாபனமல்ல. அது விரும்பும் எவருக்கும் கிடைக்கும் ஓர் உன்னத அனுபவ மாகும். அது, கத்தோலிக்கனோ, அல்லது யூதனோ, அல்லது பிராடெஸ்டெண்டு, மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு மற்றும் இன்ன பிறவற்றைச் சேர்ந்த எவனாகிலும் எவன் அதைப் பெற்றுக் கொள்ள விரும்பியுள்ளானோ, அவனை வா என்று அழைப்பதாக உள்ளது. அவ்வனுபவம் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் உரியது. தேவன் ஒருபோதும் ஒரு மத ஸ்தாபனத்தோடு இடைபடுவதில்லை, அல்லது புறஜாதியாரோடு ஓர் இனம் என்ற ரீதியில் ஒட்டு மொத்தமாகவும் அவர்களோடு கிரியை புரிவதில்லை. அவர் தனிப்பட்ட ஒவ்வொரு நபருடனும் இடைபடுகிறார். “எவன் வாஞ்சையாயிருக்கிறானோ'', அவன் வெள்ளையனாக இருக்கலாம், அல்லது கருப்பனாகவோ, அல்லது மஞ்சள் நிறத்தவனாகவோ, அல்லது பழுப்பு நிறத்தவனாகவோ இருக்கலாம். மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, ப்ராடெஸ்டெண்ட், கத்தோலிக்கர் இவர்களில் எவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவன் எதுவாக இருந் தாலும் சரி, ''எவன் விருப்பமாயுள்ளானோ அவன் வரட்டும்'' என்றே அழைக்கிறார். ஆண்டவர் இவ்வாறு ஏற்படுத்தியமைக் காக நான் மகிழ்ச்சியடைகிறேன். 21ஒரு தடவை ஒரு மனிதர் கூறிய வண்ணமாக, “வில்லியம் பிரன்ஹாம் வரட்டும்'' என்று என் பெயரை சொல்லி அழைக் கப்படுவதற்குப் பதிலாக ''விருப்பமுள்ளவன் எவனோ'' என்பதாகவே அவரது அழைப்பு உள்ளது. அவ்வாறு உரைக்கப் பட்டதால், அது என்னையும் குறிக்கிறது என்று நான் அறிவேன். ஏனெனில் வில்லியம் பிரன்ஹாம் வரட்டும்'' என்று ஆண்டவர் அழைத்தால், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பல வில்லியம் பிரன்ஹாம்கள் இருக்கக் கூடும். எனவே அவ்வண்ணமாகவே நாமும் கருதலாம். “எவன் விருப்பமாயுள்ளானோ அவன் வரட்டும்.'' 22உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ள அநேக மக்கள் இங்கு விடுதிகளிலும் ஓட்டல்களிலும் என்னைச் சந்திப் பதற்காக நேர்காணல் வேண்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நான் அறிவேன். அயர்லாந்து மற்றும் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து வந்து இந்த நேர்காணலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்காக என் நேரத்தை ஒதுக்க தற்போது இயலாது உள்ளது. நான் இந்த மகத்தான செய்திக்கே எனது நேரத்தையெல்லாம் ஒதுக்க விரும்புகிறேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள். நான் எனது ஊழியப் பயணங்களிலிருந்து திரும்பி வருகையில், இந்த நேர்காணல்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக் கிறபடியால், யாருக்காவது ஊழியம் செய்ய வேண்டி நான் இங்கு திரும்பி வருவது வழக்கம். ஆனால் இப்பொழுதோ, இம் மகத்தான செய்தி பிரசங்கிக்கப்படுவதற்காக, அவர்களை போக விட வேண்டியதுதான். இப்புத்தகத்திலிருந்து பிரசங்கிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒரு காரியத்தை கூற நான் விரும்புகிறேன். ஆதியில் சபையானது பெந்தெகொஸ்தேயாக இருந்தது. அந்த பெந்தெகொஸ்தே அனு பவத்தை பெற்ற சபையானது பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிரியை செய்து, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதிற்று. இரண்டாவது கட்டத்தில் (அல்லது சுற்றில்) சபையானது நலிவடைய ஆரம்பித்து பெலனற்ற வெறும் சம்பிரதாய ரீதியிலானதாக ஆரம்பித்தது. இரண்டாவது சபைக் காலமானது பெலனற்ற சம்பிரதாயங்களைப் பின்பற்றக் கூடியதாக மாறி விட்டது. ஆயினும், அச்சிறிய தேவனுடைய வித்தானது, பெந்தெகொஸ்தே அனுபவத்தை இழக்காமல் ஆவிக்குள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதன்பிறகு, சபையானது இருளின் காலங் களுக்குள் பிரவேசித்தது. அவ்விருள் காலம் உபத்திரவம் நிறைந் ததாக சுமார் 1400 ஆண்டுகளுக்கு நீடித்தது. அப்படிப்பட்ட இருள் காலத்திலும் கூட அந்த பெந்தெகொஸ்தே அனுபவத்துடன் கூடிய தேவ வித்தானது தொடர்ந்து ஜீவித்து வந்தது. அவ்வித கொடிய காலத்தினூடே எவ்வாறு அவ்வித்து பிழைத்து இருந்தது என்று என்னை கேட்டு விடாதீர்கள். தேவனுடைய கரம்தான் அவ்வாறு அவ்வித்து பிழைத்திருக்கச் செய்தது. அதுதான் அவ்வாறு செய்திருக்க வேண்டும். 23ஏனெனில், அவர்களை கம்பங்களில் கட்டிப் போட்டார்கள். கூர்மையான அடி மரங்களில் அவர்களைத் தூக்கிப் போட்டு, அவர்கள் கால்களில் கூர்மையான ஆப்புகளை கடாவி, அவர்களின் பின்புறமாக இருந்து மிருகம் (நாய்கள்) அவர்களைக் கடித்திழுத்து அவர்களுடைய குடல்களை வெளியே இழுத்து, அவர்கள் மரிக்கு முன்பாகவே, அவர்களை தின்று விடும்படி செய்தனர். பெண்களின் வலது மார்பகத்தை அறுத்து, உயிர் பிரியும் வரை அவர்களை இரத்தம் வடியும்படி நிற்க வைத்தார்கள். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுக்களை வெளியே எடுத்து அவற்றை அவர்கள் கண்கள் முன்பாகவே காட்டுப் பன்றிகளுக்கு இரையாக கொடுத்தார்கள். அப்படிச் செய்வதுவே கிறிஸ்தவமாக கருதப் பட்டது. ஆனால் வேதமோ, இயேசு கூறினார், ''உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்'' பார்த்தீர்களா? இவ்வாறு அக்காரியமானது ஊர்ந்து அடுத்த சபைக் காலத் திற்கும் வந்தது. பின்பு இறுதியாக அது வெளியே வந்தது. அதன் பிறகு, சபையானது சீர்திருத்தக் காலத்திற்குள் வந்து, அதன் பின்பு, மேலும் மேலும் ஆவியானவரை விட்டு வழுவிப் போய்க் கொண்டே இருந்து, அது இக்கடைசிக் காலத்திலும் வந்து, இப் பொழுது, அது மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கும் கட்டத்திற்கு ஆயத்தமாக தன்னை ஒருமுகப்படுத்திக் கொண்டுள் ளது. ஆனால் இயேசு வரும் வரையிலும் அந்த மகத்தான ஆவியானவர் அவரது ஜனங்களின் உள்ளங்களில் ஜீவித்துக் கொண்டேயிருப்பார். அது அவ்வாறுதான் இருக்க வேண்டும். 24காரியமானது அவ்வாறே உள்ளது என்பதை சரித்திரம் மற்றும் அனைத்துக் காரியங்களிலிருந்தும் உங்களுக்கு நிரூபிக்க முடியும். வரலாறு என்ன கூறுகிறது என்பதையும், வேதம் என்ன கூறுகிறது என்பதையும் ஒரு சேர எடுத்துப் படித்துப் பாருங்கள், அப்பொழுது அவைகள் எவ்வளவு சரியாக பொருந்துகிறது என் பதைக் காண்பீர்கள். ஓ! இதை வெறும் ஒரு சொற்பொழிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நாம் பயபக்தியுடன் பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் எச்சரிக்கைகளை எடுத்துக்கொண்டு, இரவும் பகலும் ஜெபிப் போமாக. ஜெபிக்கிறதிலிருந்து எந்தவொன்றும் உங்களை தடை செய்ய வேண்டாம். 25நாம் இவைகளை ஆராயும் போது, அந்த மகத்தான தேவ மனிதர்களின் வாழ்க்கைகளைத் தோண்டிப் பார்க்கையில், அவர்கள் எவ்வாறு தியாகம் செய்தார்கள் என்பதை காணலாம். அப்பொழுது நீங்கள் எவ்வாறு ஒன்றுமே செய்யவில்லை என்பதை உணருவீர்கள். சில சமயங்களில் இதைக் குறித்து நான் சிந்திக்கையில், நான் என்னைக் குறித்து, நமக்கு எப்படி எல்லாம் சுலபமாக உள்ளது, அவர்களுக்கோ எப்படி எல்லாம் மிகவும் கடினமாக இருந்தது என்று எண்ணி வெட்கப்படுவதுண்டு. எபிரேயர் 11ம் அதிகாரத்தில் பவுல், ''... செம்மறியாட்டுத் தோல் களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனு பவித்தார்கள்'' என்று கூறினான். அவர்களுடைய சாட்சியை விட நமது சாட்சி எந்த விதத்தில் மிஞ்சி நிற்கப் போகிறது? நமக்கோ எல்லாம் அருமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த மகத்தான புத்தகத்தைத் திறக்கும் முன்பு, மரியாதை யினிமித்தம் நாம், எழுந்து நிற்க இயன்றவர்கள் யாவரும் சற்று நேரம் ஜெபத்திற்காக எழுந்து நிற்போமாக. இப்பொழுது, உங்கள் இருதயத்தில் உத்தமத்துடன், தேவனை நோக்கி ஜெபத்தை ஏறெடுங்கள். தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும், பூமியையும் உண்டாக்கினவரே. நித்திய ஜீவனின் ஊற்றே, நன்மையும் பரிபூரண மான எல்லா ஈவுகளையும் அளிப்பவரே, உமக்கெதிராகவும், எங்கள் உடன் சகோதரருக்குள்ளே ஒருவருக்கொருவர் எதிராகவும் நாங்கள் செய்துள்ள பாவங்களையும், மீறுதல்களையும், வேற்றுமை களையும் எங்களுக்கு மன்னித்தருளும். 26இவ்விதமாக நாங்கள் கூடி வந்திருத்தலான இவ்வேளை யானது எங்களுடைய ஆத்துமாக்கள் பக்தி விருத்தியடைவதற்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்கு நாங்கள் சென்று இவற்றை கூறுவதற் கேதுவாக, எங்கள் இருதயங்களை அந்த விதத்தில் பிரகாசிப்பித்து, உத்வேகமளித்தருளும். கிறிஸ்துவின் முழு சரீரத்தோடு எங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்காக, எங்களை மறு பிரதிஷ்டை செய்து கொள்ளத்தக்கதாக ஒரு வேளையாக இது அமையட்டும். மேலும் அது எங்களை எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக ஆயத்தம் உள்ள வர்களாக ஆக்கட்டும். பிதாவாகிய தேவனே, எனது சொந்தக் கருத்துக்களின் படியல்ல, உம்முடைய ஊழியக்காரனாகிய நானும், மற்றுமுள்ள ஏனைய தேவ ஊழியக்காரர்களாகிய நாங்கள் அனைவரும், இந்த மகத்தான வேலைக்காக போதுமானவர்கள் அல்ல என்று அறிந் திருக்கிறோம். கடந்த காலங்களில் எவ்வளவு மகத்தான தேவ மனிதர்கள் தோன்றி மறைந்தார்கள். அவர்கள் இந்த மகத்தான வார்த்தையை வெளிப்படுத்தவும், வெளிப்படுத்தின விசேஷத்தை வியாக்கியானிக்கவும் முயன்றார்கள் என்பதை அறிகிறோம். அதன் பிறகு, நாங்கள் அவர்களை விட எத்துணை அதிகமாக தகுதிக் குறை வானவர்கள் என்பதையும் உணருகிறோம். ஆனால் நீரே எங்களுடைய நிறைவாக இருக்கிறீர். பரம பிதாவே, நான் வேண்டுகிறேன், நீர் இவ்வேளையில் விசேஷித்ததொன்றை செய்வீர் எனவும், ஒவ்வொரு இருதயத் திலும் பரிசுத்த ஆவியானவர் முதன்மை வகித்து சிறப்பான இடம் பெற்று, பேசுகிற உதடுகளை நீர் விருத்தசேதனம் செய்யவும் கேட்கிற செவிகளை விருத்தசேதனம் செய்யவும் வேண்டுகிறேன். இவை யாவும் முற்றுப் பெறுகையில், அதை நாங்கள் உமக்கே அர்ப்பணம் செய்கிறோம். இக்கூடாரத்தை விட்டு நாங்கள் புறப் பட்டுச் செல்லுகையில், ''அங்கே நாம் சென்றது நமக்கு நலமா யிருந்தது, பரிசுத்த ஆவியானவர் நாம் அங்கே அமர்ந்திருக்கை யில் நம்மோடு பேசினார்; இப்பொழுது சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கையில் நாம் நம்மால் இயன்ற அளவு யாவற்றையும் அவருக்காக செய்திட தீர்மானித்துள்ளோம்'' எனக் கூறி கொண்டே கடந்து செல்ல அனுக்கிரகித்தருளும், கர்த்தாவே. 27இவ்வாராதனையின் போது, ஆண்களும் பெண்களும் புதி தான ஒரு பிடிப்பைப் பெறுவார்களாக. அந்நிய பாஷைகளை பேசுகிறவர்களையும், அவற்றை வியாக்கியானிக்கிறவர்களையும் எழுப்பும். தீர்க்கதரிசன வரங்களை அளித்தருளும். சபையானது பக்தி விருத்தியடையும்படி பிரசங்கிகளையும், போதகர்களையும், சுவிசேஷகர்களையும் எழுப்பும். தூரப் பிரதேசங்களிலெல்லாம் மகிமையான இச் சுவிசேஷத்தினைக் கொண்டு செல்லத்தக்கதாக மிஷனரிகளை எழுப்பும். இந்த வார்த்தை எங்கெல்லாம் செல்கிறதோ, அது அங்கே நல்ல நிலத்தில் விழுந்து நூறத்தனையாக பலன்களைக் கொண்டு வரட்டும். ஏனெனில் நாங்கள் காலத்தின் முடிவில் நிற்கிறோம். முடிவு நெருங்கிவிட்டது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இவைகளை எங்களுக்கு அளித்தருளும், பிதாவே. எல்லா வற்றுக்கும் மேலாக, கர்த்தாவே, இவ்வேளையில், தேவையுள்ள எனக்கு உதவியருளும். இவ்வாராதனைகளுக்காக நான் என்னையே உம்மிடம் ஒப்படைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். (ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறார்கள். ஒரு சகோதரன் அதற்கு வியாக்கியானம் செய்கிறார் - ஆசி) வல்லமையுள்ள தேவனே, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவரே, உம்முடைய ஆவியானவர் எமது நடுவில் வாசம் பண்ணுகிறார் என்பதை நாங்கள் அறிந்து அதினால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எப்பொழுதும் உண்மையுள்ள வராயிருக்கிறார். ஒருபோதும் பொய்யுரையாதவர். உம்முடைய மகிமைக்காக நாங்கள் உமது வார்த்தையை வாசிக்கையில், உம்முடைய வார்த்தையை இன்னும் உறுதிப்படுத்தும், பிதாவே. “மகத்தானதொன்று வரப்போகிறது, அதற்காக ஆயத்தப்பட்டு, தயாராயிருங்கள்'' என்று நீர் கூறினீரே, அதன்படி, ஒவ்வொரு இருதயமும் இருக்கட்டும். மக்கள் தாங்கள் இப்பொழுது செய்து கொண்டு வருகிற தவறான காரியங்களிலிருந்து திரும்பி, உண்மையான பாதைக்குத் திரும்பும்படி, அவர்கள் இப்பொழுது தங்களுக்குரிய கடைசி எச்சரிப்பை பெறுவதாக இவ்வேளை இருக்கக்கூடும். பரிசுத்த தேவனே, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஆமென். 28வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரத்திற்கு இப் பொழுது நாம் திருப்புவோம். இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் ஒன்று முதல் மூன்று முடிய உள்ள வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப் படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்; காலம் சமீபமாயிருக்கிறது“ வெளி. 1:1-3 29நான் முன்பே கூறிய வண்ணம், இப்பொழுது இந்தப் புத்தகத்தை, வரலாற்று ரீதியாக பகுத்தாய்வு செய்யப் போகிறோம். ஒவ்வொரு தடவையும் நான் இங்கு எழுதி வைத்துள்ள பக்கங் களிலிருந்து குறிப்புகளைக் காண்பிக்கும் போது, அவைகள், வியாக்கியானப் புத்தகங்களிலிருந்து (Commentaries) எடுத்தாளப் பட்டவைகள் என அறியலாம். இப்பொழுது, இப்புத்தகத்தை எழுதியவன் யோவான், திவ்ய வாசகனாகிய பரிசுத்த யோவான் ஆவான். எதிர்கால தலைமுறையினருக்கென்று எழுதினான். அப்போஸ்தலர் காலம் முதல் கர்த்தருடைய வருகை மட்டும் உள்ள ஏழு வெவ்வேறு கிறிஸ்தவ சபைக் காலங்களின் ஏழு வெவ்வேறு தூதர்களுக்கும் எழுதப்பட்டதாகும். கர்த்தர் பரத்திற்கு ஏறின நாள் முதல் அவர் திரும்பி வரும்வரை இந்த ஏழு சபைக் காலங்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சபைக் காலத்திற்குரிய அதனதன் ஆவிக்குரிய நிலைமை இதில் விவரிக்கப் பட்டுள்ளது. வேதமும் ஆவியானவரும் சபைகளுக்குப் பேசுவதன் மூலம், ஒவ்வொரு சபைக் காலமும் தன்னைத் தானே உற்று நோக்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு சபைக் காலமும் புத்தியுள்ள கன்னிகையாகிய கிறிஸ்துவின் மெய்யான திராட்சை செடியையும், புத்தியில்லாத கன்னியராகிய ஒட்ட வைக்கப் பட்ட திராட்சைச் செடியையும் தன்னகத்தே உடையதாகக் காணப் படுகிறது. யோவான் அப்போஸ்தலன் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் எபேசு பட்டணத்தில் வாழ்ந்தான் என்றும், அங்கேயே தான் அவன் மரித்தான் என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக் கொள்கின்றனர். வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை யோவான் எழுதுகையில், பத்மு என்னும் தீவில் இருந்தான். இப் புத்தகம் அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஒரு புத்தக மல்ல. எதிர் வரும் காலங்களில் உள்ள கிறிஸ்துவின் வரலாற்றைக் கூறுவதாகவே இது உள்ளது. அது ஒரு தீர்க்கதரிசனம் என்பதைப் பாருங்கள். இது யோவானின் வாழ்க்கை வரலாறு அல்ல, இது இயேசுவின் வாழ்க்கை வரலாறும் அல்ல, ஆனால் இது வரப் போகும் ஒரு காலத்தைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனமாகும். இது யோவானின் தீர்க்கதரிசன உரைத்தலல்ல. ஆனால் கர்த்தரை பயபக்தியோடு மேன்மைப்படுத்துதலாகும். இப்புத்தகம் திவ்ய வாசகனாகிய யோவானைப் பற்றிய வெளிப்படுத்துதல் அல்ல, ஆனால் இது கர்த்தராகிய கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்து தலாகும். 30இப்புத்தகம் புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தின் கடைசிப் புத்தகமாகும். ஆயினும், அது சுவிசேஷ யுகத்தின் துவக்கத்தை யும், முடிவையும் பற்றி உரைக்கிறது. அது சரிதான் என்று வேத அறிஞர்கள் ஒத்துக் கொள்கின்றனர். ஏழு சபைக் காலங்களுக்கென்று எழுதப்பட்ட இந்நிரு பங்கள், தீர்க்கதரிசனமாக எதிர் வரும் காலங்களுக்கென்று எழுதப் பட்டவையாகும். பவுலும்கூட தன் காலத்தில் இருந்து வந்த ஏழு சபைகளின் ஜீவியம் மற்றும் மகிமையைப் பற்றி எழுதியிருக் கிறான். யோவானோ எதிர்வரும் காலங்களில் உள்ள ஏழு சபை களின் ஜீவியம் மற்றும் மகிமையைப் பற்றி எழுதி, அவைகளை நேரடியாக அந்தந்த சபையின் போதகர் அல்லது தூதனுக்கும் மற்றும் இந்த வெவ்வேறு ஏழு சபைக் காலங்களில் வாழும் எல்லா கிறிஸ்தவர்களுக்குமாக விளித்து எழுதியுள்ளான். 31இப்பொழுது இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை காலை, மாலை என இரு வேளைகளிலும் ஆராய்வோம். காலை ஆராதனையை 11 மணி அல்லது 11.30 மணி அளவில் முடித்துக் கொள்வோம். இரவு ஆராதனையை இரவு 7 மணிக்கு ஆரம்பிப் போம். 32இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதி காரத்தின் பொருளடக்கத்தைப் பார்ப்போம். முதலாம் வசனமானது, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் என்றே தெளிவாகக் கூறுகிறது. (ஆங்கில வேதாகமத்தில் “The Revelation of Jesus Christ” என்று துவக்கத்திலேயே அவ்வாறு ஆரம்பிக்கிறது). 2ம் வசனம், திவ்யவாசகனாகிய பரிசுத்த யோவானே வேத பாரகன் மற்றும் தேவ ஊழியக்காரனாகக்கூறுகிறது. 3ம் வசனம், ஆசீர்வாதங்களை உரைக்கிறது. 4ம் வசனம் முதல் 6ம் வசனம் முடிய சபைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. 7ம் வசனம் அவர் வருகையைக் குறித்து அறிவிப்புச் செய்கிறது. 8ம் வசனம் இயேசு கிறிஸ்துவின் உன்னத தெய்வீகத்தை விவரிக்கிறது. 9ம் வசனம் முதல் 20ம் வசனம் முடிய பத்மு தீவு தரிசனம். 3314ம் வசனம், மற்றும் 15ம் வசனம், இயேசு கிறிஸ்துவின் ஏழு விதமான மகிமையை ஆள்தத்துவத்தில் விவரிக்கிறது. அவரது தோற்றம் ஏழு விதமான ஏழு மகிமையோடு விவரிக்கப் பட்டிருக்கிற ரூபத்தில் கிறிஸ்துவை காணக் கிடைப்பது எத்தனை அழகாயுள்ளது. அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலில் அவருக்குள்ள ஏழு விதமான வருணிப்போடு உள்ள அவரது ஆள் தத்துவம். இச்செய்தியின் தலைப்பு “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்” என்பதானது, அதின் உட்கருப்பொருளை விவரிக்கிறது. திவ்ய வாசகனாகிய யோவானைப் பற்றிய வெளிப்படுத்துதல் அல்ல இது. ஆனால் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும். வெளிப்படுத்துதல் என்ற பதத்திற்கு கிரேக்க மொழியில் 'அபோகலிப்ஸ் (Apocalypse) என்பதாகும். அதன் பொருள் “திறக்கப்படுதல்' என்பதாகும். நான் இந்த வார்த்தையை எடுத்துக் கொண்டு அதைப் பற்றி ஆராய்ந்து பார்த்த போது... அபோகலிப்ஸ் என்ற இந்த வார்த்தைக்கு, ஒரு சிற்பி ஒரு சிலையைச் செதுக்கி, அதைத் திரைச் சீலையினால் மூடி, மறைத்து விட்டு, பின்பு, அதை அவனே அந்தத் திரைச் சீலையை நீக்கி, அதின் பின்னால் என்ன உள்ளது என்று திறந்து காண்பிப்பது போல் உள்ளது. மறைந் திருக்கிற ஒன்றை திறந்து காண்பித்தலாகும் அது. 34ஆயினும் இப்புத்தகம் இயேசு கிறிஸ்து என்ற நபரைப் பற்றி மிகவும் அதிகமான அளவில் திறந்து கொடுக்கவில்லை. இருப் பினும் அது நிச்சயமாக அவரது தெய்வீகத்தைப் பற்றியும், அவரது ஏழுவிதமான மகிமையான தோற்றங்களையும், அவர் என்னவாக இருக்கிறாரோ, அதைப் பற்றியும், அதாவது, பிரதான ஆசாரியன், இராஜா என்பன போன்ற காரியங்களைப் பற்றியும் கூறுகிறது என்பது உண்மையே. ஆனால் வரவிருக்கின்ற அவரது ஏழு சபைக் காலங்களிலும் அவரது எதிர்வரும் கிரியைகளைப் பற்றி இது விவரிக்கிறது. அது... நமது கர்த்தர் பூமியில் இருக்கையில், சீஷர்கள் அவரிடம், ''... இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்'' என்று கேட்டார்கள். 'அந்தக் காலத்தையும் வேளையையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல'' என்று கூறினார். ஒருவரும் அதை அறிய மாட்டார்கள். ''குமாரனுங்கூட அதை இதுவரை அறியவில்லை'' என்று கூறினார். ஆனால் அவரது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற் றும் மகிமைக்குள் பரத்துக்கேறுதல் ஆகியவைகளுக்குப் பின்பு, சபையின் எதிர்காலத்தைப் பற்றி அவர் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார். பின்பு, சபைக்கு இச்செய்தியை கொடுக்க மீண்டும் திரும்ப வந்தார். அவரது வருகையைப் பற்றிய செய்தி அது, மற்றும் காலந்தோறும், சபைகளின் நிலையை தெளிவாக காண்பிப்பதாகவும் இச்செய்தி உள்ளது. 35அவரது மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முன்பாக அவர் இதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவர் உலகில் இருக்கையில் இன்னும் அதை அறிந்து கொள்ளவில்லை. ஆனால் இங்கு இந்த குறிப்பிட்ட வசனம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை கவனித்தீர்களா? “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலை தேவன் அவருக்கு (கிறிஸ்துவுக்கு) ஒப்புவித்ததும்... (ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடி- மொழி பெயர்ப்பாளர்) பிதாவாகிய தேவன், தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்து வுக்கு எவ்வாறு அந்த வெளிப்படுத்துதலை அளித்தார்! அவர் தம் முடைய தூதனை யோவானிடத்திற்கு அனுப்பி, இவைகளைத் தெரியப்படுத்தினார், இருந்தவரும், இருப்பவரும், வருகிறவரு மானவரைப் பற்றி தெரியப்படுத்தினார். ஓ! இது எவ்வளவு அழகாக அமைந்துள்ளது. 36இப்பொழுது, இந்த மகத்தான வருகையின் காலத்தை யோவான் பார்த்தான்... இப்பொழுது இவைகள்... கிறிஸ்து என்ன வாக இருப்பார், எவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் இருப்பார் என்பதைப் பற்றிய கிறிஸ்துவின் குறிப்பிட்ட நோக்கத்தை திட்ட வட்டமாக வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த வெளிப்பாடு யோவானுக்கு அளிக்கப்பட்டது. எனவே தான் இன்று காலையில் நான் உங்களிடம், ''உண்மையான சபையின் மேல் உங்கள் சிந்தையை வையுங்கள், அது பெந்தெகொஸ்தே நாளில் ஆரம் பிக்கப்பட்ட உண்மையான சபையாகும்'' என்று கூறினேன். எந்தவொரு சமயக் கோட்பாடுகளைக் கற்றறிந்தவனோ அல்லது வேதவிற்பன்னரோ, அல்லது எந்தவொரு வரலாற்று ஆசிரியனோ, உண்மையான சபை, மார்ட்டின் லூத்தர் காலம் அல்லது வெஸ்லி காலம் அல்லது கத்தோலிக்க காலம் அல்லது வேறெந்த காலத்திலோ ஆரம்பித்தது என்று கூற முடியாது என்பது நிச்சயம். அது பெந்தெகொஸ்தே நாளில் ஆரம்பித்தது. அதின் துவக்கம் அப்பொழுதிலிருந்துதான். அதுவே அதன் ஆரம்பம். ஆகவே இக்காரியத்தைப் பற்றி எவருடனும் விவாதிக்க நேர்ந் தால், சபையின் ஆரம்பத்தைப் பற்றி நிரூபிக்க பெந்தெகொஸ்தே நாள் என்னும் தலைவாயிலிலேயே நில்லுங்கள், அவர்களால் அதைப் புறக்கணித்து வேறு வாதத்தை எடுத்துரைக்க முடியாது. 37அது ஒரு முயலை ஒரு விளை நிலத்தில் விடுவதைப் போல் உள்ளது. எல்லாப் பொந்துகளையும் நீங்கள் அடைத்து விட்டால், முயலானது தான் முன்பிருந்த இடத்துக்கே வரவேண்டும். நல்லது, அவ்விதமாகத்தான், சபைகளைக் குறித்தும், சபைக் காலங்களைக் குறித்தும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைக் குறித்தும் பேசினால், நீங்கள் ஆதியோடந்தமான ஆரம்பத்திற்கே வரவேண்டும். தேவன் முடிவில்லாதவர் மற்றும் சர்வ வல்லவர் ஆதலின், ஆரம்பத்திற்குத் தான் வரவேண்டும். எனவே அவர் முடிவில்லாதவராதலால், முன்பு ஒன்றைச் செய்துவிட்டு, பின்பு அதற்கு முரணாக வேறொன்றைச் செய்ய முடியாது. ஆதியில் அவர் எப்படிச் செய்தாரோ, அவ்வாறே ஒவ்வொரு தடவையும் அவர் செய்ய வேண்டும். புறஜாதிகள் பரிசுத்த ஆவியைப் பெற்ற நாளில் பேதுரு கூறினான், ''நம்மைப் போல் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர் களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி''. இப்பூவுலகில் இயேசு இருந்தபொழுது அவர் கூறினார். ...அது... ஒருவன் இயேசுவினிடத்திற்கு வந்து, “புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்திரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா?'' என்று கேட்டான். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, ''ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன்...''. 38அதற்கு அவர்கள், 'அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளை யிட்டார்'' என்றார்கள். இயேசு அதற்குப் பிரதியுத்தரமாக, 'ஆதி முதலாய் அப்படி யிருக்கவில்லை '' என்று கூறினார். எனவே எப்பொழுதும் ஆதிக்கே (துவக்கத்திற்கே) செல் லுங்கள். எனவே, நாம் சபைக் காலத்தைக் குறித்துப் பேசப் போகிறோமென்றால், பின் காலங்கள்தோறும் மனிதன் அதைப் பற்றிக் கருத்துரைத்தவைகளைத் தள்ளிவிட்டு, துவக்கத்திற்கே செல்ல வேண்டும். வேதத்திலுள்ள புத்தகங்களிலெல்லாம், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமே மிகவும் அதிகாரப்பூர்வமான புத்தகமாகும். கிறிஸ்து தனது முத்திரையைப் பதித்திருக்கிற ஒரே புத்தகம் இது. இப்புத்தகம் ஆசீர்வாதத்தோடு ஆரம்பித்து, சாபங் கூறுதலோடு முடிவடைகின்றது. “இப்புத்தகத்தை வாசிக்கிறவன் பாக்கிய வான்'' என்று தொடங்கி, ”இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்'' என்று முடிவாகக் கூறப்பட் டள்ளது. 39வேதம் முழுவதிலும் கிறிஸ்துவினால் எழுதப்பட்ட ஒரே புத்தகம் இதுதான். தன்னுடைய விரல்களினால் பத்துக் கற்பனை களை அவர் எழுதினார். யூதர்களும் அதைக் கடைப்பிடித்து வரு கிறார்கள். இன்று, வெளிப்படுத்தின விசேஷம். சாத்தான் வேத வாக்கியங்கள் முழுவதையும் வெறுக்கிறான். ஆயினும் மிகவும் அதிகமாக அவன் வெறுப்பது வெளிப் படுத்தினவிசேஷப் புத்தகத்தைத்தான். இரு புத்தகங்களை அவன் மிகவும் வெறுக்கிறான். அவையாவன, வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் மற்றும் ஆதியாகமப் புத்தகம். இவற்றை அவன் மிகவும் வெறுக்கிறான். ஏனெனில், ஆதியாகமப் புத்தகம் ஆதியில் நடந்தவைகளைப் பற்றி உரைக்கிறது. வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமோ, கடைசி நாளில் சாத்தானுக்கு என்ன நேரிடப் போகிறது என்பதை காண்பிக்கிறது. சாத்தான் ஆயிரம் ஆண்டுகள் கட்டிப் போடப்படவிருக்கிறான். அதன்பிறகு, அவனும் கள்ளத் தீர்க்கதரிசியும், மிருகமும் உயிருடன் அக்கினிக் கடலில் தள்ளப்படவிருக்கிறார்கள். ஆதியாகமப் புத்தகத்தை, அது நம்பத் தகுந்ததல்ல'' என்று அவன் குறை கூறுவான். அப்படிச் சொல்லி மக்களின் சிந்தையை அவன் கலக்குவான். முதலும் கடைசியுமான ஆதியாகமம் மற்றும் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகங்களில் சாத்தானைப் பற்றிக் கவனித்துப் பாருங்கள். 40வேதத்திலுள்ள மற்றெந்த புத்தகங்களைக் காட்டிலும், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் தான் அதிகமான அடை யாளச் சின்னங்கள் உள்ளன. அதில் அதிகமான அடையாளச் சின் னங்கள் உள்ளன. ஏனெனில், அது ஒரு தீர்க்கதரிசனப் புத்தக மாகும். எனவே, அது ஒரு தீர்க்கதரிசன வகுப்பினரால் மாத்திரமே புரிந்து கொள்ளப்பட முடியும். இப்புத்தகம் யாவரும் புரிந்து கொள்வதற்காக உள்ளது அல்லவே அல்ல. இதை யாராலும் அறிந்து கொள்ளவே முடியாது. ஒரு குறிப்பிட்ட மக்கள் வகுப் பினருக்கு மட்டும் உரியதாக இது எழுதப்பட்டுள்ளது. உபாகமத்தில், “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த் தருக்கே உரியவைகள்...'' என்று கூறப்பட்டுள்ளது. அது சரிதான். மறைவானவைகளை அவர் தனது பிள்ளைகளாகிய நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே அது மற்றவர்களுக்குரியது அல்ல. மாம்ச சிந்தையுள்ள மனிதனால், பரிசுத்த வேதத்தின் மகத் துவமானவைகளை கிரகித்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவைகள் அவனுக்கு மதியீனமாக, பைத்தியமாகத் தோன்றும். ஆனால் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறவர்கள் அதை அறிந்து கொள்வார்கள், புரிந்து கொள்வார்கள். ஏனெனில் சபை யாகிய அவர்களுக்குத் தான் வேதமானது எழுதப்பட்டது. எபேசு விலுள்ள சபைக்கு, சிமிர்னாவிலுள்ள சபைக்கு மற்றும் தொடர்ந்து வரும் சபைக்குத்தான் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் வருகிறது. சபைக்கு அளிக்கப்படும். “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்'. 41மேலும், கவனியுங்கள், இப்புத்தகம் வேதவாக்கியங்களின் நிறைவான முடிவாயிருக்கிறது. பூளோகரீதியிலும் அது சரியான ஸ்தானத்தில், அதாவது வேதத்தின் இறுதியில் வைக்கப்பட் டுள்ளது. இதிலுள்ள யாவற்றின் வெளிப்படுத்துதலானது, அதை வாசிக்கிறவருக்கும், அதை வாசிக்கக் கேட்கிறவருக்கும் ஆசீர்வாதத்தையும், இதிலுள்ளவற்றோடு எதையாகிலும் கூட்ட வோ, அல்லது இதிலிருந்து எடுத்துப் போடவோ செய்வோருக்கு சாபத்தையும் உடையதாக இருக்கிறது. அது தானே முழுமையான பிரமாணமாக இருக்கிறது. ஓ, அதுவே குறைவில்லாதது, முழுமை பெற்றது. அதுவே எல்லாம். வேறு யாதொன்றும் அதனோடு சேர்க்கப்படக் கூடாது. இப்பரிசுத்த எழுத்துக்களோடு, எவராவது யாதொன்றைக் கூட்டவோ, அல்லது அதிலிருந்து எடுத்துப் போடவோ செய்தால், தேவன் அப்படிப்பட்டவனுடைய பெயரை, பங்கை ஜீவபுத்தகத்திலிருந்து எடுத்துப் போடுவேன் என்று கூறியுள்ளார். அவ்வாறு அதனோடு ஒன்றைக் கூட்டும் மனிதனின் பங்கை ஜீவ புத்தகத்திலிருந்து தேவன் எடுத்துப் போடுவார் என்பதைப் பார்த்தீர்களா? எனவே, நமது கர்த்தரைப் பற்றிய எண்ணிறந்த வெளிப் படுத்துதல்களை நாம் காண்கையில், அதாவது யார், அவர் எவ்வாறு உள்ளார் என்ற வெளிப்படுத்துதல்கள், அவ்வெளிப்பாட்டுடன், யாராவது ஒன்றைக் கூட்டவோ, அதிலிருந்து எடுத்துப் போடவோ செய்தால், அது கள்ளத் தீர்க்கதரிசனமாகும். வெளிப்படுத்தின விசேஷத்திற்கு பிறகும்கூட, மேற்கொண்டு தங்களுக்கு வெளிப் படுத்துதல்கள் கிடைத்துள்ளன என்று அநேகர் கூற முற்பட்ட துண்டு. ஆனால் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமானது அவரது சபைக் காலத்தில், அவரது நாட்களில், இயேசு கிறிஸ்துவைப் பற்றின முழுமையான, குறைவற்ற வெளிப்படுத்துதலாக இருக் கிறது. நமது கர்த்தரைப் பற்றின ஒரு வெளிப்படுத்துதலாகும் அது! 42அபோகலிப்ஸ் என்ற கிரேக்க வார்த்தை மறைந்திருக்கிற ஒன்று திரை நீக்கம் செய்யப்படுதல் என்பதாகும். அதாவது கிறிஸ்துவைப் பற்றிய இரகசியம் வெளிப்படுத்துதலாகும். இரண்டாவது வசனத்தில் நாம் காண்கிறோம்.... முதலாம் வசனமானது கிறிஸ்துவை பற்றிய இரகசியத்தை திறந்து கொடுப்பதைப் பற்றியது. வெளிப்படுத்துதல், அதாவது மறைவானதை திறந்து காண்பிப்பது. ஓ, எவ்வளவாக அப்போஸ் தலருக்கு கடைசிக் காலம், மற்றும் கர்த்தருடைய வருகையைப் பற்றிய காரியங்கள் மறைக்கப்பட்டிருந்தன! அப்போஸ்தலர் அதைப் பற்றிய கேள்விகளைக் கர்த்தரிடம் கேட்டார்கள். ஆனால் அவைகளைப் பற்றிய வெளிப்படுத்துதலைப் பெற ஒரே ஒரு அப் போஸ்தலன் மட்டும் உயிர் வாழ்ந்திருந்தான் (யோவான் தான் அது). ஆயினும் யோவான், தான் எழுதின வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தையே அது என்னவென்று புரிந்து கொள்ள வில்லை. ஏனெனில் அதில் எழுதப்பட்டுள்ளவைகள் வந்து நிறைவேறி வரலாறாகும் காலம் வரை அவன் உயிர் வாழ வில்லை. இப்பொழுது, இப்புத்தகத்தின் வரலாறு - இப்புத்தகத்தின் பொருளடக்கம், அப்பொழுது ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டது. ஆசியா மைனரில் இருந்த அந்த ஏழு சபைகளின்னியில், அக்காலத்தில் வேறு எத்தனையோ சபைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் ஆசியா-மைனரில் இருந்த அந்த ஏழு சபைகளும், எதிர் வரும் ஏழு சபைக் காலங்களில் இருக்கப் போகும் சபைகளின் தன்மையை பிரதிபலிப்ப தாக இருந்ததால், அவைகள் முக்கியத்துவம் பெற்றன. எபேசு விலுள்ள சபை என்று கூறும்போது, அது எபேசு சபைக் காலத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. சிமிர்னா, பெர்கமு, பிலதெல்பியா மற்றும் உள்ள சபைகள் ஒவ்வொன்றும், எதிர்வரும் அந்தந்த சபைக் காலத்தின் தன்மையை அப்படியே பிரதிபலிப் பதாக அமைந்திருந்தன. 43ஓ! உங்களால் மட்டும்.... எந்தவொரு மனிதனாவது வேத வாக்கியங்களை ஆவிக்குரிய பிரகாரமாக சம்பந்தப்படுத்திக் காண்பிப்பதை கண்டும்கூட, அவை தேவனால் ஏவப்பட்டு எழு தப்பட்டவை என்பதை எவ்வாறு காணத் தவற இயலும்? மனி தனின் செயல், நோக்கங்கள், எண்ணங்கள் இவை யாவும் வேதவாக்கியங்கள் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை என்பதை நிரூபிக்கின்றன. தேவன் அவற்றை எவ்வாறு சம்பந் தப்படுத்திக் காண்பிக்கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்களோ, அது ஏதோ ஒன்றின் சாயலாக இருக்கிறது. ஆபிரகாம் தனது ஒரே பேரான குமாரன் ஈசாக்கை பலியிட ஒப்புக் கொடுத்தபோது, அச்செயலானது, அநேக நூற்றாண்டு களுக்குப் பிறகு, தேவன் தமது குமாரனை பலியாக ஒப்புக் கொடுத்தலுக்கு சாயலாக அமைந்ததே. எவ்வாறு யோசேப்பு தன் தந்தையால் நேசிக்கப்பட்டும், சகோதரர்களால் பகைக்கப்பட்டு, விற்கப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டு இருந்தானோ, அது இயேசுவுக்கு சாயலாக அமைந்தது. மனிதனாகிய யோசேப்பின் மூலம் ஆவியானவர் கிரியை செய்து, கிறிஸ்துவின் வாழ்க்கைக்கு பரிபூரணமான மாதிரியை ஏற்படுத்தினார் பாருங்கள். தாவீது எவ்வாறு தான் ராஜாவாக இருக்கையில் தன் ஜனங்களால் புறக் கணிக்கப்பட்டு, ஒலிவ மலையின் மேல் நகரத்தைப் பார்த்துக் கொண்டே அழுது கொண்டே நடந்து சென்றானோ, அதே காரியம் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு தாவீதின் குமாரனாகிய இயேசுவும் அதே மலையின் மேல் ஏறி, தன்னைப் புறக்கணித்த எருசலேம் பட்டணத்தைப் பார்த்து அழுது கொண்டே சென்றபோது, நடை பெற்றது. ஆவியானவர் எல்லாவற்றிற்கும் மாதிரியையும், முறை களையும் வைத்துள்ளார். 44ஓ! இக்கடைசி நாட்களில் உங்களால் அந்த மகத்தான பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்ற சபையைக் காண முடி கிறதா? பெந்தெகொஸ்தே நாளில் தேவன் எவ்வாறு அதை ஆரம் பித்து வைத்தார் என்பதைக் காண முடிகிறதா? அந்த ஆவியானவர் எல்லாக் காலங்களின் வழியாகவும் அந்த மெய்யான சபையில் வாசம் பண்ண வேண்டும். அவர்கள் சமய சம்பிரதாயங்களை யுடையவர்களாகவும், மாறுபட்டவர்களாகவும் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு ஒரு மத ஸ்தாபனம் தேவைப்பட்டது. சபையையும், அரசையும் ஒன்றாக இணைக்க அவர்கள் விரும்பினார்கள். முடிவாக அதை சாதிக்கவும் செய்து, அதினால், நூற்றுக்கணக்கான ஆண்டு களுக்கு உபத்திரவத்தை உண்டாக்கக் காரணமானார்கள். அதன் பிறகு சீர்திருத்தலின் காலம் வந்தபோது அவர்கள் வெளியே வந் தார்கள். அதன்பின்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆவியானவரை விட்டு அவர்கள் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துக் கொண்டு மாம்சப் பிரகாரமான காரியங்களை இன்னும் கூடுதலாக தங்களோடு சேர்த்துக் கொண்டே வந்தார்கள். இவ்வாறு மெல்ல ஆவியானவரை விட்டு விலகி, லௌகீக காரியங்களை அதிகமாக சேர்த்துக்கொண்டே வந்து, இறுதியில் அவர்கள் முதலில் செய்தது போலவே, சபையையும் அரசையும் ஒன்றாக இணைக்க ஆயத்த மாக இருக்கிறார்கள். நாம் தானே இறுதியான முடிவடையக் கூடிய வேளையில், அதாவது சபையின் காலம் முடிவடையும் இறு திக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பிலதெல் பியா... இல்லை, லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக் கிறோம். 45முதலாம் அதிகாரம், முதலாம் வசனமானது, யோவானை அறிமுகப்படுத்துகிறது. இப்புத்தகத்தை எழுதியது யார்? அது யோவானாகும். இப்புத்தகம் யோவானைப் பற்றிய வெளிப்படுத்து தல் அல்ல, இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும். யோவான் ஒரு சீஷனாக இருக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்டான். இப்புத்தகமே இது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் என்பதாக தெரிவிக் கிறது. அவரில்தான் இந்த வெளிப்பாடு வருகிறது. “இது அவர் தம்முடைய தூதனை அனுப்பி யோவானுக்குத் தெரியப்படுத்தினார்'' அந்தத் தூதன் யார் என்பது நமக்குத் தெரியாது. அந்த தூதன் யார் என்பதைப் பற்றி வேதமும் ஒன்றும் கூறவில்லை. ஆனால், அந்தத் தூதன் ஒரு தீர்க்கதரிசி என்று நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில், வேதத்தில் அதன்பின்னர் கூறப்பட்டுள்ளது, ”இயேசுவாகிய நானே சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை அறிவிக்கும்படியாக என் தூதனை அனுப்பி னேன்'' என்று. 46யோவான் அத்தூதனை - அவன் காலில் விழுந்து வணங்கப் முற்பட்ட போது, அத்தூதன், “இப்படி செய்யாதபடிக்கு பார்'' என்று கூறினான். அது வெளிப்படுத்தின விசேஷம் 22ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். ”நீ இப்படி செய்யாதபடிக்குப் பார்; உன் னோடும் உன் சகோதரரோடும், தீர்க்கதரிசிகளோடும் கூட நானும் உடன் ஊழியக்காரன்''. அது எலியாவாக இருக்கக் கூடும். தீர்க்கதரிசிகளில் ஒருவனாக இருந்திருக்கக் கூடும். யோவான் அப்போஸ்தலனாக இருந்தான். ஆனால் இத்தீர்க்கதரிசி அனுப்பப் பட்டான். யோவான் அப்போஸ்தலனாக இருந்தபடி யால், அவன் எழுதியுள்ள ஏனைய நிருபங்களின் தன்மையைப் பாருங்கள்; அவைகள் வெளிப்படுத்தின விசேஷத்தை யோவான் தானே எழுதவில்லை என்பதை நிரூபிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷத்திற்கு, யோவானின் ஏனைய நிருபங்களில் காணப்படும் தன்மையை காண முடியவில்லை. யோவான் எழுதிய முதலாம் நிரூபம் ஆகியவைகளை எடுத்துப் படித்துப் பாருங்கள். அவை களில் யோவான் எழுதினவைகளின் தன்மையையும், வெளிப் படுத்தின விசேஷ புத்தகத்தின் தன்மையையும் ஒப்பிட்டுப் பாருங்கள், யோவான் ஒரு வேதபாரகனாகவும் ஒரு அப்போஸ்தலனாகவும் இருந்தார். ஆனால் இதுவோ தீர்க்கதரிசியின் ஆவியாயிருக்கிறது. அது முற்றிலும் வித்தியாசமான நபராயிருக் கிறது. பார்த்தீர்களா? அது யோவானின் எழுத்தல்ல. யோவானு டைய வெளிப்படுத்துதலல்ல. அது தேவன் சபைகளுக்கு அருளிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும். யோவான், சொல்லச் சொல்ல அதை எழுதின ஒரு வேதபாரகன் மட்டுமே, அப்படித்தான் அப்புத்தகமும் அறிவிக்கிறது. இப்புத்தகம் யோவானுக்கு என்று உரைக்கப்பட்டதல்ல. அது சபைகளுக்கு என்று உரைக்கப்பட்டதாகும். அது சரிதான். இப்புத்தகத்தை எழுதுகையில் யோவான் எபேசுவிலுள்ள சபைக்கு போதகராயிருந்தான். இப்புத்தகமோ யோவானை விவரித்துப் பேசவில்லை. சபைக்கென்றே பேசப்பட்டது. 47இப்பொழுது மூன்றாவது வசனத்தைப் பாருங்கள். ஆண்டவர் இதில் ஆசீர்வாதங்களை அறிவிக்கிறார், இதை கவனியுங்கள். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. எந்தக் காலம் சமீபமாயிருக்கிறது? ஒவ்வொரு சபைக் காலத்தினூடாகவும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப் படுத்துதல் பூர்த்தியடையும்போது, இக்காரியங்கள் சம்பவிக்கை யில், காலம் சமீபமாயிருக்கிறது. காலம் சமீபமாயிருக்கிறது என்று எழுதக் காரணம் என்னவெனில், அவர்கள் அவர் திரும்பி வருவார் என எதிர் பார்த்து இருந்தார்கள். அப்பொழுது இருந்த சபைகள் முடிந்த வுடன் அவர் வருவார் என யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருந்தால்... அவ்வாறிருக்கும் என்று தான் யோவானும் எண்ணி யிருந்தான்; ஆனால் அப்படியல்ல, ஆனால் ஏழு நீண்ட சபைக் காலங்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்லது பல நூற்றாண்டு களுக்கு நீடித்திருக்கும் என்று யோவானுக்கு வெளிப்பட்டிருந் தால், அவர்கள் தங்கள் காலத்தில் அவர் வருகைக்காக காத்திருத்தல், உண்டாயிருக்கவே இருக்காது. அவர்கள் தங்கள் சபைக்காலத்தை, இயேசுவின் வருகையை எதிர்பாராமல் வாழ்ந்து முடித்திருப்பார்கள். அவர்கள் அந்தக் காலத்தில் இருந்த தங்களின் சபைகளின் காலம் முடிந்த பிறகு இயேசு வந்து விடுவார் என்றே எதிர்பார்த்திருந்தார்கள். 48எனவே, தேவன் அதைப் பற்றிப் பேசினார். ஆயினும் அவர்களுக்கு அது வெளிப்படவில்லை. ஜான் வெஸ்லிக்கு வேதத்தைப் பற்றி தெரிந்த காரியங்கள் மார்டின் லூத்தருக்கு தெரிந்திருக்கவில்லை. வேதத்தைப் பற்றி பெந்தெகொஸ்தேயினர் அறிந்த அளவுக்கு பாப்டிஸ்டுகள் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் அது வித்தியாசமான காலமாயிருந்தது. வித்தியாசமான நேரமா யிருந்தது. தேவன் அந்தந்தக் காலத்திற்கு தம்முடைய காரியங்களை வெளிப்படுத்துகிறார். தேவன் சரியாக உரிய நேரத்தில் தமது காரியங்களை வெளிப்படுத்துகிறார். நீங்கள் வசந்த காலத்தில் விதை விதைத்து, அதே காலத்தில் அறுவடை செய்ய முடியாது. நீங்கள் ஒரு விதையை விதைத்தால், அது முதிர்ச்சி அடைகிற வரையிலும் வளர்கிறது. தேவன் தனது வசனமாகிய விதையை விதைக்கிறார். அது வளர்ந்து மீண்டும் வெளியே வருகிறது, அப்பொழுது நாம் திரும்பிப் பார்த்து, “இதோ அது வந்திருக்கிறது'' என்று கூறுகிறோம். ஆம் நிச்சய மாகவே, அது வெளிப்படுத்தப்பட்ட பின்பே நாம் அதைக் காண் கிறோம். மூன்றாவது வசனத்தில், இப்புத்தகத்தின் இரகசியங்களை வாசிக்கிறவனும், அதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கிய வான்கள் என ஆசீர்வாதங்களை அறிவிக்கிறதைப் பார்க்கிறோம். மாம்ச சிந்தையுள்ளவன் அதைத் தள்ளிவிடுகிறான். ஏனெனில் மாம்ச சிந்தையுள்ளவன் அதை அறிந்து கொள்வதில்லை, சாத்தான் அம்பலப்படுத்தப்படுகிறான், தான் அம்பலப்படுத்தப்படுவதை அவன் விரும்புவதில்லை. 49சாத்தான், தன் காரியங்களெல்லாம் அம்பலப்படுத்தப்படப் போகிறதை எண்ணுகையில், அது அவனுக்கு எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் அறிவீர்களா? கூட்டங்களில் மக்களின் செய்கைகளை கவனித்திருக்கிறீர்களா? கவனித்துப் பாருங்கள். நான் நடத்தும் கூட்டங்களில் அதைக் கவனித்துப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட நபருக்குள் இருக்கும் சாத்தான் அம் பலப்படுத்தப்படப் போகும்போது, அந்த நபரின் முகமானது மாறுதலடைவதை பாருங்கள். என்ன சிந்திக்க வேண்டுமென்பதே அப்பொழுது அவர்களுக்குத் தெரியாது. திடீரென பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, அப்பிசாசை அம்பலத்திற்குக் கொண்டு வருகிறார். ஓ! சாத்தானானவன் இவ்வகையான கூட்டங்களை வெறுக்கிறான். தேவனுடைய வார்த்தை மனிதருக்குள் இருக்கும் பிசாசை அம்பலப்படுத்துவதினால், அவன் எப்படிப் பட்டவன் என்று கூறுவதினால், நமக்கு அப்படிப்பட்டதொரு போராட்டம் உண்டாயிருக்கிறது. 50பரிசுத்தாவியானவரின் ஏவுதலின் கீழ் இருக்கையில் நீங்கள் “இங்கே அமர்ந்திருக்கிற செல்வி ஜோன்ஸ் என்ற இந்தப் பெண்மனி, அவர் இன்னார் இன்னார், இன்ன இடத்திலிருந்து வருகிறார்'' என்று சொல்லக்கூடும், அது என்ன செய்கிறது? அது அப்பெண்மணியின் ஆவியை உந்தி அந்த இடத்திற்குக் கொண்டு வருகிறது. 'என்னை எப்படி நீங்கள் அறிவீர்கள்? அந்த மனிதனுக்கு என்னை தெரியாதே? எனவே அது ஒரு ஆவியாகத்தான் இருக்க வேண்டும். அது என்னவிதமான ஆவி?'' ''அது தேவனுடைய ஆவியாகும்.'' “எப்படி? எனக்கு என்ன கோளாறு?'' ''உங்களுக்கு காசநோய், புற்றுநோய் உள்ளது''. எதுவாயிருந்த போதிலும், “அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. ஓ! எவ்வளவாக சாத்தான் அதை வெறுக்கிறான். ஏனெனில் அது அவனது முகத்திரையை கிழித்துவிடுகிறது. பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் இவ்வகையான கூட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கும் சுபாவ மனிதன் (மாம்ச சிந்தையுள்ளவன்) 'இது மனோதத்துவ ரீதியில் சிந்தையை ஆராய்தல் ஆகும், அல்லது மனோவசிய முறையாகும்'' என்று சொல்லலாம். இவர்களுக்கு இது என்னவென்று தெரியாது. அது அவர்களுக்கு பைத்தியமாகத் தோன்றும். 51ஆனால் அது என்னவென்று அறிந்தவர்களுக்கோ அது எவ் வளவாக ஆசீர்வாதமாயுள்ளது! அது என்னவாக இருக்கிறது? ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. யாரைப் பற்றிய வெளிப்படுத்து தல் அது? பிரசங்க பீடத்தில் நிற்கும் அம்மனிதனைப் பற்றிய வெளிப்பாடா? இக்கடைசிக் காலத்திய சபையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகும்! அவர் செய்வேன் என வாக்குரைத்தபடியே, அவர் தன்னைத் தானே வெளிப்படுத்து கிறதாக அது இருக்கிறது. அது வெளிப்படுத்துதலாக இருக்கிறது. பார்த்தீர்களா? அதை சாத்தான் வெறுக்கிறான். என்னே, சாத்தான் எவ்வள வாக அதை வெறுக்கிறான்! அவனும், அவனது தீய திட்டங்களும் அம்பலப்படுத்தப்படுகிறது. சாத்தான், ஆதியாகமத்தில் தன்னைப் பற்றியுள்ள வெளிப்பாடுகளை வெறுக்கிறான். அதை நாம் இங்கே எழுதி வைத்திருக்கிறோம். அது மிகவும் சரியாக உண்மையாக உள்ளது. ஏன் சாத்தான் ஒரு வெளிப்பாட்டை வெறுக்கிறான்? வெளிப்பாட்டிற்கு அவன் ஏன் எதிராயிருக்கிறான்? முழு வேதப் பிரமாணமும் தேவனுடைய சபையும் பயபக்தியுடன் வெளிப் பாட்டின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது என்பதுதான் காரணம். 52அது ஒருபோதும் வேதப்பள்ளியின் மூலமாக ஏற்படாது. நமக்கு எவ்வளவு அருமையான வேதக் கலாசாலைகள் இருக்கக் கூடும். வேதக் கல்லூரிகள் யாவும் இன்னமும் அந்த மங்கிய இருண்ட காலத்திற்குள் தான் இருந்து வருகின்றன. வேதமும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையும் முழுவதும் வெளிப்படுத்து தலாக உள்ளன. நாம் வேதத்தில் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16ம் அதிகாரம் 18ம் வசனத்திற்குத் திருப்புவோம். மத்தேயு 16:18ஐ நாம் படிப் போம். அங்கே அது வெளிப்பாடாக இருக்கிறது என்பதை பார்க்கலாம். இயேசுவும் சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள். 17ம் வசனம். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப் படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக் கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. மத்.16:17-18 53கத்தோலிக்க சபையானது, ''சபை பேதுருவின் மேல் கட் டப்பட்டுள்ளது'' என்று கூறுகிறது. அது உண்மையிலேயே மாம்ச சிந்தையின்படியானதாகும். ஆவிக்குரிய சிந்தையானது அவ்வித மான ஒரு காரியத்தை கிரகித்துக் கொள்ளும் என்பதை நீங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. தேவன்... தமது சொந்த குமாரன் அங்கே நின்றிருக்க, தேவனுடைய குமாரன் தாமே அங்கு நின்று கொண்டிருக்கிறார், அப்படியிருக்க, தேவன் ஒரு சாதாரண, பாவத்தில் பிறந்த மனிதன் மேல் தன் சபையைக் கட்டுவார் என்பதை சிந்தித்தும் பார்க்க முடியுமோ? பேதுரு தன் மேல் சபை கட்டப்படவில்லை என்பதை தனது ஜீவியத்தில் நிரூபித்துக் காட்டினான். அவன், தன்னிடத்தில் இருந்த அதே ஆவியோடு, இயேசுவை சபித்து, அவரது முகத்திற்கு முன்பாகவே, அவரை மறுதலித்து விட்டான். ஆகவே பேதுருவின் மேல் சபை கட்டப் படவில்லை. அல்லது சில சபைகள் நம்புகிறது போல், அங்கே இருந்த ஒரு பாறையின் மேலும் சபையானது கட்டப்பட்ட வில்லை. அது எழுத்தின்படியே ஒரு வெறும் பாறையின் மேல் கட்டப் போவதாக அவர் குறிப்பிடவில்லை. அது பேதுருவுமல்ல. 54அவர் மேற்படி வசனத்தில் குறிப்பிடும் பாறையானது, பேதுருவுமல்ல, அல்லது ஆண்டவர் தன்னைக் குறித்தும் குறிப் பிடவில்லை. பிராடெஸ்டெண்டுகள் இயேசுவின் மேல் சபை கட்டப் பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அவர், தன் மேலேயே சபையைக் கட்டினார் என்று கூறுகிறார்கள். அதுவும் தவறு. நன்றாகக் கவனித்தீர்களானால், சபையானது இயேசுவின் மேலும் கட்டப்படவில்லை. பேதுருவின் மேலும் கட்டப்படவில்லை. அது வெளிப்படுத்துதலின் மேல் கட்டப்பட்டுள்ளது. ...மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். பாருங்கள்! நான் உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். ஏதேன் தோட்டம் இருந்தபொழுது, வேத வாக் கியங்கள் எழுதப்படவேயில்லை. அதன்பின்பு, காயீன், ஆபேல் ஆகிய இருவாலிபர்களும் தேவனிடம் சகாயம் பெற ஒரு பலி செலுத்த விரும்பினர். அவர்கள் செய்ய விரும்பிய போது, காயீன் வந்து ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆபேலும் ஒரு பலி பீடத்தைக் கட்டினான். இவ்வளவுதான் தேவை தேவனை ஆராதிக்க என்பதாக இருக்குமானால், காயீனை ஆக்கினைக்குட்படுத்தியதில் தேவன் அநீதியுள்ளவராயிருப்பார். சரி, அதன் பிறகு, காயீன் பலி செலுத்தினான். ஆபேலும் பலி செலுத்தினான். இருவருமே தேவனுக்கு பலி செலுத்தினார்கள். காயீன் தொழுது கொண்டான். ஆபேலும் அவ்வாறே செய்தான். ஆபேல் செய்த யாவையும் காயீனும் செய்தான். 55எனவே வெறுமனே ஒரு சபைக்குச் செல்லுதல், ஒரு சபையைச் சார்ந்திருத்தல், காணிக்கை செலுத்துதல், தேவனை தொழுது கொள்ளுதல் என்று பெயருக்குச் செய்வதே போதும் என்று தேவன் எதிர்பார்ப்பாராகில், அவ்வாறே நடந்து கொண்ட காயீனை தேவன் ஆக்கினைக்குள்ளாக்கியதில் அநீதியுள்ளவர் என்றாக்கப்படுவாரே. ஆனால், நீங்கள் கவனியுங்கள்! ஆபேல் ஒரு வெளிப் பாட்டினால், தங்களை ஏதேன் தோட்டத்தினின்று வெளியேறச் செய்தது வெறும் ஒரு கனியைத் தின்றுவிட்டதினால் அல்ல என்பதை அறிந்திருந்தான். மாம்ச சிந்தையுள்ளவர்கள், ஒரு கனியைத் தின்றது தான் காரணம் என்று எண்ணுகின்றனர். ஆபேல் நிலத்தின் கனிகளைக் கொண்டு வந்தான், தேவன் அதை நிராகரித்தார், ஆனால் அது வெளிப்படுத்தப்பட்டது... மன்னி யுங்கள், ஆபேல் அல்ல, காயீன், தான் அதைச் செய்தான். காயீன் நிலத்தின் கனிகளை காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஏனெனில், கனியைத் தின்றதினால் தாங்கள் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாக காயீன் கருதியிருந்தான். ஆனால் வெளிப்பாடு எப்படியுள்ளது என்பதைக் கவனியுங்கள். வெளிப்பாட்டோடு மற்ற கருத்துக்கள் எப்படி ஒத்திருக்கவில்லை என்பதை கவனியுங்கள். அது இன்று எவ்வாறு புண்படுத்துகிறது என்பதைக் கவனியுங்கள். ஆனால் மனிதனை ஏதேன் தோட்டத்தை விட்டு விரட்டியதற்குக் காரணம், அவன் ஒரு வெறும் கனியைத்தான் புசித்தான் என்பதினால் அல்ல. நிச்சயம் ஏவாள் வெறும் ஆப்பிள் பழத்தை சாப்பிடவில்லை. ஆப்பிள் தான் ஏவாள் புசித்தாள் என்றால், ஆப்பிள் புசிப்பதனாலா அவள் தான் நிர்வாணி என்று கண்டு கொண்டாள்? இல்லை. கனி புசித்தல் என்ற காரியத்தை ஏவாள் செய்ததானது, அவள் கொண்டிருந்த காமவிகார உடலுறவைக் குறிக்கிறது. அவ்வாறு தான் அது இருந்தது. 56நாம் அதைக் குறித்து ஒரு பாடமாக படிப்போம். நமக்கு அதற்கு வேத வாக்கியங்கள் உண்டு, அவைகளுக்குள் நாம் ஆராயும்படி திரும்பிச் செல்லுவோம். ஆனால் அவர்களுக்கோ, அப்படியல்லவென்று நிரூபிக்க ஒரு வேத வசனம் கூட கிடை யாது. சிலர் கூறுகிறார்கள், “ஏவாள், 'கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்...' என்றாளே'' என்கிறார்கள். ஆம், ஐயா விபச்சாரியும் அவ்வாறே கூறுகிறாள் தேவன் எல்லா உயிர்களையும் உருவாக்குகிறார். ஆனால் அது நெறிகுலைந்த நிலையில் வந்த ஜீவனாகும். அந்தப் பையனின் (காயீன்) சுபாவத்தைக் கவனித்துப் பாருங்கள். அவன் தன் தந்தையினால் உண்டா யிருந்து, தன் தந்தையைப் போலவே, பகையுணர்வு, கீழ்த்தரம், கொலைகார குணம் இவற்றையுடைய வனாயிருந்தான். பார்த்தீர்களா? ஆபேலின் பெற்றோர் ஒருவேளை அவனிடம், தோட்டத்தில் மரங்கள் உண்டாயிருந்தன என்றும், அவற்றின் கனிகள் அவை களில் உண்டாயிருந்தன என்றும் சொல்லியிருக்கக் கூடும். அப்படி யிருந்தும், அவன் எவ்வாறு காரியத்தை அறிந்து கொண்டான்? அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆபேல் போய் இரத்தத்தையுடைய ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து வந்தான். உயிருக்கு ஈடாக ஜீவனுள்ள ஒன்றை பலியாகக் கொடுக்க, அவன் இரத்தமில்லாத ஒரு மரத்தின் கனியைக் கொண்டு வரவில்லை. அவன் ஆப்பிள்களையோ, வாழைப்பழங்களையோ அல்லது பேரிக்காய் கனிகளையோ கொண்டு வரவில்லை. ''ஆனால் ஆபேலோ...'' ஆவிக்குரிய வெளிப்படுத்துதலினாலே... “தேவனுக்கு மேன்மையான பலியைச் செலுத்தினான். தேவனே அதைக் குறித்து சாட்சி கொடுத்தார். ஏனெனில் அது அவனுக்கு விசுவாசத்தினாலே வெளிப்படுத்தப்பட்டது. 57அங்கே தான் தேவன் தம் சபையைக் கட்டுகிறார். “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை (ஒரு வேதகல்லூரியில் இதை கற்கவில்லை. யாரோ உனக்கு எங்கோ இதைப் போதிக்கவில்லை) ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்''. அங்கே அனைத்தும் வெளிப் படுத்துதலின் மேல் உள்ளதைப் பார்க்கிறோம். சபை யானது முழுவதும் வெளிப்படுத்துதலின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. ”இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடா கிய கன்மலையின் மேல் நான் என் சபையைக் கட்டுவேன்'' என்ப தாக அது உள்ளது. நீங்கள் ஒருவேளை உங்களது போதகர் சொல்லுவதையோ, அல்லது உங்கள் வேதக்கல்லூரி கூறுவதையோ அல்லது உங்களது சபை கூறுவதையோ நம்பிக்கொள்ளக் கூடும். ஆனாலும் அது சரியல்ல. நாவன்மையுடன் நீங்கள் அதைக் குறித்து விளக்கக் கூடும். ஆனால் தேவனானவர், இயேசு கிறிஸ்துவானவர் தன் குமாரன் என்பதையும், அவரது இரத்தத்தால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். ''அவர் எனது இரட்சகர்'' என்ற அந்த வெளிப்பாட்டின் மேல் உள்ளது. 58இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை“ (மத்.16:18).. எனவே, காரியம் இப்படியிருக்கிறபடியினால், ஏன் சாத் தானானவன் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை வெறுக் கிறான் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்படும் எந்த வெளிப்பாட்டையும் சாத்தானானவன் எதிர்க் கிறான். எனவே தான் அவன் இந்த ஊழியத்திற்கு மிகவும் எதிராக இருந்து வருகிறான். ஏனெனில்... அது என்ன? அது கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. உலகப் பிரகாரமான சபையானது, தன்னுடைய மகத்தான ஸ்தாபனங்களையும் நிறுவனங்களையும் உடையதாயிருக்கட்டும், அது தனக்கு உரித்ததான தனது அலங்காரமான மிருதுவான செய்தி களோடு போகட்டும், அவ்வாறு அவர்கள் இருக்கும் வரையிலும், சாத்தான் அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட் டான். அவர்களுக்கு எந்தத் தொல்லையுமில்லை. யாவரும் அவர்களை முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுகின்றனர். 59விசுவாசிகளை பின் தொடரும் அடையாளங்கள் இன்னின்ன என்று தேவன் சொன்ன வாக்குப்படி அடையாளங்கள் தனது சபைக்குள் வல்லமையோடு வெளிப்பட்டு, சபையில் மீண்டும் பரிசுத்த ஆவியின் மூலமாக தேவன் கிறிஸ்துவை வெளிப் படுத்தும் காலம் வருகிறது. அப்பொழுது சாத்தானானவன், அதற்கெதிராக கிரியை செய்வதற்காக எழும்புகிறான். இவ்வாறு கிறிஸ்து சபையில் வெளிப்படுவது நடைபெறுகிற வரையிலும், நீங்கள் எத்தனை சபைகளில் சேர்ந்தாலும் சாத்தான் கவலைப்படு வதில்லை. ஆனால் கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், அவர் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள் என்றும் வெளிப் படுத்தும் போது, வேறு கிரியைகளை அல்ல, அவர் செய்த அதே கிரியைகளை... சாத்தான் கிரியை செய்ய ஆரம்பிக்கிறான். 60''.... என்னை விசுவாசிக்கிறவன்...'' யோவான் 14:12ல் “என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நான் செய்த அதே கிரியைகளையும், அதைவிட மேலான கிரியைகளையும் செய்வான்'' என்று இயேசு கூறினார். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள்... ஏனெனில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மிகப் பெரியதாயிருக்கும் என்று கிறிஸ்து தாமே பிரசங்கிக்க முடியாது. இயேசுவால் பரிசுத்தாவியின் அபிஷேகத்தைக் குறித்த செய்தியை கொண்டு வரமுடியவில்லை. ஏனெனில் பரிசுத்த ஆவி அப்பொழுது அருளப்பட்டிருக்கவில்லை. ஆனால் இயேசு வந்து தனது ஜீவனை தியாக பலியாக்கியபோது, பரிசுத்த ஆவியானவர் திரும்பி வர முடிந்தது. அதன்பின்பு, அவர்கள் ஜனங்களுக்கு நித்திய ஜீவனைக் குறித்து பிரசங்கிக்க முடிந்தது. இதுதான் 'பெரிய கிரியைகள்'' ஆகும். ஆனால் அற்புத அடையாளங்கள் விசுவாசியைத் தொடரு வதைப் பற்றி இயேசு தெளிவாகச் சொன்னார், மாற்கு சுவிசேஷம் 16ம் அதிகாரத்தில், “உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று கூறினார். எது வரைக்கிலும் போக வேண்டும்? உலகமெங்கும் போக வேண்டும். யாருக்கெல்லாம் பிரசங்கிக்க வேண்டும்? சர்வ சிருஷ்டிக்கும் பிரசங்கிக்க வேண்டும். சுவிசேஷமானது எது வரைக்கிலும் பிரசங்கிக்கப்படுகிறதோ, அது வரையிலும் இந்த அடை யாளங்கள் விசுவாசிக்கிறவர்களை பின்தொடரும். சகோதரனே, அது வெளிப்பாடாக ஆகி வரும்போது, அப்பொழுது நீங்கள் இராஜ்யத்திற்கு சமீபமாயிருக்கிறீர்கள். ''இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை''. 61ஏனெனில், மோசேயைப் போல், வனாந்தரத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள எந்த ஒரு மனிதனுக்கோ, அல்லது மனுஷிக்கோ தேவனுடைய வெளிப்பாடு பரிசுத்த ஆவியின் மூலமாக பிரத்தியட்சமாக்கப்படுகிறது. ஆகையால் அவன் அசைக்கப்படுவதில்லை. அவன் அப்பொழுது, எவ்வளவு தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆகிவிடுகிறான். சாத்தான் வெளிப்பாட்டை வெறுக்கிறான். அவன் அதை விரும்புவதே கிடையாது. அது அவனது திட்டத்தையெல்லாம் கவிழ்த்துப் போடுகிறது. இந்தப் புத்தகத்தின் தன்மையை ஆராயும்போது, யோவான் அதை எழுதவில்லை என்பதாக காண்பிக்கிறது. அது சரிதான். அதாவது யோவானின் சொந்த எழுத்துக்கள் அல்ல, அதாவது இதன் ஆக்கியோன் யோவான் அல்ல. ஆனால் யோவான் தான் அதை எழுதினான். ஆனால் அவை அவனுடைய ஊக்க உணர் வல்ல. அவைகள் தேவனுடைய ஆவியினால் ஊக்கமூட்டப்பட் டவையாகும். அதுதான் அப்புத்தகத்தை எழுதியது. 62நல்லது, வசனம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும் கேட்கிற வர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளு கிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது'' வெளி.1:3 இப்பொழுது, “காலம் சமீபமாயிருக்கிறது'' என்ன? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முழுமையான வெளிப்பாடு அவரது சபைகளுக்கு தெரியப்படுத்தும் போது, காலம் சமீப மாயுள்ளது. காலங்கள் செல்லச் செல்ல, அது அவர்களுக்கு வெளிப்படுகிறது. நாம் இப்பொழுது சரியாக கடைசி காலத்தின் முடிவில் இருக்கிறோம். எனவே நாம் இப்பொழுது உண்மையிலேயே உலகத்தின் இறுதிக் காலத்தில் இருக்கிறோம். இந்த வாரம் முடிவு பெறு முன்னர், தேவன் நம்மோடு இருக்கிறபடியால், அவரது உதவியைக் கொண்டு, நாம் தாமே சபைக் காலங்களின் முடிவில் இருக்கிறோம் என்பதை நிரூபிப்போம். நாம் தாமே இப்பொழுது பிலதெல்... லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம். இக்காலமானது எல்லா காலங்களின் முடிவாக இருக்கிறது. அரசியல் உலகத்தின் முடிவில் நாம் இருக்கிறோம். இயற்கையான உலகத்தின் முடிவில் நாம் இருக்கிறோம். எல்லாம் முடிவடையும் தருவாயில் நாம் இருக்கிறோம். லௌகீக காரியங்கள் எல்லா வற்றின் முடிவிற்குள் நாம் வந்துவிட்டோம். முடிவில்லாத ஒன்றுக்குள் பிரவேசிக்க ஆயத்தமாக இருக்கிறோம். 63நான் அன்றொரு நாள் ஷ்ரீவ்போர்ட் அல்லது வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கையில், நான் எல்லாவற்றையும் பார்த்து, ''மரங்கள் யாவும் செத்துக் கொண்டிருக்கின்றன, புற்கள் சாகின்றன, மலர்கள் சாகின்றன, நான் மரித்துக் கொண்டிருக் கிறேன். உலகமானது மரித்துக் கொண்டிருக்கிறது. யாவும் மரித்துக் கொண்டிருக்கின்றன, உலகத்தில் உள்ள யாவும் மரித்துக் கொண்டிருக்கின்றன'' என்று கூறினேன். இந்த காலை வேளையில் இங்கே அமர்ந்திருக்கிற நாம் யாவரும் மரித்துக் கொண்டே யிருக்கிறோம். நிச்சயமாகவே ஏதோ ஒரு இடத்தில் ஒரு உலகம் உள்ளது, அங்கே ஒன்றும் மரிப்பதில்லை. யாவும் மரித்துக் கொண்டிருக்கிற ஓர் உலகம் உண்டென்றால், ஒன்றுமே மரணமடையாத உலகம், என்றுமே ஜீவித்துக் கொண்டிருக்கும் உலகம் ஒன்று இருக்கத் தான் வேண்டும். அப்படிப்பட்ட உலகைத் தான் நாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அங்கே மரங்கள் முதற்கொண்டு யாவும் அழியாமல் நிலைத்து நிற்பவையாகும். யாவும் அழியாமையைத் தரித்துக் கொண்டிருக்கும் அவ்வுலகுக்கு, தேவ மகிமையினால் நிலைபெற்றிருக்கும் அவ்வுலகுக்குப் போகப் போகிறோம். வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் முதலாம் அதி காரத்தின் முதல் மூன்று வசனங்களில் உள்ள அடிப்படையான காரியங்களை சற்றுத் திரும்பிப் பார்ப்போம். 1ம் வசனம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல். 2ம் வசனம், ஒரு தூதனால் யோவானுக்கு இது அருளப்பட்டதைப் பற்றி கூறு கிறது. 3ம் வசனம் ஆசீர்வாதங்களை உரைக்கிறது. இதை வாசிக் கிறவர்களுக்குரிய ஆசீர்வாதங்களைக் கூறுகிறது. இதை உங்களால் வாசிக்க முடியாவிட்டால், இதை வாசிக்க கேட்டாலும் ஆசீர் வாதம் உண்டு. “இதை வாசிக்கிறவன் பாக்கியவான்'' உங்களால் படிக்க இயலாது என்றால், ”இதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான், காலம் சமீபமாயிருக்கிறது. 64யோவான், இதை வாசிக்கிறவனும், இதை வாசிக்கக் கேட் கிறவனும் பாக்கியவான் என்று எழுதுகிறான். இதைக் குறித்த அர்த்தம் என்னவெனில், நான் இதைப் பற்றி கருதுவது என்ன வெனில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசாரியன் ஒவ்வொரு நாள் காலையிலும் வேத வாக்கியங்களை வாசிக்கும்படி எழுந்து நின்று வாசிப்பான், அதை சபையார் வாசிக்கக் கேட்பர். அந்நாட்களில் அநேகருக்கு வாசிக்கத் தெரியாது. எனவே தான் அவர் சொன்னார், “இதை வாசிக்கிறவனும், இதை வாசிக்கக் கேட் கிறவனும் பாக்கியவான்'' என்று. வாசிக்கிறவனும், வாசிக்கக் கேட்கிறவனும் என்பதைப் பாருங்கள். இதை வாசிக்கிறவனும், அதை வாசிக்கக் கேட்கிறவனும் பாக்கியவான். எனவே, நீங்கள் அமர்ந்து, இதை வாசிக்கக் கேட்டாலே ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ”இதை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும் பாக்கியவான்,'' காலம் சமீபமாயிருக்கிறது. இப்பொழுது 4 முதல் 6 முடிய உள்ள வசனங்கள் சபைக்கு வாழ்த்துத் தெரிவித்தலையுடைதாயிருக்கின்றன. இப்பொழுது 4ம் வசனம் முதல் 6ம் வசனம் முடிய நாம் எடுத்துக் கொள்வோம். 65இவ்வசனங்களை நாம் ஆராயும் முன்பு, நீங்கள் நன்கு சிந்தித்துப்பார்க்க நான் விரும்புகிறேன். அது என்ன வாயிருக்கிறது? அது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப் படுத்துதலாயிருக்கிறது. அங்கே தேவன் காலத்திரையை நீக்கிக் காண்பிக்கிறார். இயேசு இப்பூவுலகில் இருக்கையில், காலத்திரை இருந்தது. எனவே அவரால் காலத்திற்கு அப்பால் பார்க்க முடியவில்லை - சபைக் காலங்களையும், அவைகளில் என்ன சம்பவிக்கும் என்பவைகளையும். எனவே, தேவன் அத்திரையை நீக்கினார், அதை முன் கூட்டியே நீக்கி, ஒவ்வொரு சபைக் காலத்திலும் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை உள்ளே சென்று காணும்படி யோவானுக்கு அருளினார். அவன் அவைகளைப் பார்த்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி ஏழு சபைகளுக்கு அனுப்பினான். அது என்ன? கிறிஸ்து, தான் கிரியை நடப்பிக்கும் தனது நாட்களுக்குள்ளாக வெளிப்படுத்தப்படுகிறார். இப்புத்தகம் முழுவதும் அவரது கிரியை முழுவதும் நிறைந்ததாக உள்ளது. இது கிறிஸ்து அளித்த ஒரு தீர்க்கதரிசன புத்தகமாகும். தேவன் தனது தூதனைக் கொண்டு யோவானுக்கு சொல்லியனுப்பி, யோவான் எழுதித் தந்தது இப்புத்தகம். இதை வாசிக்கிற, கேட்கிற எவருக்கும் ஆசீர்வாதமுண்டு, இவை யாவும் நிறைவேறுகை யில், காலமானது சமீபித்துவிடும். இப்பொழுது, நமக்கு ஒரு நல்ல அடிப்படை கிடைத்து விட்டது. நாம் சபையை சிந்தையில் கொண்டுள்ளோம் என்பதை நினைவு கூருங்கள். ஒரு பக்கத்தில் சபையானது ஆரம்பிக்கிறது. மற்றொரு பக்கத்தில் சபையானது முடிவடைகிறது. திங்கள் இரவில் நாம் சபைக் காலங்களைக் குறித்து படிக்கையில் இன்னும் விபரமாகப் பார்ப்போம். யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிற தாவது; இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவ ராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்... உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக'' வெளி.1:4-5 66இப்பொழுது, இப்பாகத்திலுள்ள அடையாளச் சின்னங் களில் இரகசியமான, ஆழமான காரியங்கள் அடங்கியுள்ள பகுதிக்குள் நாம் போய்க் கொண்டிருக்கிறோம். ஆசியா மைனரிலுள்ள ஏழு சபைகளுக்கும் இது எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்கு எழுதப்பட்டிருந்த அக்காலங்கள், அவர்களுடைய எதிர்வரும் காலங்களில் வரவேண்டியிருந்தது. அவர் அவர்களை அவர்களுடைய கிரியைகளுக்காகவும், அவர்கள் செய்த வைகளுக்காகவும், போற்றி புகழுகிறார். ஆனால் ஆசியா மைனரிலுள்ள ஏழு சபைகளுக்கும் இது கூறப்பட்டுள்ளது. ஆசியா மைனர் என்ற பிரதேசமானது, முழு ஆசிய கண்டமல்ல. அதிலுள்ள ஒரு சிறு பிரதேசமாகும். ஆசியா மைனர் என்பது, அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா அல்லது இந்தியானா மாநிலத்தின் அளவுக்கொப்பாயுள்ள பரப்பளவைக் கொண்ட ஒரு பகுதியாகும். இச்சிறிய பிரதேசத்தில் தான் அவ்வேழு சபைகளும் அமைந்திருந்தன. அக்காலத்தில், இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவ்வேழு சபைகளில் காணப்பட்ட தன்மை அல்லது குணாதிசயம், ஏழு சபைக் காலங்களிலும் வரப்போகும் சபைகளின் தன்மையை பிரதிபலித்து வெளிப்படுத்துகிறதாயிருந்தன. அதைக் குறித்ததான வரலாற்றுக் குறிப் பிலிருந்து நான் இப்பொழுது இங்கே படிக்கவிருக்கிறேன். இதை வாசிக்கக் கேட்டும், கவனிக்காதவன் சபிக்கப்பட்டவன்''. 4ம் வசனத்திலிருந்து ஒரு காரியத்தை விளக்கிக் கூறும் கட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். ''... இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவராலும், அவருடைய சிங்கா சனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்...'' இப் பொழுது, இந்த 'ஆவிகள்'' என்பதைப் பற்றி பின்னால் பார்ப்போம். 7ம், 8ம் வசனங்களிலும் கூட மீண்டும் ஏழு சபைகளுக்கு கூறப்படுவதைக் கவனியுங்கள். “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய...'' (ஒரு சமயத்தில்) இருந்தவரும், இப் பொழுது இருக்கிறவரும், மற்றும் வருகிறவருமானவர். இங்கே தானே அவர், தனது கிரியையின் மூன்று விதமான தோற்றத்தை தெரியப்படுத்துகிறார். இதைக் குறித்து இன்னும் ஒரு நிமிடத்தில் பார்ப்போம். ஆனால் 8ம் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமை யுள்ள கர்த்தர் நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமு மாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார். வெளி. 1:8 67இப்பொழுது நாம் 4,8 ஆகிய வசனங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளுவோம். இரண்டும் ஒரே கருத்தையுடையவை. இரண்டும் ஒன்றே. “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவரு மானவர்'' என்று அவர் கூறுகிறார். சபைக்கு முன்பாக தேவன் எதை வைக்க விரும்புகிறார்? தனது தெய்வீகத்தை! இன்றைக்கு மக்கள் அவரை வெறும் ஓர் தீர்க்கதரிசியாக வருணிக்க விரும்பு கின்றனர். அவர் தீர்க்கதரிசியை விட மேலானவர். வேறு சிலர் அவரை மூன்று தேவர்களாக்க முயலுகின்றனர். அவர் மூன்று தேவர்களல்ல. அவர் ஒரே தேவன், மூன்று வித அலுவல்களில் ஜீவிப்பவர். ஒரே தேவனின் மூன்று வித தோற்றங்கள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், இதுதான் அந்த வெளிப்படுத்துதலாயிருக்கிறது, ''... கேட்கிற எவனும், இப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளை கைக்கொள்ளாமற் போனால், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனது பங்கு எடுத்துப் போடப்படும்''. இயேசு தன்னை இங்கே மூன்று தேவர்களாக வெளிப்படுத்திக் காண்பிக்கவில்லை. ஆனால் ஒரே தேவனும் மூன்று அலுவல்களும், ஓ! சிறிது நேரத்தில் இதைப் பற்றிய காரியமானது, இன்னும் சீரிய முறையில் உன்னதமாக இருக்கப் போகிறது. அப்பொழுது, நாம் அந்த சபைக் காலங்களுக்குள் சென்று, எப்பொழுது இந்த உன்னத வெளிப்பாட்டை அவர்கள் இழந்தார்கள் என்று காணப் போகிறோம். தேவத்துவத்தைக் குறித்த விஷயம் நிசாயா ஆலோசனை சங்கத்தில் ஒரு பெரிய பிளவுண்டாக காரண மாயிருந்தது. இரு மாறுபட்ட கருத்துக்களையுடையவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளின் தீவிரப் போக்கில் பிரிந்து சென்றனர். 68இக்கடைசி நாட்களிலும் அவர்கள் அதே காரியத்தைத் தான் மீண்டும் செய்திருக்கிறார்கள், மீண்டும் நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முன்பிருந்த காலம் போல, ஏனெனில் மீண்டும் வேறொன்று வரப்போகிறது; நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமாக உள்ளதோ, அதே விதமாக கத்தோலிக்கரும், பிராடெஸ்டெண்டுகளும் ஒன்றாக இணைந்து ஏதாவதொன்றில் ஒத்துப் போகப் போகிறார்கள். காண்டர்பெரி ஆர்ச் பிஷப்பை கவனியுங்கள். யாவும் ஒன்று சேர குவிந்து கொண்டிருக்கிறது. யாவும் ஒன்று சேர குவிந்து கொண்டிருக்கிறது. வேதத்தில் திரித்துவ தேவனைப் பற்றி உபதேசம் இல்லவே இல்லை. ஒரே ஒரு தேவன் தான் உண்டு. அது தானே வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதினால், முழு வேதப்பிரமாணமும் நிரூபிக்கப்பட்டு, கிறிஸ்து அதின் மேல் தன் முத்திரையைப் பதிக்கிறார். அதுதான் இது. இதனோடு யாராவது ஒன்றைக் கூட்டினாலோ அல்லது இதிலிருந்து எடுத்துப் போட்டாலோ, ஜீவபுஸ்தகத்திலிருந்து அவன் பெயர் நீக்கப்படும். எனவே, இப்புத்தகத்தை சுயநலமில்லாமல், திறந்த மனதுடன், திறந்த சிந்தையுடன் அணுகுங்கள். 69ஆதி சபையில் இருந்த சபை பிதாக்களில் அநேகர், நிசாயா ஆலோசனை சங்கத்தில், இரு மாறுபட்ட பெரும் கருத்து வேறுபாடுகளுக்குள் போனார்கள். அவர்கள் தங்களுக்குள் இரு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளுக்குள் போனார்கள். ஒன்று திரித்துவ தேவனை நம்புகிற திரித்துவக் கொள்கை. இன்னொன்று ஒருத்துவக் கொள்கை. அவ்விருக் கொள்கைக்காரர்களுமே இன்றும் நீடித்திருக்கிறார்கள். அவையிரண்டும் இரு நேர் கோடுகளைப் போல் ஒன்றையொன்று சந்திக்காமல் பிரிந்தே செல்லு கின்றன. திரித்துவமானது, மூன்று தனித்தனி ஆட்களாகிய தேவர்களைக் குறித்தது. மற்றொன்று ஒருத்துவக்காரர்களாவர். ஒன்று அடுத்ததைப் போன்றே தவறானது. எனவே அவர்கள் இருவருமே இரு நேர்கோடுகள் போல பிரிந்தே செல்கின்றனர். ஆனால் இங்கோ சத்தியமானது வெளிப்படுகிறது. இயேசு தாமே தம்முடைய சொந்த பிதாவாக இருக்க முடியாது. அல்லது... பரிசுத்தாவியையன்றி, பிறிதொரு பிதா இயேசுவுக்கு இருப்பாரெனில், அப்பொழுது, அவர் முறை தவறிப் பிறந்த குழந்தையாகிவிடுவார். ஏனெனில் பரிசுத் தாவியினால் தான் அவர் உற்பவித்தார். தேவனே தனது பிதா என்று இயேசு கூறினார். எனவே, பரிசுத்தாவியானவரும், தேவனும்... அது மத்தேயு 1:18. எனவே இதின்படி பரிசுத்தாவியானவரும், தேவனும் ஒரே நபராகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லை யென்றால் இயேசு இரு தந்தைகள் உடையவராகிவிடுவார். அப்படியல்ல. இயேசு “இம்மானுவேல்'' என்று அழைக்கப் பட்டார். அதற்கு ”தேவன் நம்மோடிருக்கிறார்'' என்று அர்த்த மாம். இயேசு இப்பூவுலகில் இருந்த போது, 'நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என்று கூறினார். 70நான் இது சம்மந்தமாக அனைத்து வேதவாக்கியங்களையும் இங்கு எழுதி வைத்துள்ளேன். ஏனெனில் இதைக் குறித்து உங்களுக்கு கேள்விகள் ஏதாகிலும் உண்டென்றால் அதற்குரிய பதிலைக் காணலாம். இங்கே , அவர், “இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவரு மானவர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர்'' என்று இவ்வாறாக அவரது மூன்று விதமான அலுவல்களைக் குறித்து தன்னை பிரத்தியட்சப்படுத்திக் காண்பிக்கையில், அவரை நீங்கள் அங்கே மூன்று தேவர்களாக உருவகப்படுத்திக் கொள்ள முடியாது. ஒரே தேவன் தான் உண்டு. ரோமானிய தேசங்களில், அவர்களுக்கு, பல தேவர்கள் உண்டு என்ற நம்பிக்கை இருந்தது. எனவேதான், நிசாயா ஆலோசனை சங்கத்தில் அவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட தேவர்கள் உண்டு என்ற கொள்கையைச் சொல்லுகிற திரித்துவக் கொள் கையை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் இறந்து போன தங்கள் மூதாதையர்களிடம் வேண்டுதல்கள் ஏறெடுத்தார்கள். (இப்பொழுது, இங்கே என்னிடம் அவர்களது வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன, அவைகளிலிருந்து நான் மேற்கோள் காட்ட முடியும்). ரோமானியர்கள் இறந்து போன தங்களது மூதாதை யர்களிடம் வேண்டுதல் செய்யும் மூட நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அதினால் தான் அவர்கள் கிறிஸ்தவத்தை தழுவிய போதும், தங்களுக்கு தங்களுடைய பழைய அஞ்ஞானக் கொள்கையின்படியே, கிறிஸ்துவத்திலும், பரிசுத்த சிசிலியா, பரிசுத்த மார்கஸ், இன்ன பரிசுத்தவான், இன்ன பரிசுத்தவான் என்று, இவ்வாறு பரிசுத்த வான்களை மத்தியஸ்தர்கள் என்று கூறி பரிசுத்தவான்களிடம் வேண்டுதல் செய்யும் மூட நம்பிக்கையை உள்ளே புகுத்தினார்கள். 71அப்போஸ்தலனாகிய பேதுருவும் “தேவனுக்கும் மனுஷருக் கும் மத்தியஸ்தரும் ஒருவரே, அவர் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு...'' என்று கூறினான். ஒருவன் தான். அவர்களுக்கு திரித்துவ தேவன் இருக்க வேண்டியதா யிருந்தது. ஏனெனில், ஏற்கனவே அவர்களது அஞ்ஞான மதத்தில் அவர்களுக்கு ஜூபிடர், மார்ஸ், வீனஸ் என்ற தேவர்கள் உண்டு. “எல்லாம் ஒரே தேவனுக்குள் இருந்தது என்று ஒரே தேவன் மேல் எல்லாவற்றையும் சுமத்தக் கூடாது'' என்று அவர்கள் கூறி, தேவனை மூன்று, ஆட்களாக, அதாவது, தேவன் மூன்று அலுவல்களில் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதற்குப் பதிலாக, தேவனை மூன்று கூறாக்கி, அவரை மூன்று வெவ்வேறு ஆட்கள், மூன்று தேவர்கள் என்று பிரித்தார்கள். 72ஆனால் இங்கே வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் அவர் தன்னை யார் என்று தெளிவாகக் கூறுகிறார். “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமான சர்வ வல்லமையுள்ள கர்த்தர்'' இதை பற்றி இன்னும் சிறிது நேரத்தில் பார்ப்போம். அவர், ''நான் அல்பாவும் ஓமெகாவும்'' என்று கூறினார். A முதல் B முடிய உள்ள அனைத்தும் இவரே. (அல்பா முதல் ஓமெகா முடிய - இது கிரேக்க மொழி அகர வரிசையாகும்). 'பள்ளத்தாக்கின் லீலி, சாரோனின் ரோஜா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர், தாவீதின் வேரும் சந்ததியு மானவர்''. அவரே தேவன். 1 தீமோத்தேயு 3:16, ''அன்றியும், தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிற படியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப் பட்டார். ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார். தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங் கிக்கப்பட்டார். மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப் பட்டார்.'' தேவன்! அவர் மூன்றாவதான ஆள், அல்லது வெறும் ஒரு தீர்க்கதரிசியல்ல, தேவன் தாமே மனித உருவத்தில் தோன்றிய காரியம் அது. இதைப் பற்றிய விஷயம் வெளிப்படுத்துதலினால் தான் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவன் ஆதியில் மகத்தான யேகோவாவாக, இஸ்ரவேலுக்கு மேலாக அக்கினி ஸ்தம்பத்தில் நின்று அவர்களை நடத்தினார். அவர் தேவன், உடன்படிக்கையின் தூதனானவர். அவர் மலையின் மேல் இறங்கி வந்தபோது, மலை தீப்பற்றிக் கொண்டது, மலையிலிருந்து அக்கினி புறப்பட்டு வந்து, அந்தப் பத்துக் கற்பனைகளை எழுதிற்று. அப்பேற்பட்ட தோற்றத்தோடு பிரத்தியட்சமானது போது, அது “தேவனின் பிதா தன்மை '' என்று யூதர்களாகிய அவரால், தெரிந்து கொள்ளப்பட்ட அவரது ஜனங்களால் அழைக்கப்பட்டது. பின்பு, அதே தேவன் தானே, மரியாளின் கர்ப்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சரீரத்தை எடுத்து கன்னிப்பிறப்பில் பிறந்து பிரத்தியட்சமானார். (முன்பு செய்தது போல) மானிட வர்க்கத்தின் நடுவில் அவர் ஜீவித்து தனது கூடாரத்தை ஸ்தாபித்தார். அதே தேவன் தாமே மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். “கிறிஸ்துவில் தேவன் இருந்தார்'' என்று வேதம் கூறுகிறது. சரீரம் இயேசுவாயிருந்தது. இயேசுவாகிய அவருக்குள் சரீரப் பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் வாசமாயிருந்தது. இப்பொழுது நீங்கள் அவரை மூன்று ஆட்களாக கூறு போட முடியாது. மூன்று தேவர்களுக்கென்று ஞானஸ்நானம் கொடுக் காதீர்கள். ஒரேயொரு தேவன் தான் உண்டு. பார்த்தீர்களா? தேவன் ஒருவரே. அந்த ஒரே தேவன் தான் மாம்சமானார். அவர் கூறினார், ''நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். தேவனிடத்திற்குத் திரும்பிப்போகிறேன்.'' 73அவரது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் இவற்றின் மூலம் உலகிலிருந்து மறைந்து போன அவர், தமஸ்குவுக்கு போகும் வழியில் பிரயாணமாயிருந்த பவுலை சந்தித்து, அவனை 'சவுலே'' என்று அழைத்தார். ஒரு சப்தம் வந்து, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?'' என்று கேட்டது. அதற்கு அவன், 'ஆண்டவரே நீர் யார்? என்றான்''. 'அதற்கு கர்த்தர்... இயேசு நானே'' என்றார். அவர் அக்கினி ஸ்தம்பமாக இருந்தார். அவ்வொளி அந்த அப்போஸ்தலனின் கண்களை குருடாக்கியது. அதே இயேசுவானவர் பிதாவாகிய தேவனிடத்திற்குத் திரும்பிச் சென்றார். எனவேதான், “நான் சர்வல்லமையுள்ள கர்த்தர்'' என்று கூறினார். அவர் தாம் மாம்சமானதற்கு முன்பாக இருந்த அதே சாயலுக்கு திரும்பிவிட்டார். அவர் வாழ்ந்த அந்த சரீரம் - இயேசு என்று அழைக்கப்பட்ட, நாம் அறிந்துள்ள அம்மனிதன். 74பிரிய ஒருத்துவக் கொள்கைக்காரரே! நீங்கள் வெறும் 'இயேசு'' வின் நாமத்தில் மட்டும் ஞானஸ்நானம் கொடுக் கிறீர்கள். அதன் மூலம் நீங்கள் தவறு செய்கிறீர்கள். இன்று உலகில் நூற்றுக்கணக்கான இயேசு என்னப்பட்ட நபர்கள் உண்டு. ஆனால், ஒரேயொரு “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து'' தான் உண்டு. அவர் கிறிஸ்துவாகப் பிறந்தார். இயேசு என்ற பெயருடைய அநேக மனிதர்களை நானே சந்தித்திருக்கிறேன். ஆனால் ஒரேயொரு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் உண்டு, அவரே தேவன். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவை நாமங்கள் (பெயர்கள்) அல்லவே அல்ல. அவைகள் பட்டப் பெயர்கள் (வகிக்கும் பதவிக்கான உத்தியோகங்கள்) தாம். அவைகளுக்கு ஒரேயொரு நாமம் (பெயர்) உண்டு. “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று கூறும்போது. பிதா என்பது ஒரு பெயர் அல்ல, குமாரன் என்பதும் ஒரு பெயர் அல்ல, பரிசுத்த ஆவி என்பதும் ஒரு பெயர் அல்ல. அவைகள் ஒவ்வொன்றும் வகிக்கும் பதவியைக் குறித்த ஒரு பட்டம்தான். ”மானிடன்'' என்று கூறினால் அது எப்படி ஒரு பெயர் என்றில்லாமல், வெறும் பட்டமாகத் தான் இருக்கிறதோ, அவ்வாறு ஒரு பட்டம்தான். பரிசுத்த ஆவி எனும்போது, ஒரு மானிடன், அல்லது ஒரு ஆவி என்று சொன்னால் அதில் எவ்வாறு பெயர் என்று ஒன்று இல்லையோ, எவ்வாறு அது ஒரு வெறும் பட்டமாக இருக்கிறதோ, அவ்வாறே அது உள்ளது. பரிசுத்த ஆவி. ''பிதாவின் நாமத்தில்'' என்று கூறும்போது, இங்குள்ள பிதாக்களைப் பாருங்கள், உங்கள் குமாரர்களுடைய குமாரர்களைப் பாருங்கள். இங்குள்ள மானிடரைப் பாருங்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயர் அல்லவே அல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ற நாமத்திற்கு உள்ள பட்டங்கள்தான் அவை. 75அப்போஸ்தல சபையானது ஆதியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுத்தது. கத்தோலிக்க சபையானது நிறுவப்பட்டு, அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவக் கோட்பாட்டை ஏற்படுத்தி, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம்'' என்று கொடுக்க ஆரம்பிக்கிற வரையிலும், அதற்கு முன் இருந்த சபை யானது, ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்'' தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்கள். அவர்கள் இவ்வாறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆதி சபையில் ஞானஸ்நானம் கொடுத்து வரவில்லை, வேறு விதங்களில்தான் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று நிரூபிக்க நீங்கள் ஏதாவது ஒரு வேதவாக்கியத்தையோ, அல்லது அது சம்மந்தமான வரலாற்று சான்றையோ, உங்கள் கூற்றை நிரூபிக்க கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என்று நான் அறைகூவல் விடுக்கிறேன். வரலாற்று ஆசிரியர்களே, நீங்கள் உங்கள் வரலாறுகளைக் கொண்டு வாருங்கள் பார்க்கலாம். அவ்வாறு அவர்கள் கொண்டு வருவதற்கு அவர்களுக்கு சான்று ஏதும் இல்லை என்பதுதான் உண்மையாகும். கி.பி.304க்குப் பின்பு, ”தேவனாகிய பிதா, தேவனாகிய குமாரன், தேவனாகிய பரிசுத்த ஆவி' என்று மூன்று தேவர்களுக்காக, திரித்துவ ஞானஸ்நானமானது வந்தது. அது சுத்த அஞ்ஞானக் கொள்கையாகும். இந்த வாரம் முடியும் முன்பு, நான் உங்களுக்கு இதைப் பற்றிக் கூறுகிற புத்தகங்களிலிருந்து வாசித்ததும், வேதத்தி லிருந்தும் அதை நிரூபிப்பேன். இன்று காலையில் நாம் வெளிப் படுத்துதலைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அது எங்கே வருகிறது என்றும், எவ்வாறு அது காலங்கள் தோறும் நிலை பெற்று வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம். சகோதரனே! சத்தியத்திற்கு திரும்பு. நாம் கடைசி நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 76எபேசு சபைக்கு நாம் வரும் வரைக்கும் காத்திருங்கள். அதை நாம் லவோதிக்கேயா சபை காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து இவ்விரண்டு காலங்களின் நடுவில் என்ன சம்பவித்தது என்பதைப் பற்றிப் பார்ப்போம். எவ்வாறு அந்த உபதேசம் உள்ளே நுழைந்தது என்பதைப் பார்ப்போம். லூத்தரின் காலத்தில் கள்ள உபதேசம் நுழைந்த போது, “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. சர்தை என்ற வார்த்தைக்கே ”மரித்துப் போன '' என்று அர்த்தம். 1500 ஆண்டுக்கால இருண்ட காலத் தினூடே அவர்கள் சத்தியத்தை இழந்தார்கள். அது வரைக்கிலும் அக்காலத்தில் ஒவ்வொரு சபையும் அவ்வுபதேசத்தைக் கொண்டிருந்தனர். கி.பி.325ல் நிசாயா ஆலோசனை சங்கத்தில், அவர்கள் அந்த நாமத்தை அகற்றி விட்டு, அதிலிருந்து மூன்று தேவர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். “இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நானே'' என்று அவர் இங்கே கூறுகிறார். நிச்சயமாகவே, அவர் இப்பூமியில் மூன்று விதமான தொழில்களையுடையவராகக் காணப்பட்டார். அவர் இப்புவியில் இருந்த போது, மூன்று விதமான தொழில்களையுடையவராக இருந்தார். பூமியில் அவர் தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் பரலோகத்தில் ஆசாரியனாக இருக்கிறார். அவர் பூமிக்குத் திரும்பி வருகையில் அவர் இராஜாவாக இருப்பார். தீர்க்கதரிசி, ஆசாரியன், இராஜா, இருந்தவரும், இருப்பவரும், வருகிறவரு மானவர். “இருந்தவர்'' என்றால் ஒரு தீர்க்கதரிசியாக விளங்கிய இயேசு வாகும் அது. 'இருப்பவர்'' என்றால் ஆவிக்குரிய பலிகளை செலுத்தி வரும் நமது மகா பிரதான ஆசாரியர் அவர். அவர் நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கும் ஆசாரியனாவார். அவர் நமது மத்தியில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி அதை நிரூபிக் கிறார். தீர்க்கதரிசி, ஆசாரியன், மற்றும் இராஜா. ஆனால் ஒரே யொரு தேவன் தான். 77அவர் இப்புவியில் இருந்தபோது வார்த்தையாகிய தீர்க்கதரிசியாக இருந்தார். சற்று பின்னால் வெளிப்படுத்தின விசேஷத்தில் வேதமானது அவரை உண்மையுள்ள சாட்சி என்று அழைக்கிறது. ''உண்மையுள்ள சாட்சி என்பது தீர்க்கதரிசியைக் குறிக்கும். அவர் ஆசாரியனாயிருக்கிறார், அவர் வருகையில் அவர் இராஜாவாயிருப்பார். நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 15:3ல் படிக்கையில் அங்கே பார்க்கலாம்... நாம் அந்த வசனத்தை எடுத்து படிப்போம். அவர் இராஜாவாக இருப்பார் எனில், அவர் வருகையில் அவர் ராஜா என்று இருக்குமானால்... வெளிப்படுத்தின விசேஷம் 15ம் அதிகாரம் 3ம் வசனம். ''அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்த வான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும், சத்தியமு மானவைகள்''. வெளி. 15:3 அவர் பூமியில் இருக்கையில் என்னவாக இருந்தார்? தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் தீர்க்கதரிசி என்பதை ஜனங்கள் எவ்வாறு கண்டு கொண்டார்கள்? அவர் மேசியாவின் அடையாளத்தைச் செய்தார். அது தீர்க்கதரிசிக்குரியதாகும். ஓ, கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. அவர் வந்தபோது அவர்கள் அவரை எவ்வாறு அறிந்து கொள்ளாமல் போனார்கள்? அவர்கள் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்து இருந்தார்கள். அவர் மேசியாவின் அடையாளத்தை செய்து காண்பித்த போதிலும் அவர்கள் அவருக்கு செவி கொடுக்கவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். 'உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரி சியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக'' என்று மோசே கூறினான். அந்தத் தீர்க்கதரிசிக்கு செவி கொடாதவன் எவனோ அவன் தன் ஜனங்களின் நடுவே இராதபடிக்கு அறுப்புண்டு போவான் என்று மோசே கூறினான். 78அவர் இப்பூமியில் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். ஏன் அவ் வாறு இருந்தார்? “தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ள சாட்சி” யாக அவர் இருந்தபடியால். ஆமென்! அவர் மாம்சத்தில் பிரத்தியட்சமான தேவனுடைய வார்த்தையாவார். யோவான் 1ம் அதிகாரம் 1ம் வசனம், 14ம் வசனம். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத் திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி.... நமக்குள்ளே வாசம் பண்ணினார்”. அவர் தாமே, தேவனுடைய நித்திய வார்த்தைக்கான உண்மையும் சத்தியமுள்ள சாட்சியாயிருந்தார். அவர் வார்த்தை யாயிருந்தார். அவர் தேவனுடைய வார்த்தையாயிருந்தார். அவர் வார்த்தையாயிருந்தபடியினால், அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார். தேவனுடைய வார்த்தை அவருக்கு என்ன கூறிற்றோ அதை மட்டுமே அவர் பேச வேண்டியிருந்தது. ''பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்''. ''நானாக இந்தக் கிரியைகளைச் செய்யவில்லை, என்னில் வாசமாயிருக்கிற பிதாவே கிரியைகளைச் செய்கிறார். நானும் பிதாவும் ஒன்றா யிருக்கிறோம். என் பிதா என்னில் வாசமாயிருக் கிறார்'' என்று மனிதனாகிய, தேவனுடைய கூடாரமாகிய இயேசு கூறினார். 79தேவனுக்கு அநேக பட்டங்கள் உண்டு. யேகோவா, யேகோவா -யீரே, யேகோவா-ராஃபா, யேகோவா- நிசி. ஓ, அநேகம் உண்டு. அவருக்கு மீட்பின் தன்மையையுடைய ஏழு கூட்டுப் பெயர்கள் உண்டு. அவருக்கு அநேக பட்டங்கள் உண்டு. சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவையெல்லாம், ஆனால் அவருக்கு ஒரெயோரு மனுஷப் பெயர் உண்டு. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்ட போது, அவருக்கு இருக்கிற ஒரே யொரு மனிதப் பெயர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதாகும். கர்த்தராகிய கிறிஸ்துவாக அவர் பிறந்த எட்டு நாட்கள் கழித்து, அவரை பரிசுத்த ஆவியானவர் ''இயேசு'' என்னும் நாமத்தினால் அழைத்தார். அவரது தாய் அவருக்கு விருத்தசேதனம் செய்தாள். அவரை பரிசுத்த ஆவியானவர் “இயேசு'' என்று அழைத்தார். நான் ''பிரன்ஹாம்'' ஆகப் பிறந்து, ''வில்லியம்'' என நாமமிடப்பட்டது போல, அவர் ”கிறிஸ்து'வாகப் பிறந்து, “இயேசு'' என்று நாமம் சூட்டப்பட்டார். அவர் கிறிஸ்துவாகிய இரட்சகராகப் பிறந்து அதன் பின்பு, எட்டு நாட்கள் கழித்து, அவருக்கு ”இயேசு'' என்ற நாமம் சூட்டப்பட்டது. மேலும், அவர் மாம்சத்தில் பிரத்தியட்சமான மகிமையின் கர்த்தராமே. எனவே அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆவார். மகிமையின் தேவன் தாமே மாம்சத்தில் நமது மத்தியில் வெளிப்பட்டார். ஓ! அவர் அதோ அங்கே இருக்கிறார். பூமியில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். மகிமையில் ஒரு ஆசாரியனாக இருக்கிறார். அவர் ராஜாவாக வருகிறார். ஓ! நான் அதை விரும்புகிறேன். தீர்க்கதரிசி, ''வார்த்தையின் உண்மை யுள்ள சாட்சி''. அவர் ஆசாரியன்! “தனது சொந்த இரத்தத்தைக் கொண்டு தேவனுக்கு முன்பாக நிற்கிறார்''. அவர் ராஜா; ”பரிசுத்த வான்களின் இராஜா' அவர். அவர் உலக மக்களின் இராஜா அல்ல. அவர் பரிசுத்தவான்களின் இராஜா, உலக மக்களுக்கு லௌகீக அரசர்கள் என்னப்பட்டவர்கள் உண்டு. ஆனால் நமக்கு ஒரு ராஜாவும், அதற்குரிய ஒரு இராஜாங்கமும் உண்டு. எனவே தான் நாம் வித்தியாசமான முறையில் செயல்படுகிறோம். 80நானும் என் மனைவியும் பேசிக் கொண்டதைப் பற்றி சமீபத்தில் நான் கூறினேன். நானும் என் மனைவியும் ஒரு கடைக்குச் சென்றபோது, அங்கே ஏறத்தாழ ஒரு அற்புதத்தையே கண்டோம் என்று சொல்லலாம். அது ஒரு கோடைக் காலமாயிருந்தது. அங்கே ஒரு பெண்மணி ஒரு உடையுடுத்தியிருந்தாள். ''அது ஒரு ஆச்சரியமான காரியம்' என்றேன் நான். “என்னிடம் ஒரு காமிரா இருந்தால், அப்பெண்மணியின் படத்தை நான் எடுப் பேன்'' என்றேன். ஏனெனில், ஒரு பெண் எவ்வாறு முறையாக ஒழுங்காக உடுத்த வேண்டுமோ அதற்கேற்ப அவள் கணுக்கால் வரையிலும் உள்ள நீண்ட ஆடையை உடுத்தியிருந்தாள். ”இப்படிப்பட்ட ஒழுங்கான ஆடையுடுத்திய ஒரு பெண்மணியை நான் இப்பொழுது தான் முதல் தடவையாகப் பார்க்கிறேன்'' என்றேன். அவள் ஒரு முதல் தரமான பெண்மணி. என் மனைவி, என்னிடம், 'ஏன் பில்லி, நமது மக்கள் இவ் வாறு உடுத்துகிறார்கள், அவ்வாறு தான் உடுத்த வேண்டும் என்று நமக்கு கட்டளையுண்டா ?'' என்று கேட்டாள். “அவர்கள் நம்முடைய மக்களல்ல, அவர்கள் தேவனுடைய மக்கள், தேவனுடைய மக்களுக்கு பரிசுத்தம் தேவைப்படுகிறது'' என்று நான் கூறினேன். 81''நல்லது, அவர்கள் சபைக்குச் செல்லுகிறார்களல்லவா?'' என்று கேட்டாள். ''ஒரு குறிப்பிட்ட சபையில் அங்கே அந்தப் பாடகர் குழுவில் பாடும் ஒரு பெண்மணி இருக்கிறாள்'' என்றேன் நான். ''ஏன் அவர்கள் அவ்வாறு தவறாக உடுத்துகிறார்கள்?'' என்று என் மனைவி கேட்டாள். “மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட நிலையில் நாம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அவளுக்கு போதிக்கப்படவில்லை” என்று நான் பதிலளித்தேன். அவ்வாறு தான் காரியம் உள்ளது. லௌகீகமான மாம்சப் பிரகாரமான சபை ஒன்று உள்ளது. அதைப் பற்றி இவ்வாரத்தில் பார்ப்போம். ஆவிக்குரிய சபையும், மாம்சப் பிரகாரமான சபையும் உள்ளன. அவர்கள், மனிதனால் உண்டாக்கப்பட்ட சபைக்குள் பின்னிட்டு விழுகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாவரும் பின்னிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு, நாங்கள் இன்னின்னதை சார்ந்தவர்கள் என்று கூறு கிறார்கள். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, “நாங்கள் இந்த சபை, நாங்கள் அந்த சபை” என்று கூறுகிறார்கள், ஆதியில் சபையில் இவ்வாறு இருக்கவில்லை. அவர்கள், சபையை விட்டு வல்லமையை அகற்றிவிட்டு, அதை பேராயர் அல்லது போப் என்றொருவரின் அதிகாரத்திற்கு ஒப்புக் கொடுத்து விட்டார்கள். தேவன் தன் சபையில் இருக்கிறார், தன் ஜனங்களின் மத்தியில் இருக்கிறார், தன்னைத் தானே அவர் சபையின் ஜனங்களின் மூலமாக எங்கும் பிரத்தியட்சமாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது, இந்நாளில்... 82அவள், ''நாம் அமெரிக்கர்கள் இல்லையா?'' என்று கேட்டாள். “இல்லை, நாம் இங்கு வாழ்கிறோம், ஆயினும் நாம் அமெரிக்கர்கள் அல்ல, நாம் கிறிஸ்தவர்களாயிருக்கிறோம், நமது அரசு உன்னதத்திற்குரியது'' என்று நான் பதிலளித்தேன். நமது ஜீவன்கள் அங்கிருந்து வருகிறபடியால், நாம் அதற்குரியவிதமாக நடந்து கொள்கிறோம். ஏனெனில் நமது ஜீவன் ஒரு பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வந்திருக்கிறது. அது உலக மக்களினின்றும் வித்தியாசமாக நடந்து கொள்ளவும், உடையுடுத்திக் கொள்ளவும் செய்கிறது. நாங்கள் அக்கடையில் பார்த்த அப்பெண்மணி, நீண்ட தலைமுடியையுடையவளாயிருந்தாள். அவர்கள் தங்கள் முகங்களில் அலங்காரச் சாதனங்களைப் பூசுவதில்லை. குட்டைப் பாவாடைகளை அவர்கள் அணிவதில்லை. அவர்கள் உடலை நன்கு மறைத்து, நீண்ட ஆடைகளையே அணிந்து தங்கள் முடியை நீளமாக வளர்க்கிறார்கள். ஆகவே உன்னதத் திற்குரிய சுபாவமானது நம்மில் பிரதிபலிக்கிறது. உன்னதத்திலிருந்து வரும் அந்தப் பரிசுத்த ஸ்தலத்திற்குரிய ஆவியானது ஒரு மனிதனின் மேல் வந்திருக்கையில், அவன் புகைப்பதில்லை. வெற்றிலை, புகையிலை சுவைப்பதில்லை, பொய் சொல்லுவதில்லை, திருடுவதில்லை, அது அவர்களை பரிசுத்தமாக நடக்க செய்கிறது, ஒருவரையொருவர் சகோதரர்களாக அடை யாளங் கண்டு கொள்ளச் செய்கிறது. நீங்கள் அதைக் கண்டீர்களா? அதுதான் அது. நாம் ஒரு இராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். நமக்கு ஒரு ராஜா உண்டு. அவர் பரிசுத்தவான்களின் இராஜா. ''பரிசுத்த மாக்கப்பட்டவர்கள்'' என்ற வார்த்தையிலிருந்துதான் “பரிசுத்த வான்” என்ற வார்த்தை வருகிறது. 83ஒரு நபர் பரிசுத்தமாக்கப்படும் போது, பரிசுத்த ஆவியான வராகிய கிறிஸ்து அந்த இருதயத்தினுள் அசைந்து, அதன் மேல் ராஜாவாகிறார். ஓ, என்னே! அது உங்கள் இருதயத்தை ஆழமாகத் தொட வேண்டும். ஓ! பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய பாத்திரத்தினுள் பரிசுத்த ஆவியாகிய, இராஜாவாகிய கிறிஸ்து உள்ளே புகுந்து வாசம் பண்ணுகிறார். ஒரு ராஜாவுக்கு அவனது ஆதிக்கத்திற்குட்பட்ட நாடு உண்டு. ஓ! ஆமென். நீங்கள் முழுவதுமான பரிசுத்தவான்களின் இராஜாவால் ஆளப்படு கிறீர்கள். ஒரு இராஜ்யம்! பூமியிலுள்ள ஒவ்வொரு ராஜ்யமும் அணுசக்தியினால் அசைக்கப்படும். அவை அடித்து நொறுக்கப் படும். ஆனால் வேதமோ, ''அசைவில்லாத இராஜ்யத்தை நாம் பெறுவோம்...'' என்று கூறுகிறது. பரிசுத்தவான்களின் இராஜா! 84வேதத்திலும், பூமியிலும் கிறிஸ்துவுக்குரிய உலகிலுள்ள அடையாளச் சின்னங்களை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பூமியில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு தீர்க்கதரிசி வார்த்தை யாக இருக்கிறான். அது நமக்குத் தெரியும். ''தீர்க்கதரிசி'' என்ற பதத்திற்கு, 'தேவ வார்த்தையை தெய்வீக வியாக்கியானம் செய் பவர்'' என்பதே அர்த்தமாகும். இந்த தெய்வீக வார்த்தையானது எழுதப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிக்குள் தெய்வீக ஆவி வாசம் பண்ணுகிறது. பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசியானவன், “தேவன்'' என்று அழைக்கப்பட்டான். உங்களில் எத்தனை பேர் இதை அறிவீர்கள்? 'அவர்கள் தேவர்களாயிருக்கிறார்கள் என்று உங்கள் வேதத் தில் எழுதப்படவில்லையா?'' என்று இயேசு கேட்டார். நீங்கள் தேவர்களாயிருக்கிறீர்கள்... “தேவ வசனத்தைப் பெற்றுக் கொண் டவர்களை (தேவ வசனம் யாரிடத்தில் வந்ததோ அவர்கள் தான் தீர்க்கதரிசி) தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதமும் தவறாததாயிருக்க நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?'' என்று இயேசு கேட்டார். 85அவருக்குள் கர்த்தருடைய வார்த்தை நிரப்பப்பட்டிருந்தது. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. எனவே அவர் தேவன் என்னப்பட்டார். எனவே 'தீர்க்கதரிசி' என்ற பதத்திற்கு அர்த்தம் என்னவெனில்.... அத்தீர்க்கதரிசியின் வியாக்கி யானம் கலப்படம் செய்யப்படக் கூடாது. பார்த்தீர்களா! ''உங்க ளுக்குள் ஆவிக்குரியவனான ஒரு தீர்க்கதரிசி இருந்தால், கர்த்தராகிய நானே அவனோடே பேசுவேன், அவன் சொல்லுவது நிறை வேறினால் அவனுக்குச் செவி கொடுங்கள், ஏனெனில் நானே அவனோடிருக்கிறேன். ஆனால் அவன் சொல்லும் காரியம் நட வாமற் போனாலும், நிறைவேறாமல் போனாலும் இருந்தால் அவனுக்குச் செவி கொடுக்க வேண்டாம். நான் அவனை அனுப்பவில்லை'' என்று கூறினார். அவ்வாறுதான் நீங்கள் அதைக் கண்டு கொள்ள வேண்டும். அதன் பின்பு, நீங்கள் கவனியுங்கள், வார்த்தையின் தெய்வீக வியாக்கியானமானது, சபைக்குரிய கடைசி காலத்திய வெளிப்பாட்டுடன் முரண்படாமல் ஒத்துப் போக வேண்டும்.) அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் ஆவார். பூமியில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். தீர்க்கதரிசி ஒரு கழுகாக சித்தரிக்கப் படுகிறான். ஒரு தீர்க்கதரிசி கழுகு என்று கருதப்படுவதை எத்தனை பேர் அறிவீர்கள்? பறவைகளுக்குள்ளே நமக்கு இருக்கும் மிகவும் வலிமை வாய்ந்த ஒரேயொரு பட்சி கழுகு மட்டுமே. கழுகு தனது செட்டை களை விரித்தால், அதின் ஒரு முனை துவக்கி மறு முனை மட்டும் பதினான்கு அடி நீளமுள்ளதாக இருக்கிறது. கழுகு மிக மிக உயரமாக பறக்கக் கூடியது. வேறு எந்தப் பறவையும் அவ்வுயரத்தை எட்டிப் பிடித்து கழுகுடன் சேர்ந்து பறக்க முயற்சித்தால், தங்கள் சிறகுகள் பிய்ந்து போன நிலையில் உருக் குலைந்து போய் விழுந்து விடும். ஏன் அவ்வாறு உள்ளது? கழுகு சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிக மிக உயரமாக கழுகு பறக்கையில், அதனால் அவ்வளவு உயரத்தி லிருந்து கூர்மையாக பார்க்க முடியாமற் போனால் அது மிக உயரத்தில் பறக்கிறதினால் அதற்கு என்ன நன்மை? ஒரு வல்லூறின் கண்ணைப் பற்றி நீங்கள் புகழ்ந்து பேசினால், அப் பொழுது கழுகு கண்களை அதோடு ஒப்பிட்டுப் பாருங்கள் பார்க்கலாம். 86ஒரு பருந்து ஒரு வேளை பறக்கையில் ஒரு கோழிக் குஞ்சை பார்த்துவிடக் கூடும். அது சரிதான். இன்றுள்ள சில பருந்துகளின் நிலைமை அவ்வாறு தான் உள்ளது. ஆனால் கழுகோ, பருந்துக்கும் எட்ட முடியாத உயரத்தில் பறக்க முடியும். பருந்து கழுகின் உயரத்தை எட்டிப் பிடிக்க முயன்றால், அது மூச்சு முட்டி கஷ்டப் படும், இறக்க நேரிடும். கழுகு பறக்கும் உன்னத உயரங்களை பருந்தால் எட்டிப் பிடிக்க இயலவே இயலாது. வேறு எந்தப் பறவையும் தன்னை வந்து எட்டிப் பிடிக்க இயலாத அப்படிப் பட்ட மிகுந்த உயரத்தில் அது பறக்கையில், மிகவும் தூரத்திலுள்ளதையும், தெளிவாகப் பார்க்க அதற்கு முடியும். எனவே தான் தனது தீர்க்கதரிசிகளை “கழுகுகள்'' என்று தேவன் அழைக்கிறார். தீர்க்கதரிசியால் மிகத் தொலைவிலுள்ள காலத்தின் காரியங்களை பார்க்க முடியும், கழுகைப் போல். 87கிறிஸ்து பூமியிலிருந்த போது கழுகாயிருந்தார். அவர் மரித்த போது ஆசாரியனானார். அது அவரை ஆட்டுக் குட்டியாகவும் ஆக்கியது. அது சரிதானே? அவர் திரும்பி வருகையில் அவர் இராஜாவாக இருப்பார். எனவே அவர் சிங்கமாய் இருப்பார். ஆமென்! யூதா கோத்திரத்து சிங்கம்! ஆமென்! அவர் ஒரு கழுகு. ஒரு ஆட்டுக்குட்டி, மற்றும் அவர் ஒரு சிங்கம். ஆமென்! பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, தீர்க்கதரிசி, ஆசாரியன், மற்றும் அவர் ஒரு இராஜா, இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர்! அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமானவர். அவர் நித்திய தேவன். அருமையான சில கத்தோலிக்க மக்களை நான் கேட்க விரும்புவது என்னவெனில், நீங்கள், “தேவனின் நித்திய குமாரத்துவம், அதாவது தேவனோடு இயேசு கிறிஸ்துவுக்குள்ள நித்திய குமாரத்துவம்'' என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறான ஒரு வார்த்தையை நீங்கள் எவ்வாறு சொல்ல முடியும்? நான் ஒரு அறிவில்லாதவன், ஏழாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். ஆனால் நீங்கள் சொல்லுவதை விட தேவனைப் பற்றி எனக்கு சிறப்பாகத் தெரியும். 'குமாரன்' என்று சொன்னால், அதற்கு ஒரு துவக்கம் உண்டு என்று தெரிகிறது. எனவே, அவர் ஒரு குமாரன் ஆக இருந்து கொண்டு எப்படி துவக்கமும் முடிவுமில்லாத நித்தியமாகவும் இருக்க முடியும்? நித்தியத்திற்கு நாட்களின் துவக்கமும், முடிவுமில்லை. எனவே அவர் ஒரு நித்திய குமாரத் துவம் உடையவராக இருக்கவே முடியாது. ஏனெனில் குமாரத்து வத்திற்கு ஒரு துவக்கம் உண்டு, முடிவும் உண்டு. ஆகவே, அவர் நித்திய குமாரன் அல்லவே அல்ல. ஒரு குமாரனுக்கு ஒரு துவக் கம் உண்டு. அப்படியாயின் அவர் நித்தியமாயிருக்க முடியாது. 88பாருங்கள், அவர் நித்திய தேவனாயிருக்கிறார். ஆனால் அவர் நித்திய குமாரன் அல்ல. மகிமை! சர்வ வல்லமையுள்ளவர் யேகோவா-யீரே, யேகோவா-ராஃபா, மாம்சத்தில் தோன்றினார். ''தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது''. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அக்கினி ஸ்தம்பமானது மக்கள் மேல் வந்த போது, அவர் தாமே தன்னையே மக்களுக்குள் பிரித்தளித்தார் என்பதை கவனித்தீர்களா? அக்கினி மயமான நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் இறங்கியது. தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? தனது சபைக்குள்ளாக அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும், ஆண்களும், பெண்களுமான அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும், தனது ஆவியின் பகுதிகளை, அதாவது தன்னைத் தானே அவர் பகிர்ந்தளித்தார். அப்படியிருக்க, எவ்வாறு ஒரு மனிதன் வந்து, “போப் ஒரு பரிசுத்த மனிதன், பிஷப் ஒரு பரிசுத்த மனிதன்'' என்று கூற முடியும்? நமக்குள் பரிசுத்த ஆவியாயிருக்கிற கிறிஸ்துவே பரிசுத்த மனிதனாவார். சபையின் ஜனங்கள் சொல்லும்படி அவர்களுக்கு வார்த்தையில்லை என்று நீங்கள் எவ்வாறு கூற முடியும்? உங்கள் ஒவ்வொருவருக்கும் சொல்லத்தக்க வார்த்தை உண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கிரியை ஒன்றுண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் சுமந்து செல்லும் செய்தி ஒன்று உண்டு. மகிமை! 89பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர், அதாவது தேவன் தாமே, தன்னைப் பகிர்ந்தளித்தார். “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்று இயேசு கூறினார். அந்நாளில் பரிசுத்த ஆவியானவர், ”எல்லார்மேலும் எல்லோருக் குள்ளும் எல்லோர் மூலமாயும்'' இருக்கிறார். ஆமென். பரிசுத்த ஆவியானவர் தான் விரும்புகிற எவ்விடத்திலும், தான் விரும் புகிற எவர்மேலும் அசைவாட அவருக்கு உரிமையுண்டு. ஏதோ ஒரு பிஷப் அல்லது ஏதோ ஒரு மதகுரு கூறுவதை நீங்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒருவரே நமது மகாபிரதான ஆசாரியராக இருக்கிறார். இப்பொழுது, தீர்க்கதரிசி, ஆசாரியன், ராஜா. இப்பொழுது: “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதல்பிறந்த வரும் (அதைப் பற்றி நாம் இனி பார்ப்போம்) பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும்... நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவின அவருக்கு... வெளி.1:5-6 'கழுவினார்' (ஆங்கிலத்தில் washed) என்ற இந்த பதத்தின் மூல கிரேக்க வார்த்தையின் அர்த்தம் என்னவெனில் 'கட்ட விழ்த்தல்' (loosed) என்பதாகும். நாம் இப்பூமியோடு, நமது பாவத்தினிமித்தம் கட்டப்பட்டுக் கிடந்தோம். நமது பாவத்தினால், நம்மால் பரலோகத்தைப் பார்க்கவோ, அதைப் பற்றி கேட்கவோ, அல்லது நமது சிந்தையில் அது எப்படியிருக் கும் என்று எண்ணிப் பார்க்கவோ முடியாமல் இருந்தது. ஆனால் இயேசுவின் இரத்தம் வந்தபோதோ, அது நம்மைக் கட்டியிருந்த பாவக்கட்டிலிருந்து நம்மை அவிழ்த்து விட்டது. நான் ஒரு சமயம் ஒரு கதையைப் படித்தேன். அது இந்தக் காரியத்திற்கு நன்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்று எண்ணு கிறேன். ஓர் விவசாயி ஒரு காகத்தைப் பிடித்து அதைக் கட்டிப் போட்டானாம். “ஏனைய காகங்களுக்கு இதன் மூலம் ஒரு பாடம் கற்பிப்பேன்'' என்று கூறினானாம். எனவே அந்த கிழ காகத்தை அதின் காலில் ஒரு கயிற்றைக் கொண்டு கட்டிப் போட்டான். அது பசியினால் மிகவும் வாடியது. அது மிகவும் பெலவீனமடைந்து நடக்கக் கூட இயலாமற் போனது. 90அப்படித்தான் இங்கே சில மத ஸ்தாபனங்கள் மற்றும் சபைகள் மக்களை கட்டிப் போட்டிருக்கிறார்கள். அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது. “நீ இவ்வளவு தூரம் தான் போக முடியும். அற்புதங்களின் காலம் கடந்து போய் விட்டது. நீ கட்டப்பட்டிருக்கிறாய், இதற்கு மேல் உன்னால் முடியாது. இவ்வளவுதான்'', ”பரிசுத்த ஆவி என்ற ஒன்று கிடையாது, அவர் முன்பு அந்நிய பாஷைகளில் பேசியது போல் இப்பொழுது பேசுவது கிடையாது'' என்கிறார்கள். அவர் தேவனாயிருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''. எல்லா சபைக் காலங்களிலும் அவர் ஜீவிக்கிறார். நாம் அதைக் குறித்து இக்காலை நேரம் கடந்த பிறகு பார்ப்போம். அவர் தேவனாயிருக்கிறார், ஒவ்வொரு சபைக் காலத்திலும் அவர் ஜீவிக்கிறார் என்பதைப் பாருங்கள், அவர் ஒவ்வொரு சபைக் காலத்திலும் ஜீவித்து, நித்தியமாக தன் ஜனங்களுக்குள் ஜீவிப்பார். ஏனெனில் நாம் இப் பொழுது நமக்குள் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். ஸ்தாபனமானது மனுஷரை, அந்தக் காகம் கட்டிப் போடப் பட்டது போல, கட்டிப் போட்டிருக்கிறது. ''அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது, தெய்வீக சுகமளித்தல் என்ற ஓன்று இல்லை'' என்று கட்டிப் போடப்பட்டவர்கள் கூறுகிற அளவுக்கு ஸ்தாபனங்கள் அவர்களை கட்டிப் போட்டுள்ளது. இவ்வாறு கட்டிப் போடப்பட்ட அந்த காகமானது பசியினால் வாடி நடக்க இயலாமற் போயிற்று. ஒரு நாள், ஒரு நல்ல மனிதன், கட்டிப் போடப்பட்டிருந்த அக் காகத்தண்டை வந்து, 'ஐயோ, பாவம் இந்தக் காகம், நான் இதற்காக வேதனைப்படுகிறேன். இது கட்டப்படாதிருந்தால் தன்னுடைய தானியத்தை தேடித் தின்று கொண்டிருக்கும். அதன் ஜீவனம் அவ்வாறு தான் நடைபெறுகிறது. அதற்கு சாப்பிட ஏதாவது கிடைக்க வேண்டுமே, இப்படி கட்டப்பட்டிருந்தால் உயிர் வாழ தேவையான உணவு அதற்கு கிடைக்காதே'' என்று கூறி, தனது கத்தியை எடுத்து, கிழ காகத்தை கட்டியிருந்த கயிற்றை அறுத்துவிட்டு, அதை விடுவித்தான். 91அப்பொழுது, ஏனைய காகங்கள் விடுவிக்கப்பட்ட காகத் தினிடம் வந்து, “ஜானி காகமே, வா போகலாம், குளிர் கால மானது வருகிறது, எனவே நாம் தெற்கு நோக்கி சென்று விடு வோம்'' என்று கூறின. கட்டவிழக்கப்பட்ட காகம் என்ன கூறியது தெரியுமா? கட்ட விழ்க்கப்பட்ட பிறகும், அது பழையபடியே, தான் கட்டப் பட்டிருந்த போது, அந்தக் கயிறு எவ்வளவு தூரம் இருந்ததோ அவ்வளவு தூரமே நடந்து சென்று பழகியிருந்ததால், அதற்கு மேல் அதனால் நடக்க முடியவில்லை. அதனுடைய பழைய பழக்கத் தினால். ''என்னால் இதற்கு மேல் போக முடியாது, இந்தக் காலத்திற்கு உரிய காரியம் அல்ல இது, இக்காலத்தில் நாம் இதற்கு மேல் பறந்து செல்ல முடியாது, அந்தக் காலம் கடந்த விட்டது'' என்று கூறியதாம். அக்காகம் அதிக காலம் கட்டப்பட்டு கிடந்தது, அதினால் விடுவிக்கப்பட்ட பிறகும், தான் கட்டப்பட்டே உள்ளதாக அது நினைத்துக் கொண்டிருந்தது. பார்த்தீர்களா? அவ்வாறு தான் அநேகம் மக்கள் அந்தப் பழைய வேசியாகிய தாயின் ஸ்தாபனங்களாலும், அதன் கொள்கை களாலும் கட்டப்பட்டிருக்கிறார்கள். அந்த பழைய வேசிகளின் தாயானவள், “இயேசு கிறிஸ்து மாறாதவரல்ல, சுகமளித்தல் என்ற ஒன்றில்லை, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ஒன்றில்லை. அப்படிப்பட்ட காரியம் ஒன்றும் இல்லை'' என்கிறாள். நீங்கள் அநேக காலமாக கட்டப்பட்டிருந்தபடியால், அதிலேயே பழகிப் போய், கட்ட விழ்க்கிறவர் வந்து கட்டவிழ்த்தாலும், அதே பழைய கட்டில் இன்னும் கட்டப்பட்டிருக்கிறவைகளைப் போலவே பேசுகிறார்கள். 92காகத்தை அவிழ்க்க வந்த நல்ல மனிதனைப் போல் உள்ள, நல்ல மனிதனாகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய இரத்தத்தால் நாம் கழுவப்பட்டு, கட்டவிழ்க்கப்படுவதற்காக தம்முடைய இரத்தத்தை நமக்காக சிந்தினார். பாவம் என்றால் என்ன? அது என்னவென்று யாராவது நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். பாவம் என்றால் என்ன? பாவம் என்பது அவிசுவாசமாகும். அதுதான் சரியான அர்த்தம். “விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட் பட்டாயிற்று''. உங்களுடைய பாவம்தான் உங்களை சுதந்திரமாக இருக்க முடியாதபடி கட்டிப் போட்டுள்ளது, உங்கள் அவிசுவாசத் தினின்றும் தேவன் உங்களை கட்டவிழ்க்கிறார், ஆயினும், நீங்கள், பாரம்பரியமாக சில கோட்பாடுகளினால் கட்டப்பட்டிருக்கிறபடியால், கட்டவிழ்த்தாலும், இன்னும் நீங்கள் கட்டப்பட்டுள்ள தாகவே உங்களைக் கருதுகிறீர்கள். ''நான் பிரெஸ்பிடேரியன், நான் மெதோடிஸ்டு, நான் பாப்டிஸ்டு, என்று நீங்கள் கூறிக் கொண்டு, ஆத்துமாவில் பட்டினிச் சாவு ஏற்படுகிற அளவுக்கு, இரண்டு கால்கள் கட்டப்பட்டவன் எப்படி தவ்வி தவ்விக் கொண்டு நடப்பானோ, அவ்வாறு சுற்றி சுற்றி, நொண்டிக் கொண்டிருக் கிறீர்கள். அவர்கள், ''நான் கிறிஸ்துவின் சபை ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்'' என்று என்னிடம் கூறுகிறார்கள். அவர்கள் “அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டது, அவ்வாறு ஒரு காரியம் கிடையவே கிடை யாது'' என்று கூறுகிறார்கள். 93ஓ, பரிதாபத்திற்குரிய காகமே, நீ ஏன் இக்காலையில் வரக் கூடாது? ஏன் நீ பறந்து போகக் கூடாது? அல்லேலூயா! இப்படிப் பட்ட காகத்தை விட்டு விலகி ஒவ்வொரு எச்சரிக்கையையும் விசுவாசித்து, தன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உள்ள நீதியின் சூரியனாகிய குமாரனிடம் பறந்து செல்லுங்கள், ஆமென். சகோதரனே, சகோதரியே, அப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டும். ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்''. ஆம், ஐயா! “நல்லது! என் போதகர் இவ்வாறு கூறுகிறாரே'' என்று ஒரு வேளை கூறலாம். அதை நாம் கவனிக்கத் தேவையில்லை. வேதம், ''நீங்கள் விடுதலையானீர்கள்'' என்று கூறுகிறதென்றால் அது தான் சரி, நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள். “என்னுடைய சபை என்ன சொல்லுமோ'' என்று நீங்கள் கூறலாம். நல்லது, அதினின்றும் கட்டவிழ்க்கப்படுவாயாக. “அவர் தமது சொந்த இரத்தத்தினால் நம்மை கழுவி, நமது மத ஸ்தாபனங் களினின்றும் நம்மை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அவர் நம்மை சுயாதீனராக்கியிருக்கிறார், எனவே நாம் சுயமாக சிந்திக்க முடியும், சுயாதீனமாக செயல் புரிய முடியும், நமக்காக நாம் கிரியை செய்து, நமக்காக நாம் சுயாதீனமாக பேசி, செயல்புரிய முடியும். ''நல்லது, நான் திரும்பிச் சென்று எனது போதகரிடம் நான் திரும்ப ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமாமே என்று கூறினால், ஒருவேளை...'' என்று நீங்கள் கூறலாம். “நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள்'' என்பதைக் குறித்து என்ன? இது ஒரு வெளிப்பாடாயிருக்கிறது என்று நீங்கள் அறிந் திருக்கிறீர்கள். நீங்கள் விடுதலையாகி இருக்கிறீர்கள். அது சரி தான். 94நீங்கள் ஏற்கனவே சிறிதளவு உப்புக் கலந்த நீரினால், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்று உங்கள் தலையில் தெளிக்கப்பட்டிருந்தால், அது சரியானதல்ல. இக்காலையில் இங்கே உங்களுக்கு நீர் நிறைந்த தொட்டி ஆயத்தமாயுள்ளது. எனவே நீங்கள் இனிமேல் கட்டுண்டவர்களல்ல. நீங்கள் விடுதலையாகி விட்டீர்கள். ஒருவேளை நீங்கள் அதை அறியாமல் இருக்கலாம். ஆனால் நான் இன்று காலையில் உங்களுக்குச் சொல்லட்டும், வேதம் கூறுகிறது, ''அவர் நம்மை நம்முடைய பாவங்களினின்றும், நமது அவிசுவாசத்தினின்றும் விடுவித்து, அதினால் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக் கொள்ளும்படி செய்துள்ளார்''. எனவே நீங்கள் விடுதலையடைந்து செல்லுங்கள்! எந்த ஒரு சபையும் கூறுவதையும் நம்பத்தேவையில்லை. அதைக் குறித்து தேவன் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள். அவர் யார் என்று தம்மை வெளிப் படுத்துவதை பற்றிய வெளிப்பாடு இங்கே இருக்கிறது. நானுங்கூட முன் காலத்தில், தேவனாகிய பிதா, நீண்ட வெள்ளைத் தாடியையும், வெண்முடியையும் உடையவர் என்றும், குமாரன் நடுத்தர வயதினர் என்றும், பரிசுத்த ஆவியானவர் ஒரு அதிர்ஷ்ட தேவதையைப் போல் இருக்கக் கூடிய ஒரு பையன்'' (சகோ. பிரான்ஹாம் இங்கு ஆங்கிலத்தில் 'Mascot Boy (meaning a person coho is believed to be a luck-bringer) என்று குறிப் பிட்டுள்ளார் - மொழி பெயர்ப்பாளர்) என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். சகோதரனே, அப்படிப்பட்ட ஒரு கருத்து அஞ் ஞானக் கொள்கையாகும். மூன்று தேவர்கள் உண்டு என்று நீங்கள் விசுவாசிப்பது அஞ்ஞானக் கொள்கையாகும். 95முதலாம் பிரதான கற்பனையே என்னவெனில், ''... இஸ்ரவேலே கேள், உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்''. அவர் ஒரே தேவன் தான், அவர் மூன்று தேவர்களாயிருக்க வில்லை. அவர் தனது மூன்று அலுவல்களில் இருந்தார், மூன்று இடங்களில் பணியாற்றினார். அவர் தாமே தீர்க்கதரிசி, ஆசாரியன், மற்றும் இராஜாவாக இருக்கிறார். அவர் கழுகு, ஆட்டுக்குட்டி மற்றும் சிங்கமாக இருக்கிறார். அவர் தாமே, பள்ளத்தாக்கின் லீலி, சாரோனின் ரோஜா, தாவீதின் வேரும் சந்ததியுமானவர். 'A' முதல் 'Z' முடிய எல்லாம் அவரே. அவரே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர். அவர் இவை யாவுமாயிருக்கிறார், ஆனால் அவர் ஒருவரே. அவர் அந்த ஒரே தேவனாயிருக்கிறார். அந்தப் பட்டங்கள் யாவும் அவருக்கு உரித்தவைதான், ஆனால் ஒரே யொரு தேவன் தான் உண்டு. 96கத்தோலிக்க சபையானது, 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்று ஞானஸ்நானம் கொடுக்கத் துவங்குகிற வரையிலும், அதற்கு முன்பாக உள்ள காலத்தில் எவரும் அவ்வாறு ஞானஸ்நானம் கொடுக்கவேயில்லை என்பதை வேதத் தினின்றும், வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் நாம் தெளிவாகக் காண முடியும். நீங்கள் நான் கூறுவது தவறு என்பீர்களானால், உங்கள் கூற்றை நிரூபிக்க வேத வசனங்களிலிருந்தோ, அல்லது வரலாற் றிலிருந்தோ, அது எப்பக்கத்தில் உள்ளது என்று குறிப்பிட்டு, அப்படிப்பட்ட சான்றைப் பற்றிய ஓர் குறிப்பை இப்பிரசங்க பீடத்தில் எனக்காகக் கொண்டு வந்து வைத்துவிடுவீர்களானால், அப்பொழுது, நான் இச்சபையை விட்டு, “நான் ஒரு மாய்மாலக் காரன், நான் மக்களுக்கு தவறானதைப் போதித்து விட்டேன்'' என்று கூறிக்கொண்டே வெளியேறிவிடுவேன். கி.பி.325ல் நிசாயா ஆலோசனை சங்கத்தில் தான் ”பிதா, குமாரன், பரிசுத்த ஆவி' யின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்க அவர்கள் தீர்மானித்து, அவ்வாறு ஞானஸ்நானம் கொடுக்க அப்போதிலிருந்து ஆரம் பித்தார்கள் அல்லவா? அதற்கு முன்பாக உள்ள மூன்று நூற்றாண்டு களில் மக்கள் எப்போதாகிலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்களா என்பதை நிரூபிக்க ஏதாவது ஒரு வேத வசனமோ, அல்லது வரலாற்றில் இன்ன பக்கத்தில் ஆதி சபை இவ்வாறு ஞானஸ்நானம் கொடுத்தது என்றோ உங்களால் நிரூபிக்க முடியுமா? நீங்கள் அப்படி நிரூபிக்க முடியுமானால், அப்பொழுது நான், என் முதுகின் மேல், “நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி, மக்களை வழி தப்பி நடக்கச் செய்தவன்'' என்று எழுதி தொங்க விட்டுக் கொண்டு இந்த ஜெபர்ஸன்வில்லின் தெருக்கள் பூராவும் நடந்து செல்வேன், நீங்கள் என் பின்னால் வந்து அதையே கொம்பு ஊதி யாவருக்கும் தெரியப்படுத்துங்கள். இங்கே இக்காலையில், போதகர் யாராவது இருப்பீரெனில், நீங்கள் எனக்கு அதை செய்யுங்கள், இந்த ஒலி நாடாக்களை பெறப் போகிறவர்களே, நீங்கள் அப்படிச் செய்யுங்கள். 97இது என்னவாக இருக்கிறது? இது வெளிப்படுத்துதலா யிருக்கிறது. இதுவே அந்த வெளிப்படுத்துதலாயிருக்கிறது. கிறிஸ்துவாகிய ஆவியானவரே, தன் செய்தியை சபைகளுக்கு அனுப்பியிருக்கிறார். அதற்கு செவி கொடுங்கள், பரிசுத்த ஆவி யானவருக்கு செவி கொடுங்கள். அதைத்தான் வேதமும் போதிக் கிறது. அப்போதகம் எங்கே உள்ளே நுழைந்தது? நீங்கள் கோப மடையாதிருந்தால், இவ்வாரம் முழுவதும் தொடர்ந்து கேளுங்கள். நிசாயா ஆலோசனை சங்கத்தில் என்ன நடந்தது என்பதைக் காணுங்கள். அதற்காக “நிசாயா ஆலோசனை சங்கம்'' ஹிஸ்லாப்பின், ”இரு பாபிலோன்கள்'' என்ற நூல்களைப் பெற்று படித்துப் பாருங்கள். ஜோஸெஃபஸ் என்பவர் எழுதிய வரலாறு ஓரளவுக்குத் தான் சரி. ஆனால் கிறிஸ்துவைக் குறித்து எழுதிய ஒரு பத்தியில், இவ்வாறு கூறியுள்ளார். “இயேசு என்றொரு மனிதர் இருந்தார், அவர் ஜனங்களை அவர்கள் வியாதியினின்றும் குணமாக்கினார், அவர் மரித்தார். அவரை பிலாத்து கொன்றான், அல்லது ஏரோது கொன்றான். பின்பு அவரது சீஷர்கள் மரித்த அவரது உடலைத் திருடிக்கொண்டு போய் அதை ஒளித்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு இரவிலும் அவர்கள் போய் அவர் உடலிலிருந்து ஒரு துண்டை வெட்டி புசித்தார்கள். எனவே அவர்கள் நரமாம்சம் புசிப்பவர்களாயிருந்தார்கள். இவ்வாறு நற்கருணை ஆசரித்தார்கள்'' என்று எழுதியிருக்கிறார். இவ்வாறு எழுதியதில் ஜோஸெஃ பெஸின் மாம்ச சிந்தையைப் பாருங்கள். எனவே ஜோஸெஃபஸ் சொல்லுவதைக் கேட்க வேண்டாம். 98ஃபாக்ஸ் என்பவர் எழுதிய “இரத்த சாட்சிகள்'' (Fox's ”Book of Martyrs“) என்ற புத்தகத்தை பாருங்கள். அது மிகவும் நம்பத்தகுந்தது. அதை எத்தனை பேர் வாசித்திருக்கிறீர்கள்? பெம்பர்ஸ் எழுதிய ''ஆதி காலங்கள்'' (Early ages) அல்லது ஹிஸ்லாப்பின் ”இரு பாபிலோன்கள்'' (Two Babylons) ஆகிய இப்புத்தகங்களிலும் மிகவும் அதிகாரப் பூர்வமானதாக உள்ளன. மிகவும் அதிகாரபூர்வமானதாக உள்ள “நிசாயா கவுன்சில்' மற்றும் ”நிசாயா கவுன்சிலுக்கு முன்'' என்ற புத்தகங்களும் நம்பத் தகுந்தவை. இவை, ஒருவரும் எப்போதும் இவ்வாறு பெற்றதாகக் கூறவேயில்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்ற பட்டங்களை வெறுமனே கூறி எவராவது எப்பொழுதாவது ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று கூறும் வேத வசனங்கள் ஒன்றும் இல்லை என்பதை வேதத்தை எடுத்துப் பாருங்கள். அவ்வாறு ஞானஸ் நானம் கொடுப்பது மூன்று தேவர்களைக் குறிக்கும். அஞ்ஞான மத சடங்காகத்தான் அது இருக்கிறது. இவ்வுலகில் காணப்படும் கத்தோலிக்க மதமானது, கிறிஸ்தவ வேஷம் போட்டுக் கொண் டுள்ள அஞ்ஞான மார்க்கமாகும். கத்தோலிக்க சபையிலிருந்து தான், மார்ட்டின் லூத்தர், ஜான் வெஸ்லி மற்றும் பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன் ஆகியோர் வந்தனர். 99ஆனால் இந்தக் கடைசி நாட்களில் இவை யாவற்றுக்கும் நடுவில், மீண்டும் ஒரு சத்தியத்தை திறந்து கொடுக்கும் ஒரு வாசலானது வைக்கப்பட்டுள்ளது. அது, ''வேதம் இவ்வாறு கூறுகிறது'' என்கிறது. அந்த மகத்தான தீர்க்கதரிசியானவர் இக்கடைசி நாட்களில் பூமியின் மேல் வரவேண்டும். அவர் வருகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். கவனியுங்கள், அவர் சொல்லு வதைக் கேட்க அவருக்கு ஒரு சபை உண்டாயிருக்கும். இப்பொழுது நாம் அதைப் பற்றிப் பார்ப்போம். இது வெளிப்படுத்துதலாயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அதிலிருந்து ஒன்றையும் எடுத்து விட முடியாது. எப்படிப்பட்ட அறைகூவலாயிருக்கிறது என்று பாருங்கள். தங்களின் பாவ மன்னிப்பிற்காக எவராவது “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்று வெறும் பட்டங்களைச் சொல்லி அல்லது தெளித்து ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டார்களா என்பதை வேதத்தில் எங்காவது பார்த்துச் சொல் லுங்கள் பார்க்கலாம். அப்படி அவர்கள் கொடுக்கவேயில்லை. ஆகவே ஒவ்வொரு நபரும், அவர்கள் வேறெந்த விதத்தில் ஏற்கனவே ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும், அவர்கள் மீண்டும் வந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்'' ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும். 100அப்போஸ்தலர் 19ல், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சிஷரைக் கண்டு, அவர்களை 'சீஷர்கள்'' என்று கூறுகிறான். அவர்கள் ஒரு பெரிய கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அப்பொல்லோ என்ற மனிதனைப் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த அப்பொல்லோ என்பவன் சாதுரியவானும் வேத வாக்கியங்களில் வல்லவனுமாயிருந்தான். அவன் மனந்திரும்பியவனாயிருந்தான். யோவான் ஸ்நானனை விசுவாசித்த ஒரு பாப்டிஸ்ட்டாக மட்டும் இருந்தான். அவன் ஜனங்களுக்கு, வேத வாக்கியங்களைக் கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டிருந் தான் . அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் 18ம் அதிகாரத்தில், ஆக்கில்லா, ப்ரிஸ்கில்லா ஆகியோரின் ஊரைக் கடந்து செல்லு கையில், பவுல் அவர்களை சந்தித்தான். ஆக்கில்லா மற்றும் ப்ரிஸ்கில்லா ஆகியோரின் இல்லத்திற்கு பவுல் உணவருந்தச் சென்ற போது, அப்பொல்லோ என்ற அந்த மகத்தான மனிதனைப் பற்றி அவர்கள் இருவரும் பவுலிடம் குறிப்பிட்டார்கள். (எபேசுவில்) அப்பொல்லா பிரசங்கிப்பதைக் கேட்க அவனு டைய கூட்டத்திற்கு சென்றிருந்தார்கள். அவன் பேசுவதை பவுல் அந்த இராத்திரியில் கேட்டான். ''அவன் நன்றாகத்தான் பிரசங் கிக்கிறான், அது அருமையான பிரசங்கம். ஆனால் நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று பவுல் கேட்டான். 101விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றோம் என்று கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கிற பரிதாபத்துக்குரிய பாப்டிஸ்டுகளே! உங்களைப் பற்றி என்ன? பவுல் அவர்களை, “நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று தான் கேட்டான். சிலர் சொல்லுகிறார்கள், அங்கு அவ்வாறு எழுதப்பட வில்லை '' என்று . அதை நான் மறுக்கிறேன். அதிகார பூர்வமானதாக உள்ள மூல கிரேக்க வேதம் என்னிடம் இங்கே உள்ளது. எபிரேய மொழி வேதாகமம் கூட உள்ளது. என்னிடத்தில் இங்கே கிரேக்கம், எபிரேயம் மற்றும் அராபிய மொழி வேதாகமங்கள் உள்ளன. அவைகள் மூன்றிலுமே, 'நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று தான் உள்ளது. (தமிழ் வேதாக மத்தில் “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியை பெற்றீர்களா என்று எழுதப்பட்டுள்ளது - மொழி பெயர்ப் பாளர்). ”நீங்கள் விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற் றீர்களா?'' என்பது தான் சரியானது. அதற்கு மறுமொழியாக அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்றார்கள். அப்பொழுது அவன், ''அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ் நானம் பெற்றீர்கள்?'' என்றான். அதற்கு அவர்கள், ''நாங்கள் ஏற்கனவே, இயேசு கிறிஸ்து வுக்கே ஞானஸ்நானம் கொடுத்த மனிதன் கொடுத்த ஞானஸ் நானத்தை பெற்றுள்ளோம், நாங்கள் யோவான் கொடுத்த ஞானஸ் நானம் பெற்றோம்'' என்றார்கள். ஒருவேளை அதே குளத்தில். “அந்த ஞானஸ்நானம் கிரியை செய்யாது, யோவான் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைத் தான் கொடுத்தான். பாவமன்னிப்புக்காக அந்த ஞானஸ்நானம் கொடுக்கப் படவில்லை” என்று பவுல் அவர்களுக்கு கூறினான். 102ஒருத்துவக் கொள்கைக்காரர்களே, நீங்கள் சிலர், தவறாக ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். நீங்கள் இரட்சிப்பு பெறுவதற்கு ஞானஸ்நானம் தான் உதவுகிறது என்று சொல்லி ஞானஸ்நானத் தைக் கொடுக்கிறீர்கள். தண்ணீர் ஒரு மனிதனை இரட்சிப்பதில்லை. இரத்தம் தான் அதைச் செய்கிறது, மனந்திரும்பும் பொழுது. ஞானஸ்நானத்தினால் மறுபிறப்பின் அனுபவம் வருகிறதில்லை. இல்லை ஐயா. மறுபிறப்பின் அனுபவம் ஆவியினால் வருகிறது. உள்ளத்தில் நடைபெற்றுள்ள மறு ஜென்மம் அடைதலின் கிரியை யின் வெளிப்பிரகாரமான தோற்றம்தான் ஞானஸ்நானமாகும். அதைக் கவனித்தீர்களா? நல்லது, கவனியுங்கள். 'விசுவாசிகளான பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று பவுல் அவர்களைக் கேட்டான். ''பரிசுத்த ஆவியுண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்று அவர்கள் சொன்னார்கள். “அப்படியானால் நீங்கள் எவ்வாறு ஞானஸ்நானம் பண் ணப்பட்டீர்கள்'' என்று கேட்டான். 'யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்'' என்றார்கள் அவர்கள். “யோவான் தனக்குப் பின் வருகிற பலியாகிய ஆட்டுக் குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமா யிருக்க வேண்டும் என்று கூறி, உங்கள் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தான்'' என்று பவுல் அவர்களுக்கு பதிலளித்தான். இதை அவர்கள் கேட்ட பொழுது, அவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் எடுத்தார்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால். பின்பு பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கதரிசினம் உரைத்தார்கள். 103எனவே, வேதத்தில் புதிய ஏற்பாட்டில் எங்காகிலும் எவராவது “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தவிர வேறு எந்த விதத்திலும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்களா என்பதை எனக்குக் காண்பியுங்கள். அதற்கு ஏதாவது ஒரு வேத வசனம் காண்பியுங்கள் பார்க்கலாம். பரிசுத்த அகாபஸ் (Saint Agabus) மற்றும் ஏனைய கிறிஸ்தவர்களும் நிசாயா ஆலோசனை சங்கத்தின் காலத்திற்கு முன்னால் வரைக்கிலும், அவர்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டிருந்தார்கள். ஊழியக்காரர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் ஊழிய நிலத்தை உழுதார்கள். ஆனால் நிசாயா ஆலோசனை சங்கம் கூடிய போது, அவர்கள் மூன்று தேவர்களின் கொள்கையை தழுவிக் கொண்டார்கள். அவர்களுடைய அஞ்ஞான மார்க்கத்தில் அவர்களுக்கு இருந்த ஜூபிடருக்குப் பதில், அவர்கள் பவுலை ஏற்படுத்திக் கொண்டார் கள். அவர்கள் அஞ்ஞானிகளாக இருந்தபொழுது தொழுது கொண்டு வந்து வீனஸ் தேவதைக்குப் பதிலாக மரியாளை அந்த ஸ்தானத்தில் வைத்து தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லாவிதமான தேவர்களும், எல்லா விதமான பரிசுத்த வான்களின் வணக்கமும் உடையர்களாயிருந்தனர். அவர்கள் திரித்துவ ஞானஸ்நானத்தையும் ஏற்படுத்தி, இவ்வாறு அவ்வுப தேசங்களை ப்ராடெஸ்டெண்டுகளுக்கும் ஊட்டி விட்டார்கள். அவர்கள் இன்னும் அதை பின்பற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் சாயங்கால நேர வெளிச்சங்கள் இப்பொழுது வந்து விட்டன. ''சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்'' என்று தீர்க்க தரிசி கூறினார். மாலை நேரத்திலே ஒளியுண்டாகும் மகிமைக்குப் போகும் வழியை நிச்சயம் காண்பீர் தண்ணீரின் வழியில் இன்று வெளிச்சம் உண்டு இயேசுவின் விலையுயர்ந்த நாமத்தில் அடக்கம் செய்யப்படுவீர் இளைஞரே, முதியோரே, பாவங்களை விட்டு மனந்திரும்புவீர் அப்பொழுது பரிசுத்த ஆவி உங்களில் நிச்சயம் பிரவேசிப்பார் மாலை நேர வெளிச்சம் வந்துவிட்டது தேவனும் கிறிஸ்துவானவரும் ஒருவரே என்பதே உண்மை. 104நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு, 'நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறியக் கடவீர்கள்'' என்றான். ஆம்! “இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சய மாக அறிய வேண்டும், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.'' சமீபத்தில் நான் “தாவீதின் வீடு'' என்றழைக்கப்படும் ஓரிடத்தில் ஒரு யூதருடன் பேசினேன். அவர், ”புறஜாதிகளாகிய நீங்கள் தேவனை மூன்று கூறாக்கி அவரை ஒரு யூதனுக்கு அளிக்க முடியாது. நாங்கள் அதை விட தெளிவாக தேவனைக் குறித்து அறிந்திருக்கிறோம்'' என்றார். “ரபீ, அது நியாயம் தான், ஆனால் நாங்கள் தேவனை மூன்று கூறாக்குகிறது இல்லை, நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக் கிறீர்களா?'' என்று இவ்வாறு நான் அவரைக் கேட்டேன். “நிச்சயமாக'' என்று அவர் பதிலளித்தார். ''ஏசாயா 9:6ஐ நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?'' என்று நான் கேட்டேன். “ஆம்” என்றார் அந்த யூத போதகர். ''யாரைக் குறித்து தீர்க்கதரிசி அங்கே பேசுகிறான்'' என்று நான் கேட்டேன். ''மேசியாவைக் குறித்து'' என்று அவர் பதிலளித்தார். “மேசியாவுக்கும் தேவனுக்கும் உள்ள உறவு என்ன?'' என்று மீண்டும் கேட்டேன். அதற்கு அவர், “அவர் தேவனாயிருப்பார்'' என்றார். 'அது சரிதான்'' என்றேன் நான். ஆமென். 105அதுதான் சரி. நீங்கள் தேவனை மூன்று கூறாக்க முடியாது. இங்குள்ள மிஷனரிகளில் ஒருவர் யூதர்களுக்கு ஊழியம் செய்கிறவர்... இங்கு அமர்ந்திருக்கிற அந்த மனிதர் தான் அவர் என்று நான் நம்புகிறேன். நீங்கள் யூதரிடம் ஒரு போதும் தேவனை மூன்று கூறாக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று மூன்று ஆட்கள் உண்டு என்று போதிக்க முற்படாதீர். அப்போதகம் நிசாயா ஆலோசனை சங்கத்தில் பிறந்தது என்று உங்கள் திரித்துவ போதகத்தைக் கேட்ட உடனே யூதர் கூறிவிடுவர். அவருக்கு அது எங்கிருந்து வந்தது என்று நன்கு தெரியும். அப்படிப்பட்ட போதகத்திற்கு அவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் அவர்களுக்கு, ஒரே தேவன்தான் உண்டு என்றும், அவரே மாம்சத்தில் வந்தார் என்றும், அவர் நம்மை பரிசுத்தமாக்க நம்மிடையே வாசம் பண்ணினார் என்றும், மீண்டும் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நமக்குள் வருவதற்காக அவர் பரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆகவே தேவனே பிதா, அவரே பரிசுத்த ஆவி, எல்லாம் அந்த ஒரு நபர்தான் என்று இவ்வாறு அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். மத்தேயு சுவிசேஷம் 1ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு கூறப்பட்டுள்ளதே, அதில் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது, ''ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக் கோபைப் பெற்றான்'. அதற்குக் கீழே தொடர்ந்து நீங்கள் படிப் பீர்களானால், நான் என்னத்தைக் குறிப்பிட விரும்புகிறேன் என் பதை அறிவீர்கள். மத்தேயு.1:18ம் வசனம் முதல் ஆரம்பிப்போம். “இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட் டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே , அவள் பிதாவாகிய தேவனாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது”. 106அங்கே தேவனாகிய பிதாவினாலே கர்ப்பவதியானாள் என்றா எழுதப்பட்டுள்ளது? யாரால் கர்ப்பவதியானாள் என்று எழுதப் பட்டுள்ளது? (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). பிதாவாகிய தேவனே அவரது பிதா என்று நான் நினைத்தேன். பரிசுத்த ஆவி யினால் கர்ப்பவதியானாள் என்று எழுதப்பட்டுள்ளதால், தேவன் அவருடைய பிதா என்று இருப்பதால், அப்பொழுது, பிதாவாகிய தேவனும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே நபர்தான் என்று புலப் படுகிறது. இரண்டும் இருவெவ்வேறு நபர்கள் என்றிருப்பின், அப்பொழுது, இயேசுவுக்கு, இரு பிதாக்கள் உண்டு என்றாகி விடும். ''அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியா யிருக்கிறது (பிதாவாகிய தேவனால்?) ...பரிசுத்த ஆவியினால் உண்டானது“. மத். 1:19-20) அப்படியாயின், இயேசு கிறிஸ்துவின் பிதா யார்? மேற் கண்ட வசனத்தின்படி பரிசுத்த ஆவியானவர்தான் அவரது பிதா. நல்லது, அவரே பிதாவாகிய தேவனும் கூட. அப்படியில்லையா? நிச்சயமாக அப்படித்தான். “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக...'' மத். 1:21 107இங்கு பிதாவாகிய தேவன், இங்கு பரிசுத்த ஆவியாகிய தேவன், இங்கு குமாரனாகிய தேவன். அவ்வாறு சொன்னால் அது நிச்சயமாக மூன்று தனித்தனி தேவர்களைக் குறிக்கும். வேதம் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒரே ஆளாக இருக்க வேண்டும், அப்படியில்லையெனில், இயேசுவுக்கு இரண்டு பிதாக்கள் உண்டு என்ற அர்த்தமாகி விடும். அவருக்கு இரண்டு பிதாக்கள் இல்லை, நீங்கள் அதை அறிவீர்கள். “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறை வேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம் மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத். 1:21-23. மத்தேயு. 28:19ல் இயேசு, “நீங்கள் புறப்பட்டுப் போய் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்றார். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் (பெயர்) என்ன? இயேசு என்பதுதான் அதின் நாமம். 108நீங்கள் கதை படிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதின் முடிவில் “ஜானும், மேரியும் அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்'' என்று கண்டிருக்கிறது என்று வைத்துக் கொள் வோம். யார் இந்த ஜானும் மேரியும் என்று கேள்வி கேட்டால், கதையின் தொடக்கக் கட்டத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும், அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் என்று மட்டும் கூறியிருந்தால், அது யாருடைய நாமம் (பெயர்)? பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் என்று சொன்னால், அந்த நாமமானது என்ன என்று கண்டு பிடிக்க நீங்கள் விஷயத்தின் துவக்கத்திற்குச் சென்று அவர் யாரைக் குறிப்பிட்டுள்ளார் என்பதை காணுங்கள். பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு, “நீங்கள் மனந் திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினான். அவனுக்கு வெளிப்படுத்துதல் உண்டாயிருந்தது. யோவானுக்கு வெளிப்படுத்துதல் உண்டாயிருந்தது. இயேசு தான் அந்த வெளிப்படுத்துதலாயிருந்தார். வேதவாக்கியத்தில் அவரே தம்மைப் பற்றி, ''இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவராகிய சர்வவல்லமை யுள்ளவராக இருக்கிற நான்'' என்று எடுத்துக் காண்பித்துள்ளார். நாம் இப்பொழுது விரைவாக 6ம் வசனத்தைப் பார்ப்போம். ஏனெனில் நாம் சீக்கிரமாக முடிக்க வேண்டும். ...சர்வ வல்லமையுள்ளவருக்கு... ''மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். ''....தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கி அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். 109அங்கே காணப்படுகிற வெளிப்படுத்துதலைப் பாருங்கள்? எவ்வாறு தேவன்... பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது யார் என்று கண்டுபிடிக்க, மனிதர்கள் தங்கள் தலையைச் சொரிந்து கொண்டு குழம்பிப் போய் தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள். குழம்பிப் போய் மூன்று ஆட்களில் ஒரு தேவன் என்று கூறுகிறார்கள். நீங்கள் உங்கள் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு, தலையைச் சொரிந்து கொள்ள வேண்டாம், மேலே நோக்கிப் பாருங்கள், அங்கிருந்து உங்களுக்கு வெளிப்பாடு உண்டாகும். அது தான் சரி. அதை அவர் வெளிப்படுத்துவார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது மூன்று தனித்தனி ஆட்கள் அல்ல, அது ஒரே தேவன் ஜீவித்த அவரது மூன்று அலுவல்கள் ஆகும். அவர் தம்மிலே தாமே “ஆவியானவர்'' என்ற அலுவலில் இருந்து வந்தார். மானிட வர்க்கம் தாழ்ந்த நிலையில் இருந்தபடி யால், அவரும், தமக்கென்று ஒரு சரீரத்தை உண்டாக்கினார், அதில் அவர் ஜீவித்து, தனது சொந்த இரத்தத்தை உண்டாக்கிக் கொண்டார். ஏதேன் தோட்டத்தில் ஏற்பட்ட மாம்ச சம்மந்தமான உடல் உறவில் ஏற்பட்டது போல் இது ஏற்படவில்லை. ஆனால் ஒரு சரீரத்தை உண்டாக்கினார், தனது அந்த கறைபடாத கன்னிகை பிறப்பினால் ஏற்பட்ட சரீரத்தில் இருந்து தனது சொந்த பரிசுத்த இரத்தத்தை நமக்களித்து, நம்மைச் சுத்திகரித்து, நம்மை அவிசுவாசத்தினின்று விடுவித்தார். அது மட்டுமல்ல, அவர்மேல் நாம் விசுவாசம் கொள்ளும்படி அவர் செய்தார். அதை நாம் செய்யும் பொழுது, நாம் அவரை நமது இருதயத்தில் ஏற்றுக் கொள்ளு கிறோம், அது தேவன் நம்மில் இருப்பதாகும். தேவனே, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாயிருக்கிறார். அவர் தீர்க்கதரிசி, ஆசாரியன், இராஜா என்று இருப்பதைப் போல்தான் இதுவும். அதே காரியம் தான். 110சரி, இப்பொழுது நாம் 7ம் வசனத்தைப் பார்ப்போம். அதில் ஒரு அறிவிப்பு அடங்கியுள்ளது. “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்....” ஓ! நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? அங்கே அது மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் இன்னும் 30 அல்லது 20 நிமிடங்கள் இதற்காகத் தர முடியுமா? உங்களால் முடியுமா? நல்லது. இன்றிரவிலே, பத்மு தீவு தரிசனத்தில் உள்ளதை நாம் படிப்போம். இன்று நாம் இந்த அறிவிப்பைக் குறித்து படித்து முடிப்போம். ஓ! உங்களுக்கு நல்லுணர்வு தோன்றுகிறதா? இந்த பழமை வாய்ந்த வேதாகமத்தை நேசிக்கிறீர்களா? இது எதைப் பற்றிய வெளிப்படுத்துதலாயிருக்கிறது? அது என்னவாயிருக் கிறது? தேவன் தாழ இறங்கி வந்து, இப்புத்தகத்தை எடுத்து அதிலுள்ள திரையை நீக்கம் செய்து, “இதோ அவர் அங்கே இருக்கிறார், தீர்க்கதரிசி, ஆசாரியன், இராஜா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, அவர் இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர், இவையெல்லாம் அவரே, அவர் தேவன் தாமே'' என்பதை வெளிப்படுத்துகிறார். 111கர்த்தருடைய உதவியைக் கொண்டு, நாம் தானே, சில நிமிடங்களுக்கு திரையை நீக்கம் செய்வோம். நம்முடைய மனக் கண்களை மறைத்திருக்கிற திரையை நீக்கிவிட்டு விடுவோமாக. “... இதோ மேகங்களுடனே வருகிறார்....' இப்பொழுது, அவர் எவ்வாறு வருகிறார்? “மேகங் களுடனே வருகிறார்''. என்னவிதமான மேகங்கள்? மகிமையின் மேகங்கள். இடி மின்னலுடன் வரும் இந்த மழை மேகங்கள் அல்ல இவை. ஆனால் மகிமையின் மேகங்கள், மறுரூப மலையின் மேல் பேதுருவும் மற்றும் ஏனையோர்களும் அவரது தோற்றத்தைக் காண்கையில், என்னவிதமான மேகத்தால் அவர் சூழப் பட்டிருந்தார் என்பதை நீங்கள் காண்பீர்களானால், அதைப் புரிந்து கொள்வீர்கள். ஒரு மேகம் அவரை சூழ்ந்து கொண்டது, அவர் வஸ்திரமானது பிரகாசித்தது. அவர் ஒரு மேகத்தினால் சூழப் பட்டிருந்தார். அது தேவனுடைய வல்லமையாயிருந்தது. இந்த சபைக் காலங்களைப் பற்றிய செய்தியில் அதைப் பற்றி நாம் பார்ப்போம். அதைப் பற்றி சிந்திக்கையில், என் உள்ளான மனிதனில் ஒரு பேருவகை ஏற்படுகிறது. நாம் வாழ்கிற நாளை நான் பார்க்கையில், அதில், அவருடைய வருகையைப் பற்றிய நம்பிக்கையைத் தவிர வேறு எதுவும் நமக்கு இல்லை. 112இப்பொழுது விரைவாக இந்த வசனத்தைப் பார்ப்போம். “கண்கள் யாவும் அவரைக் காணும்...” கண்கள் யாவும் அவரைக் காணும் என்று சொன்னால், அது சபை எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறிக்கவில்லை என்றாகிறது. அது எடுத்துக் கொள்ளப்படுதல் அல்ல. அது எடுத்துக் கொள்ளப் படுதல் அல்ல. அவர் இங்கே எதைக் குறித்துப் பேசுகிறார்? இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகிறார். “... அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்பு வார்கள்...” இப்பொழுது நாம் சற்று, முந்தைய கால சரித்திரத்திற்குத் திரும்பிப் போய் பார்ப்போம். நாம் சகரியா தீர்க்கதரிசியின் புத்தகம் 12ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம். “இரட்சிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்''. இயேசு கிறிஸ்துவைப்பற்றிய அந்த நல்ல வெளிப்படுத்துதலுக்காக நாம் எவ்வளவாக நன்றி யுள்ளவர்களாயிருக்கிறோம்! அவரைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சி யுள்ளவர்களாயிருக்கவில்லையா? இச்செய்திகளை நாம் ஒரு புத்தகமாக கூடிய விரைவில் ஆக்கிக் கொடுப்போம். அப்பொழுது நீங்கள் உங்கள் அறையில் அமைதியாக படித்து ஆராயலாம். 113சகரியா 12ம் அதிகாரத்திற்கு வருவோம். இப்பொழுது நாம் இதை மிகுந்த ஜெப சிந்தையோடு எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். தேவனுடைய மகிமைக்காக இதை எடுத்துக் கொள்ள நான் விரும்புகிறேன். இப்பொழுது சகரியா 12ம் அதிகாரம் 9ம் வசனத்தை எடுப்போம். கவனமாகக் கேளுங்கள். சகரியா 12ம் அதிகாரம் 9ம் வசனத்தில் ஆரம்பிப்போம். இங்கே வருகையைக் குறித்து தீர்க்கதரிசி பேசுகிறார். சகரியா 12:9 - கிறிஸ்துவின் வருகைக்கு 487 ஆண்டுகளுக்கு முன்பாக சகரியா இந்தத் தீர்க்கதரிசனத்தை உரைக்கிறான். “அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன். (அதைக் குறித்து எண்ணிப் பாருங்கள்!) நான் தாவீதின் குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து...“ எப்பொழுது சுவிசேஷமானது யூதர்களுக்குத் திரும்பிச் செல் கின்றது? புறஜாதிகளின் காலம் முடிவடைந்த பிறகு, சுவிசேஷ மானது யூதருக்கு திரும்பிச் செல்ல ஆயத்தமாயிருக்கும். இங்கே தானே, நடைபெறப் போகிற ஒரு காரியத்தை நான் உங்களுக்கு முன்னுரைக்க முடியும். இந்நாளில் தானே அது நடைபெற ஆயத்தமாக இருக்கிறது. நாம் அதை சபைக் காலத்தில் பார்க்கிறோம். நடைபெறவிருக்கிற அதற்காக தயாராயிருக்கிற அந்த மகத்தான காரியம், வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்திலுள்ள அவ்விரு தீர்க்கதரிசிகளாகிய எலியா, மோசே ஆகியோரை யூதர்களுக்காக திரும்பக் கொண்டு வருகிறது. நாம் அதற்காக ஆயத்தமாயிருக்கிறோம். எல்லாமே கிரமமாக, ஆயத்தமாக இருக்கிறது. இந்த புறஜாதிகளுக்கான செய்தியானது, முதலில் புறஜாதிகளண்டைக்கு யூதர்கள்தான் கொண்டு வந்த தாகும். புறஜாதிகள் அதை மீண்டும் யூதர்களிடம் எடுத்துச் செல்வார்கள்; எடுத்துக் கொள்ளப்படுதல் அப்பொழுது வரும். மகா உபத்திர காலத்திற்கு பிறகு உள்ள இந்த வருகையைப் பற்றி மனதில் வையுங்கள். மகா உபத்திரவ காலத்திற்குள் சபையானது போவதில்லை. வேதம் அவ்வாறே கூறுகிறது என்று நாம் அறிவோம். அது சரிதான். 114''... இஸ்ரவேல் வீட்டார் மேல் அவர் ஊற்றுவார்...'' எதை ஊற்றுவார்? அதே பரிசுத்த ஆவியைத் தான் ஊற்றுவார். எப்பொழுதென்றால், புறஜாதி சபையை எடுத்துக் கொண்ட பிறகு தான். “.... அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறது போல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக் காகத் துக்கிக்கிறது போல எனக்காக மனங்கசந்து துக்கிப் பார்கள். அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப் போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். தேசம் புலம்பிக் கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித் தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்... ஒவ்வொரு குடும்பத்தாரும்... புலம்புவார்கள். சகரி.2:11-14 அவர்கள் நோக்கிப் பார்க்கையில் என்ன சம்பவிக்கும்? இயேசுவின் இரண்டாம் வருகையில் மகிமையின் மேகங்களுடன் அவர் வருகையில் என்ன சம்பவிக்கும்? யூதர்கள் தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள். இன்னொரு வேத வாக்கியத்தில் அவர்கள் (யூதர்கள்) அவரை நோக்கி இவ்வாறு கேட்கிறதாகச் சொல்லப்பட்டுள்ளது. “... ஒருவன் அவரை நோக்கி இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால்...'' எங்கே இந்த காயங்கள் அவருக்குக் கிடைத்தன என்று கேட்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. 115''என் சிநேகிதரின் வீட்டில்'' என்று அவர் கூறுகிறார். அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளாத யூதருக்கு மட்டும் அது ஒரு புலம்பலின் வேளையாக இருக்கப் போவதில்லை. இந்த நாளுக்கென உள்ள மேசியாவாக அவரை ஏற்றுக் கொள்ளாத புறஜாதியாரும் அழுது புலம்புவார்கள்; அவர்கள் அப்பொழுது எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுத்துக் கொள்ளப்படாமல் கைவிடப்பட்டிருப்பார்கள். தங்கள் விளக்குகளில் எண்ணெய் பெற்றுக் கொள்ள மறுத்த அந்த சபையாகிய நித்திரை செய்த புத்தியில்லாத கன்னிகைகள் அழுது புலம்புவார்கள். அங்கே பத்து கன்னிகைகள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அனைவருமே நல்லவர்கள்தான், ஆனால் அவர்களில் ஐந்து பேருக்கு மட்டுமே தங்கள் விளக்குகளில் எண்ணெய் இருந்தது. நல்லவர்களாயிருந்த மற்ற ஐந்து பேர்களும், தங்கள் விளக்குகளில் எண்ணெயைப் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டார்கள். அவர்கள் புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள்; அங்கே அவர்களுக்கு அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும். “அங்கே அழுது புலம்புவார்கள்'' என்று சொல்லப்பட்டுள்ளது. வேதாகமம், ''அவர்கள் இருதயம் நொறுங்கி மனங்ரசந்து அழுது புலம் புவார்கள்'' என்று இங்கே கூறுகிறது. 116இங்கே ஆதியாகமம் 45ம் அதிகாரத்தில் நான் இன்னொரு வசனத்தை உங்களுக்குத் தருகிறேன், நீங்கள் அதை அறிந்து கொள்ள விரும்பினால், சிறிது நேரத்தில் அவ் வசனத்தை எடுத்துக் கொண்டு அதையும் வாசிப்போம். அது ஆதியாகமம் 45ம் அதிகாரம் என்று நான் நம்புகிறேன். இங்கே யோசேப்பு தன் ஜனங்களுக்கு தன்னை தெரியப்படுத்துகிறான். வரப்போகும் அந்நாளில் என்ன நடக்கப் போகிறதோ அதற்கு சாயலாக மாதிரியாக ஆதியாகமம் 45ம் அதிகாரத்திலுள்ள யோசேப்பின் காரியத்தை எடுத்துக் கொண்டு, பின்பு இரண்டையும் ஒன்று சேர்த்துப் பார்ப்போம். “அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக் கொண்டிருக்கக் கூடாமல்; யாவரையும் என்னை விட்டு வெளியே போகப் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். (இப்பொழுது இங்கே நினைவில் கொள்ளுங்கள், யோசேப்பு தன்னை யார் என்று தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறான். அப்பொழுது ”யாவரையும் என்னை விட்டு போகப் பண்ணுங்கள்'' என்று கதறினான்) யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். (யோசேப்பு மிகவும் கதறி சப்தமிட்டு அழுதிருக்க வேண்டும்) யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந் ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப் போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப் போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் (ஓ! எவ்வளவு அழகா யிருக்கிறது.) தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப் பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்“ ஆதி.45:1-7 117ஒரு க்ஷணம் நான் மேற்கூறியவற்றை , சகரியா 12ம் அதிகாரத்தோடு ஒப்பிட்டுக் காண்பிக்கிறேன். நாம் அதை மாதிரியாகப் பார்க்கிறோம். நீங்கள் எப்பொழுதும் மாதிரிகளைக் கொண்டு போதித்தால் விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள உதவி யாயிருக்கிறது. நான் மாதிரியைக் கொண்டு சிந்திக்கிறேன். யோசேப்பு பிறந்த பொழுது அவனது சகோதரர்களால் அவன் பகைக்கப்பட்டான். அது சரிதானே? இப்பொழுது நான் உங்களுக்கு, யோசேப்பு ஆவியினால் நிரப்பப்பட்ட சபைக்கு உதாரணமாகத் திகழ்கிறான் என்பதை காண்பிக்க விரும்பு கிறேன். யோசேப்பு தன் சகோதரரால் பகைக்கப்பட்டான். ஏன்? ஏனெனில் அவன் ஆவிக்குரியவனாக இருந்தான். தரிசனங்கள் காண்பதை அவனால் நிறுத்த முடியவில்லை. அவன் சொப்பனங்கள் கண்டான், அதை அவனால் நிறுத்த முடியவில்லை. சொப்பனங்களை வியாக்கியானம் செய்யவும் செய்தான். அவனோடு இருந்த காரியம் அதுதான். தனக்குள் இருப்பதைத் தவிர வேறெதையும் அவனால் காண்பிக்க முடியவில்லை. அப்பொழுது, அவனது சகோதரர்கள் முகாந்திரமின்றி அவனைப் பகைத்தார்கள். ஆனால் அவன் தந்தை அவனை நேசித்தார், ஏனெனில் அவன் தந்தை ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். இயேசுவின் காரியம் எப்படியிருந்தது என்பதைப் பாருங்கள். தேவன் தன் குமாரனை நேசித்தார். ஆனால் அவரது சகோதரராகிய பரிசேயரும் சதுசேயரும் அவரை பகைத்தார்கள்; ஏனெனில் அவரால் வியாதியஸ்தரை குணமாக்க முடிந்தது, வரப்போகிற வைகளை முன்னுரைக்கவும், தரிசனங்கள் கண்டு அவற்றை வியாக்கியானிக்கவும் முடிந்தது. நான் கூறியதை புரிந்து கொண்டீர்களா? “... முகாந்திரமின்றி அவரைப் பகைத்தார்கள்...'' 118யோசேப்புக்கு அவனது சகோதரர்கள் என்ன செய்தார்கள்? அவன் இறந்துவிட்டதாக கதை கட்டி, அவனை ஒரு குழியில் போட்டு விட்டார்கள். அவன் தந்தை அவனுக்கு அன்புடன் அளித்திருந்த ஏழு நிறங்களிலான அந்த அங்கியை இரத்தத்தில் தோய்த்து எடுத்தார்கள். வானவில்லில் ஏழு நிறங்கள் தான் உள்ளன. வான வில்லானது என்ன என்பதை நாம் அறிவோம். அதைப் பற்றி இன்றிரவில் பார்ப்போம். இயேசுவைச் சுற்றிலும் வானவில் லிருந்தது. அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத் துக்கும் ஒப்பாய் இருந்தார். வானவில்லானது உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கிறது. எனவே, யோசேப்பின் ஏழு நிறமுள்ள ஆடையானது, யோசேப்போடு தேவன் ஏற்படுத்தியிருந்த உடன்படிக்கையாயிருக்கிறது. யோசேப்பின் சகோதரர்கள் அவனது பல வருண அங்கியை இரத்தத்தில் தோய்த்து அதை அவன் தந்தையிடம், அவன் செத் துப் போய்விட்டதாகக் காண்பிக்கக் கொண்டு வந்தார்கள். ஆனால் யோசேப்பு அந்த குழியிலிருந்து தூக்கியெடுக்கப்பட்டு, எகிப்தியரிடம் விற்கப்பட்டான். அவனை ஒரு தளபதி விலைக்கு வாங்கியிருந்தான். அவன் அந்த மனிதனின் வீட்டில் இருக்கையில், அவன் பேரில் பொய்யான குற்றச்சாட்டு ஏற்பட்டு, அவன் சிறைச்சாலையில் தள்ளப்பட்டான். அச்சிறைச்சாலையில் தானே தன்னோடு சிறைப்பட்டிருந்த பார்வோனின் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் கண்ட வெவ்வேறு சொப்பனங்களுக்கு தீர்க்கதரி சனத்தினால் வியாக்கியானம் செய்து, ஒருவன் என்ன நிலைக்கு உயர்த்தப்படுவான் என்றும் மற்றவன் கதி எவ்வாறாயிருக்கும் என்பதைப் பற்றியும் கூறினான். 119அச்சிறையிலிருந்து தானே யோசேப்பு பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்டான். யோசேப்பு மூலமாயல்லாமல் எவரும் பார்வோனை நெருங்க முடியாது என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டான். யோசேப்பு எகிப்தியரிடம் விற்கப்பட்டது முதல் அவனுக்கு நேர்ந்த யாவற்றையும் சற்று கவனித்துப் பாருங்கள்; அவன் அவைகளிலெல்லாம் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாயிருந் ததைப் பாருங்கள். பார்வோனின் பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் சிறையில் இருந்ததையும், அவர்கள் கண்ட சொப்பனங்களைக் குறித்தும் கவனியுங்கள். இயேசு தனது சிறைவீட்டில் இருக்கையில்... யோசேப்பு சிறையில் இருந்ததை நினைவு கூருங்கள். அதே போல் இயேசுவும் தன் சிறையில் இருந்த பொழுது... அவர் எவ்வாறு சிறைப்படுத்தப்பட்டிருந்தார்? இயேசு சிலுவையிலறையப்பட்டது சிறைப்படுத்தப்பட்டதாகும். அவ் வாறான சிறையில் இயேசுவும் இருந்த பொழுது, அவரோடு அருகே சிலுவையில் (சிறையில்) அறையப்பட்டிருந்தவர்களில் ஒருவன் இரட்சிக்கப்பட்டான், ஒருவன் ஆக்கினைக்குள்ளாகினான். யோசேப்பும் சிறையில் இருந்த பொழுது ஒருவன் இரட்சிக்கப் பட்டான், மற்றவன் ஆக்கினைக்குள்ளானான். 120இயேசு சிலுவை மரணத்திற்குப் பிறகு, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மகத்தான ஆவியாகிய யேகோவாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். ''... என்னை யல்லாமல் ஒருவனும் தேவனிடத்தில் வரான்...'' என்றார். ''மரியாளே வாழ்க'' அல்லது “இன்னாரே வாழ்க'' என்பது போன்ற கோஷங்களினால் தேவனிடம் அணுக முடியாது; ஆனால் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள அந்த இயேசு கிறிஸ்துவாகிய ஒரே மத்தியஸ்தர் மூலமாகத்தான் தேவனை அணுக முடியும். தேவன் நம்மிடையே வாசம் பண்ணத்தக்கதாக எடுத்துக் கொண்ட கூடாரமாகிய, தேவனுடைய நாமம் இடப்பட்டிருந்த (இயேசுவாகிய) பரிசுத்த சரீரத்தின் மூலமாகத்தான் தேவனை அணுக முடியும். மனுஷீக பெயரை தேவன் எடுத்தார். தேவன் எடுத்தார்... 121இங்கு கவனியுங்கள். ஆதியிலே ஆதாம்... இந்த விஷயத்தி லிருந்து நான் மேற்கொண்டும் தொடர்ந்து செல்ல முடியவில்லை, ஏனெனில் சிலர் இவைகளை புரிந்து கொள்ளாமலிருப்பது போல் நான் உணருகிறேன். எனவே நான் மீண்டும் உங்களுக்கு இவை களை எடுத்துக்கூறட்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் நான் இவ்வாறு செய்ய என்னை எச்சரிக்கிறார். நான் என்னுடைய பொருளை விட்டு ஒரு நிமிடம் விலகிச் செல்கிறேன். ஆதாமாகிய தேவகுமாரன் வீழ்ந்து போனது பற்றி மகிமைக்கு முதல் செய்தி எட்டுகையில், தேவன் ஒரு மைந்தனை அனுப்பினாரா? வேறு யாரையாகிலும் அனுப்பினாரா? வீழ்ந்து போன தனது மைந்தனை மீட்க தாமே புறப்பட்டு வந்தார். அல்லேலூயா! இதைச் செய் வதற்காக தேவன் தாமே வந்தார். அதைச் செய்ய வேறு யாரையும் தேவன் நம்பவில்லை. தேவன் மாமிசமானார் (மனுஷனானார்) நம்மிடையே வாசம் பண்ணினார், அவரே மனிதனை மீட்டுக் கொண்டார். “நாம் தேவனுடைய சொந்த இரத்தத்தினால் இரட் சிக்கப்பட்டோம்'' என்று வேதம் கூறுகிறது. நமது பாவத்தை போக்குவதற்காக, அழியாமையுள்ளவரான தேவன் அழிவுள்ள சரீரத்தை எடுத்துக் கொண்டு, அவர் தாமே நமது பாவ நிவாரண பலியான ஆட்டுக்குட்டியானார், நாம் காண முடியாத படி திரை போட்டு மூடப்பட்டிருக்கும் தேவ மகிமைக்குள் நாம் பிரவேசிப்பதற்காக, அவர் தனது சொந்த இரத்தத்துடன் திரைக்கப்பால் தேவனுக்கு முன்பாக பிரவேசித்திருக்கிறார். 122எகிப்தில் கொண்டு போகப்பட்ட யோசேப்பு, சிறைச் சாலையிலிருந்து, பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப் பட்டு நாட்டையே ஆளக்கூடியவனாக ஆக்கப்பட்டான். யோசேப்பின் நாட்களில் எகிப்தில் யாவும் செழித்தோங்கின. அதே போல், இயேசு திரும்பி வருகையில், பாலைவனமும், சோலைவனமாகும். இயேசு கிறிஸ்து செழிப்பின் குமாரன், அவருக்கு யோசேப்பு முன்னடையாளமானவன். அவர்கள் யோசேப்பை சிறையில் தள்ளினார்கள்... அந்த எகிப்திய தளபதியின் வீட்டில் யோசேப்பு இருக்கையில், அவன் வீட்டில் யாவும் விருத்தியடைந்ததாக இருந்தது. பின்பு அவனை சிறையில் போட்டார்கள். சிறையில் யாவும் விருத்தியுள்ளதாக ஆயிற்று. இறுதியாக அவன் பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்ட போது, உலகில் எங்கும் காண முடியாதவாறு, எகிப்தில் அனைத்தும் விருத்தியடைந்த நிலைமைக்கு முன்னேற்ற மடைந்தது. 123அது போலவே, இயேசுவும் உலகுக்கு திரும்பி வருகையில், இது செழிப்பின் பூமியாக மாறும். பழைய பாலைவனங்கள் யாவும் சோலையாக மாறும். எங்கும் உணவு தாராளமாக உண்டாயிருக்கும். நாம் ஒவ்வொருவரும் தத்தமது சொந்த அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து மகிழ்ந்து களிகூர்ந்து, அவரது பிரசன்னத்தில் என்றென்றும் வாழ்ந்திருப்போம். அவர் இராஜாவாக திரும்பி வருகையில் இது சம்பவிக்கும். அவர் மனுஷகுமாரனாயிருந்தார், அதாவது தீர்க்கதரிசியா யிருந்தார். ஆமென்!. அவர் மனுஷகுமாரனாயிருந்தார். பலியாக, ஆசாரியனாக. அவர் இராஜாவான மனுஷகுமாரனாயிருக்கிறார். தமது மகத்துவமுள்ள சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் தாவீதின் மைந்தனாயிருக்கிறார். மனுஷகுமாரன்! மனுஷகுமாரனாக வெளிப் பட்ட தேவன் இவரே. சர்வலோகத்தின் பாவங்களைத் தொலைக்க அவர் தாழ இறங்கி மனிதனானார். அவர் மானிடன்தீர்க்கதரிசியானார். அவர் ஆசாரியனான மனிதனானார். அவர் இராஜாவான மனிதனானார். பரலோகத்தின் இராஜா அவர், பரிசுத்த வான்களின் இராஜா அவர். அவர் நித்திய இராஜா, அவர் நேற்றும் இன்றும் என்றும் இராஜா, நித்திய இராஜா! யோசேப்பு தேசமெங்கும் புறப்பட்டுச் செல்லுகையில், அவன் வரும் முன்பாக, அவன் வருகையை அறிவிக்கும் முகமாக எக்காளத்தை முழங்கினர். அதைக் கேட்ட ஜனங்கள் யாவரும், ''யோசேப்புக்கு முன்பாக முழங்கால் யாவும் முடங்கட்டும்'' என்று சப்தமிட்டனர். யோசேப்பு புறப்பட்டு வருகையில், வழியில் ஒருவன் எதைச் செய்து கொண்டிருந்தாலும் சரி, ஒருவன் எந்தப் பொருளையாவது விற்றுக் கொண்டிருந்தாலும் சரி, எக்காளம் முழங்கியதும் அவன் தன்னுடைய தொழிலையும் நிறுத்தி விட்டு, யோசேப்புக்குத் தன் முழங்காலை முடக்குவான். ஒருவன் தனக்குச் சேர வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் எக்காளம் முழங்கினால், உடனே அவனும் தன் முழங்காலை முடக்குவான். அண்ணகனும் தன் பணிகளைச் செய்ய ஆயத்தமாகையில், எக்காளம் முழங்கினால், தன் வேலையை நிறுத்திவிட்டு, முழங்காலை முடக்குவான். யோசேப்பு வருகிறார் என்ற எக்காள முழக்கத்திற்கு யாவரும் தம் பணிகளை நிறுத்திவிட்டு முழங்காலை முடக்க வேண்டும். வரப்போகும் நாட்களிலொன்றில், அனைத்தும், நாழிகையும் கூட அசைவற்று நிற்கும், ஏனெனில் அப்பொழுது தேவ எக்காளம் தொனிக்கும், அப்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள், பிரகாசமும் அழகுமுள்ள நித்தியத்திற்குள் அக் காலைப் பொழுது விடியும். “எல்லா முழங்கால்களும் முடங்கி, நாவுகள் யாவும் அவர் நாமத்தை அறிக்கை பண்ணும்''. இப் பொழுதே அதைத் தொடங்குங்கள், ”சிலருடைய பாவங்கள் முந்திக் கொள்ளும், சிலருடைய பாவங்கள் அவர்களை பின் தொடரும்'. ஆனால் இப்பொழுது, என்ன சம்பவித்தது, அது எவ்வளவு மகிமையாயிருந்தது என்பதைக் கவனியுங்கள். யோசேப்பு புறஜாதியிலிருந்து தனக்கு ஒரு பெண்ணை விவாகம் செய்து கொண்ட பிறகு, எப்பிராயீம், மனாசே என்ற இரு மைந்தர்கள் அவனுக்குப் பிறந்தார்கள். யாக்கோபின் அந்திமக் காலத்தில் நடந்ததைக் கவனியுங்கள். அவன் எப்பிராயீம், மனாசே ஆகி யோரை ஆசீர்வதிக்க இருந்தபோது, யோசேப்பு மூத்தவனாகிய மனாசேயை தந்தையின் வலது கரத்திற்கு நேராகவும், எப்பிராயீமை தன் தந்தையின் இடது கைக்கு நேராகவும் வைத்தான், ஏனெனில் மூத்தவன் வலது கரத்தின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமென்று விரும்பினான். ஆனால் யாக்கோபு ஜெபம் பண்ணுகையில், யாக் கோபின் கைகள் மாறின, அதினால் வலது கரத்தின் ஆசீர்வாதங்கள் மூத்தவன் மேல் வருவதற்குப் பதிலாக இளையவன் மேல் வந்தது. '... அப்படியல்ல தகப்பனே'' என்று யோசேப்பு கூறினான். ''மனாசேயின் மேல் வைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை எப்பிராயீமின் மேல் வைத்து விட்டீர்'' என்றான். அதற்கு யாக்கோபு, “தேவன் என் கைகளை மாறிப் போகச் செய்தார்'' என்றான். 124என்ன நேர்ந்தது? தேவனால் முதலில் தெரிந்து கொள்ளப் பட்ட பழம்பெரும் மக்க ளாகிய யூதர்கள் மேல் வரவிருந்த ஆசீர்வாதமானது, சிலுவையின் மூலமாக மணவாட்டியைப் பெற்றுக் கொள்ளும்படி புறஜாதிகள் மேல் வந்து விட்டது. யூதர்களிடத்திலிருந்து ஆசீர்வாதமானது, புறஜாதிகள் மேல் சிலுவையின் மூலம் வந்தது. அவர்கள் சிலுவையை புறக்கணித்தனர். எனவே, அவர் தனக்கென புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக் கொண்டார். இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னர், யோசேப்பு தன் சகோதரரால் தள்ளப்பட்டு, அநேகமாண்டுகள் ஒருவருக்கொருவர் தொடர்பற்று இருந்தார்கள். அதே போல் யூதர்களும் அநேக ஆண்டுகளாக தம் சகோதரரான இயேசுவோடு ஐக்கியமின்றி இருக்கிறார்கள். நாம் இப்பொழுது, மீண்டும் சகரியா தீர்க்கதரிசியின் புத்தகத்திற்கு திருப்புவோம். அங்கே கவனியுங்கள். யூதர்கள் குடும்பம் குடும்பமாக பிரிந்து நின்று அழுது புலம்புகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே புலம்பி, “நாம் எவ்வாறு இந்தத் தீங்கை செய்து விட்டோம்? நாம் எவ்வாறு இந்தத் தீங்குக்கு உடன்பட்டோம்?'' என்று கூறுவார்கள். ”உம் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று'' கேட்பார்கள் - அவரைக் குத்தினவர்களும் கூட. அவர் மேகங்களுடன் வருவார், அப்பொழுது அவரைக் குத்தினவர்களும் நோக்கிப் பார்ப்பார்கள். யூதர்களின் ஒவ்வொரு குடும்பத்தாரும் தனித்தனியே புலம்பி அழுவார்கள். செய்வதறியாது அவர்கள் திகைப்பர். 125யோசேப்பு தன் சகோதரருக்கு முன்பாக நிற்கையில், தனக்கு எபிரெய பாஷை தெரியாதது போல் காண்பித்துக் கொண்டு, அவர்களோடு பேச ஒரு மொழிபெயர்ப்பாளனை அமர்த்திக் கொண்டான். அவ்வரலாறு உங்களுக்குத் தெரியும். அவன் எபிரெய மொழி பேசத் தெரியாதவன் போல் காண்பித்துக் கொண்டான். அவன் கண்டு கொள்ள இவ்வாறு செய்தான். அதன் பிறகு, இறுதியாக ஒரு நாளில் அவர்கள் தங்களெல்லாரிலும் இளையவனான தம்பி பென்ய மீனை யோசேப்பின் முன்பாக கொண்டு வந்துவிட்டு போது, யோசேப்பின் உள்ளம் தன் சகோதரன் பென்யமீனுக்காகப் பொங்கினது. அதைக் கவனித் தீர்களா? அவ்வாறே இயேசுகிறிஸ்து திரும்பி வருகையில் அவரது உள்ளத்தை மிகவும் பொங்கச் செய்யப் போகும் காரியமானது என்ன? யோசேப்பைப் போல் உள்ள நமது இயேசு யார் நிமித்தமாக அவரது உள்ளம் பொங்கியெழப் போகிறது? தனதல்லாத தூர தேசங்களில் சிதறிக் கிடந்து, தற்போது, புதிதாகப் பிறந்தவர்கள் போல் பாலஸ்தீனாவில் கூட்டிச் சேர்க்கப்பட்டு தன் ஆதி ஸ்தானத்தில் திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ள, தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு வந்த அவ்விளம் சபையாகிய அந்த யூதர்களினிமித்தம் தான் இயேசுவின் உள்ளம் பொங்கியெழும். ஆறு முனைகளைக் கொண்ட தாவீதின் நட்சத்திரம் பொறித்த உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த அக்கொடியுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அத்தேசம் பிறந் துள்ளது. அங்கே இஸ்ரவேல் என்னும் தேசம் உதித்துள்ளது. தேசங்கள் உடைகின்றன; இஸ்ரவேலோ விழித்தெழுது பார் தேவன் வேதத்தில் முன்னுரைத்த அடையாளங்களின்படி புறஜாதியார் நாட்கள் எண்ணப்படுது, திகில்கள் அதிகரிக்குது சிதறிப் போனவரே, உம் சுய தேசம் திரும்புவீர், மீட்பின் நாள் சமீபம் மானிட உள்ளம் பயத்தினால் சோருது (உன் திராட்சைச் செடி ஒளியிடம் வருவதைப் பார்) ஆவியினால் நிறைவீர், உம் விளக்குகளை தூண்டி எரிய விடுவீர், தலை நிமிர்ந்து பாரீர், உமது மீட்பு சமீபம். கள்ளத் தீர்க்கர் பொய்யுரைக்கின்றனர், தேவ சத்தியம் அவர்கள் மறுக்கின்றனர். கிறிஸ்துவாகிய இயேசு நமது தேவன் என்பதை மறுக்கின்றனர் மகிமை! ஆனால் வெளிப்படுத்துதலானது வந்திருக்கிறது! எனவே நாம் அப்போஸ்தலர் நடந்த அதே பாதையைப் பின்பற்றி நடப்போம் தேவ ஆவியினால் நிறைந்து உம் விளக்குகளை தூண்டி தெளிவாக எரியவிடுவீர் ஏனெனில் மீட்பின் நாள் சமீபம் மானிட உள்ளம் பயத்தினால் சோருது தேவ ஆவியினால் நிறைந்து உம் விளக்குகளை தூண்டி தெளிவாக எரிய விடுவீர் தலை நிமிர்ந்து பாரீர், உமது மீட்பு சமீபம் (ஓ) 126ஓ! யோசேப்பு தனது தம்பியாகிய பென்யமீனை அங்கு நிற்கப்பார்க்கையில்! அது அவனது சின்னத்தம்பி, தன் தம்பியாகிய பென்யமீனை இளைஞனாக நிற்கக் கண்டான். யூதர்களின் பன்னி ரண்டு கோத்திரங்களிலும் இருந்து ஒரு இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர்கள், கிறிஸ்துவின் வருகையில் அவரைக் கண்டு அவரை ஏற்றுக் கொள்ள திரும்பி வருவார்கள். அவர்கள், ''...இதோ இவரே நம்முடைய தேவன், இவருக்காக காத்திருந் தோம்...'' என்று கூறுவார்கள். அவருடைய காயப் பட்ட கரத்தைப் பார்த்த அவர்கள், '... உம் கைகளில் வடுக்கள் ஏதென்று'' கேட்பார்கள். ''... என் சிநேகிதரின் வீட்டில்...'' என்று கூறுவார். அவர்கள் அழுது புலம்புவார்கள். அவர் ஆகாயத்தில் நிற்கக் கண்டு, ஒவ்வொரு குடும்பமும், தாவீதின் குடும்பத்தார் தனியேயும், நப்தலியின் குடும்பத்தார் தனியேயும், அழுது புலம்பு வார்கள். தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்த்துப் புலம்பு வார்கள். அப்பொழுது அவருடைய செய்தி என்னவாயிருக்கும்? யோசேப்பு கூறியதைக் கவனியுங்கள். அவன் அவர்களிடம் பேசியபோது... 127மற்றுமொரு காரியத்தைக் கவனியுங்கள். யோசேப்பின் முன்பாக இஸ்ரவேல் புத்திரர் சேர்ந்து வந்திருந்த பொழுது, அவன் அவர்களை நோக்கிப் பார்த்தான். தன் தம்பியாகிய பென்யமீனை பார்த்தான். அவன் எப்பிராயீமைப் பார்த்தான். மற்ற யாவரையும் பார்த்தான். காத் முதற்கொண்டு அவர்கள் யாவரையும் பார்த்தான். அந்த பன்னிரண்டு கோத்திரங்கள், இல்லை, அங்கே பத்துக் கோத்திரங்கள் அப்பொழுது அவன் முன்பாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் யாவரும் அங்கே நிற்கக் கண்டான். அவர்கள் யாவரும் தன் சகோதரர்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவர்களோடு நின்றிருந்த தன் தம்பியாகிய பென்ய மீனை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது, அவன் தொண்டை துக்கத்தால் அடைத்தது. அவர்கள் அவனது சகோதரர்கள் தான் என்று அவன் அறிந்திருந்தான். அவன் அப்பொழுது என்ன கூறினான்? ''எல்லாரும் என்னை விட்டு அகன்றுபோங்கள்'' என்று கூறினான். அப்பொழுது யோசேப்பின் மனைவியும், பிள்ளைகளும் எங்கிருந்தனர்? அவர்கள் தங்கள் அரண்மனைக்குள் போய் விட்டனர். புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டு எங்கு செல்லும்? அரண்மனைக்குச் செல்லும். மணவாட்டியானவள், எடுத்துக் கொள்ளப்படுதலில் இப்பூமியை விட்டு மேலே அழைத்துக் கொண்டு போகப்படுவாள். அல்லேலூயா! அவரைக் குத்தினவர்களும், அவரைப் புறக்கணித்தவர்களுமான யூதர் களாகிய தன் சொந்த சகோதரர்களுக்கு இயேசு தன்னை அறியப்படச் செய்யும் போது, அதற்காக இயேசு திரும்பி வருகையில், மண வாட்டி இப்புவியில் இருக்க மாட்டாள். ஆனால் அவரது மனைவி யாகிய சபையும், அவருக்குப் பிரியமானவர்களும், அவரது நெருங்கிய சிநேகிதரும், அவருடைய சொந்தமான தேவன் அனுப்பிய அவரது துணையும் ஆலயத்தில் அமர்ந்திருப்பார்கள். 128அவன் அவர்களை நோக்கிப் பார்த்த போது, அவர்கள் அவன் யாரென்று அறியாமல் அந்த தேசத்தின் அதிபதியின் முன்பாக நின்று கொண்டு, தங்களுக்குள் ஒருவரோடொருவர் யோசேப்புக்கு தாங்கள் செய்த தீங்கைக் குறித்துப் பேசிக் கொண்டார்கள். அது எப்பிராயீம் என்று நினைக்கிறேன். இல்லை, அது எப்பிராயீம் அல்ல, நான் மறந்து விட்டேன், யார் இவ்வாறு கூறியது: '... நம் சகோதரனாகிய யோசேப்பை நாம் கொன்றிருக் கக் கூடாது...... இப்பொழுது இதோ அவன் இரத்தப்பழி நம்மி டத்தில் வாங்கப்படுகிறது...'' என்றான். ரூபன் தான் இதைக் கூறினான். 'அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து; இளைஞ னுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது இதோ அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப் படுகிறது'' என்று கூறினான். அவர்கள் இவ்வாறு பேசிக் கொள்கையில், யோசேப்பு அங்கு நின்று கொண்டிருந்தான். யோசேப்பு ஒரு மொழி பெயர்ப் பாளனின் உதவியைக் கொண்டு தன் சகோதரரோடு பேசினதினால், அவனுக்கு எபிரெய பாஷை தெரியாது என்று நினைத்து அவர்கள் இவ்வாறு தாராளமாக அவனுக்கு முன்பாக பேசிக் கொண் டார்கள். ஆனால் யோசேப்பு அவர்கள் பேசிய யாவற்றையும் அறிந்தேயிருந்தான். சிலர் நினைக்கிறார்கள், “அந்நிய பாஷையில் பேசுவது புரிந்து கொள்ள முடியாது'' என்று. ஆனால் அவர் அதைப் பற்றிய யாவையும் அறிந்தேயிருக்கிறார். ஆம், அவர் அறிந்துள்ளார். புறஜாதி இராஜ்யங்களின் வரிசையில் முதலாவதான தாயாகிய பாபிலோனிய இராஜ்யம் வந்தபோது, அது விழுந்து போவதற்கு முன்பாக, அந்நிய பாஷையில் பேசுதலும், வியாக்கியானித் தலும் உண்டாயிருந்தது. முதலாவதான புறஜாதி சாம்ராஜ்ய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது எது? எவரும் அறிந்திராத அந்நிய பாஷையில், ஒரு கையுறுப்புத் தோன்றி, சுவற்றில் எழுதியது. அவற்றை, அங்கேயிருந்த ஒரு மனிதன் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை, வியாக்கியானித்துக் கூறினான். எனவே, எவ்வாறு புறஜாதி சாம்ராஜ்யம் அதின் துவக்கத்தில் அந்நிய பாஷையில் பேசுதல் உண்டாகி முடிவுற்றதோ, அவ்வாறே, புறஜாதி இராஜ்யத்தின் யுகமானது அந்நிய பாஷை பேசுதலோடு முடிவடையும். ஆமென். எவ்வாறு ஆரம்பித்ததோ, அவ்வாறே முடிவும் இருக்கும். 129இஸ்ரவேல் புத்திரர் தாங்கள் பேசும் பாஷை யோசேப்புக்கு தெரியாது என்று எண்ணினர், ஆனால், அவனோ அவர்கள் பேசுவதை அறிந்தேயிருந்தான். அவர்கள் தங்களுக்குள், “இப்பொழுது நமக்கு நேரிட்டதைப் பார்த்தீர்களா?'' என்று கூறினார்கள். அப்பொழுது, யோசேப்பு அவர்கள் தங்கள் செயலைப் பற்றி வருந்தியதை கண்டபோது... இப்பொழுது, அவரைப் புறக்கணித்ததற்காக அவர்கள் தங்களில் மனங்கசந்து வருந்துவதைக் காணும்போது, அவரது தொண்டை துக்கத்தால் அடைக்கும். அவர் தன் சபையை இப்பூமியிலிருந்து கிளப்பி, மகிமைக்குள் கொண்டு செல்வார். அதன் பின்பு, திரும்பி வருவார், அப்பொழுது பூமியின் கோத்திரத்தா ரெல்லாரும் புலம்புவார்கள். எகிப்தில் இஸ்ரவேல் புத்திரர் என்ன செய்தார்கள்? ரூபன் முதற்கொண்டு, அவர்கள் அனைவரும், யோசேப்பை அடையாளங்கண்டு கொண்ட போது, அவர்கள் கதறினர், பயந்தனர். “இதோ யோசேப்பு” என்று அவர்கள் சப்தமிட்டனர். “நாம் செய்த செயலுக்கு உரிய பலனை அடைந்தோம், யோசேப்பு நம்மைக் கொன்று போடுவான், இப்பொழுதே நாம் யாவரும் அவனால் அழிக்கப்பட்டுப் போவோம். ஏனெனில் யோசேப்பு நம்மை விட்டு அகன்று அநேக காலமாக இருந்து விட்டான். இவன் நம்முடைய சகோதரனாகிய யோசேப்பு ஆயிற்றே, எனவே நாம் செய்ததற்கு தக்க பலன் நமக்கு வந்துவிட்டது'' என்று அழுதார்கள். 130ஆனால் யோசேப்போ, “நீங்கள் உங்கள் செய்கைக்காக வருத்தப்பட வேண்டாம், நம் யாவரையும் உயிரோடே காப்பதற்காக தேவன்தான் இதைச் செய்தார்'' என்றான். தேவன் என்ன செய்தார்? இயேசுவை யூதர்கள் ஏன் புறக்கணித்தனர்? தமது நாமத்தினிமித்தமாக, தாம் பிரித்தெடுத்த புறஜாதி சபையாகிய மணவாட்டியாகிய நம்மை ஜீவனோடு காக்கும்படியாக தேவன் இப்படிச் செய்தார். அவரைப் புறக்கணித்த பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் புலம்புவார்கள். அவர்கள் குகைகளிலும் மலையிடுக்குகளிலும் தங்களை மறைத்துக் கொள்ளுவார்கள். இந்த மலையின் மேல் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அவர்கள் அவரை புறக்கணித்தனர். அவர் நிமித்தமாக பூமியின் கோத்திரத்தார் யாவரும் அழுது புலம்பு வார்கள். இஸ்ரவேலருக்குள்ளே அவர்கள் கோத்திரம் கோத்திர மாக பிரிந்தும், குடும்பம் குடும்பமுமாக பிரிந்தும், அழுது புலம்பி, “நாம் ஏன் இதைச் செய்தோம், அவரைப் புறக்கணிக்கிற இக்காரியத்தை நாம் எப்படிச் செய்து விட்டோம்? இதோ அவர் நிற்கிறார், இவரே நம் தேவன், இவருக்காக காத்திருந்தோம். அங்கே அவர் தன் கைகளில் ஆணி கடாவப்பட்டதினால் உண்டான காயத்தழும்புகளுடன் நிற்கிறார், நாமே அவருக்கு அப்படிச் செய்தோம்'' என்று புலம்புவார்கள். 131இதே போல் தான் எகிப்திலும், “இதோ யோசேப்பு, நாம் அவனை விற்றோம்'' என்று யோசேப்பின் சகோதரர்கள் திரும்பி வந்து கூறினார்கள். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, “எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப் போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான்'' என்று கூறினான். ''ஓ'' என்று அவர்கள் திகைத்து, ஒருவரையொருவர் நோக்கி, அழுது புலம்பி, “நாம் இப்பொழுது என்ன செய்ய முடியும்?'' என்றார்கள். “நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்: தேவனே இதைச் செய்தார்... தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்'' என்று யோசேப்பு கூறினான். தேவன் தான் எல்லா மனிதரையும் சிருஷ்டித்தார். அவர்கள் வெள்ளையராயினும், கறுப்பு மனிதராயினும், பழுப்பு நிறத்தவ ராயினும், மஞ்சள் நிறத்தவராயினும், எல்லோரையுமே தேவன் சிருஷ்டித்தார். அவரே புறஜாதியினரையும், யூதரையும் படைத்தார். யாவரையும் அவரே படைத்தார், தன் மகிமைக்காக. புறஜாதியிலிருந்து மணவாட்டியைத் தெரிந்து கொள்ள அவர் யூதர்களை புறக்கணிக்க வேண்டியதாயிருந்தது. 132இவைகளை முன்னிட்டுத்தான், இந்த எல்லா முன்னடையாள மான திருஷ்டாந்தங்கள் உள்ளன. எனவே, புறஜாதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மணவாட்டியானவளும் அவளுடைய சந்ததியும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் கழுவப்பட்ட மகிமையால் நிறைந்த பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்ற சபையாய், ஒரு நாளில் எடுத்துக் கொள்ளப்படுதலில், ஒரு க்ஷணப் பொழுதில், ஒரு இமைப் பொழுதில், இயேசுவின் சமூகத்தில் போகும்படி அவர்களுக்குள் வாசம் பண்ணும் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் எடுத்துக் கொள்ளப்படுவாள். இது அவர் திரும்பி வந்து யாவற்றையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருகையில் சம்பவிக்கும், அப்பொழுது அவர் தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்துவார். முடிவாக, வேதவாக்கியம் இங்கே என்ன கூறுகின்றது என்பதைக் கவனியுங்கள். “இதோ மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும் (இங்கே அவர் இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறுகிறார். எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்தல்ல) அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்: வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரம். ... கண்கள் யாவும் அவரைக் காணும்: அவரைக் குத்தினவர் களும் அவரைக் காண்பார்கள். பூமியின் கோத்திரத்தாரெல் லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும். ஆமென்.'' இதன் பிறகு இங்கே அவர் அந்த மகத்தான மேற்கோளைத் தருகிறார். இவர் யார்? அவர்கள் நோக்கிப் பார்க்கப் போகிற இவர் யார்? “நான் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன். நான் ”A“ முதல் ”Z“ முடிய. எல்லாம் அவரே (கிரேக்க மொழியின் அகர வரிசையில் ”அல்பா'' முதலெழுத்தும் ''ஒமெகா'' கடைசி எழுத்துமாகும்). அப்போஸ்தலர் 2:36ல் பேதுரு கூறினான், மனுஷர் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழே வேறொரு நாமமும் கட்டளையிடப்படவில்லை''. நான் உங்களின் மன்னிப்பைக் கோருகிறேன். நான் வசனத்தை தவறாக குறிப்பிட்டு விட்டேன். “ஆகையினால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும் பத்தார் யாவரும் நிச்சயமாக அறியக்கடவர்கள்'' என்றான். பேதுரு இவ்வாறு தான் கூறினான். யோவான் 14:8ல் பிலிப்பு அவரை நோக்கி, ''ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்'' என்றான். 133யோவான் 14:9ல், ''அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறிய வில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படி யிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்“ என்றார். ஒரு சமயம் ஒரு நபரிடம் இந்த வசனத்தைக் குறிப்பிட்டேன். அதற்கு அந்த பெண்மணி கூறினாள்: “ஒரு நிமிடம் பொறுங்கள், திருவாளர் பிரன்ஹாமே, நீங்களும் உங்கள் மனைவியுங்கூட ஒன்றுதான். “அது அதைப் போலுள்ளது அல்ல” என்று நான் பதிலளித் தேன்.) “அது எப்படி'' என்றாள் அவள். “இப்பொழுது என்னை நீ பார்க்கிறாயா?'' என்று நான் கேட்டேன். “ஆம்'' என்றாள் அவள். “என்னை பார்க்கையில் என் மனைவியையும் பார்க் கிறாயா?'' என்று நான் கேட்டேன். ''இல்லை '' என்றாள் அவள். அப்படியாயின் அவர் கூறியது வித்தியாசமானது அல்லவா?'' என்றேன் நான். இயேசு, “என்னைக் காணும்போது, நீ பிதாவைக் கண்டுவிட்டாய்'' என்று கூறினார். எனவே அது இயேசு யார் என்று அறிந்து கொள்ளப் போதுமானதாக உள்ளது. எனவே யோவான் எழுதிய முதலாம் நிருபம் 5ம் அதிகாரம் 7ம் 8ம் வசனங்களைக் குறித்துக் கொள்ளுகிறவர்கள் குறித்துக் கொள்ளலாம். இயேசு தந்த வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய அதே யோவான் இங்கே கூறுகிறார். “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (வார்த்தை தான் குமாரன்), பரிசுத்த ஆவி இந்த மூன்றும் ஒன்றுதான்... பூலோகத்தி லே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப் பட்டிருக்கிறது''. இவை மூன்றும் ஒன்றல்ல, இவை மூன்றும் ஒருமைப் பட்டிருக்கின்றன. 134குமாரனையுடையவர்களாக இல்லாது, நீங்கள் பிதாவை மட்டும் உடையவர்களாக இருக்க முடியாது. பரிசுத்த ஆவியன்னியில், நீங்கள் பிதாவையோ, அல்லது குமாரனையோ மட்டுமே உடையவர்களாக இருக்க முடியாது. ஆனால் நீங்கள்... தண்ணீர், இரத்தம் மற்றும் ஆவி இவை மூன்று மூலமான காரியங்களைக் கொண்டுதான் நீங்கள் அவருடைய சரீரத்திற்குள் இடம் பெற முடியும். இயற்கையான பிறப்பு நேரிடுகையில், ஒரு பெண்மணி, தன் குழந்தைப் பேற்றில், அங்கே அவளிடமிருந்து முதலாவதாக வெளிப்படுவது என்ன? முதலாவதாக தண்ணீரும், இரண் டாவதாக இரத்தமும் (அது சரியா?) மூன்றாவதாக ஜீவனும் அதாவது ஆவியும் வெளிப்படுகின்றன. குழந்தை வெளியே வந்ததும், தன் சுவாசத்தை இழுத்து சுவாசிக்க ஆரம்பித்து ஜீவிக்கிறது. இயற்கைப் பிறப்புக்கு மூல காரணமாக அமையும், தண்ணீர், இரத்தம், ஆவி இவை மூன்றையும் போலத்தான் ஆவிக்குரிய பிறப்புக்கும் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தண்ணீர் ஞானஸ்நானம், விசுவாசத்தினால் நீதி மானாகுதல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசம் வைத்தல், தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுதல். அடுத்தது என்ன? இரத்தம்; பரிசுத்தமாகுதல், அதாவது இரத்தத் தினால் சுத்திகரிக்கப்பட்டு குழந்தை வெளியேறுகிறது. 135அந்தக் கட்டத்தில் தான் நசரேய சபைக்காரர்களே, நீங்கள் தவறிவிட்டீர்கள். முதலிரண்டு கட்டம் வரைக்கும் மட்டும் போன நீங்கள், அதற்கு மேற்கொண்டு உள்ள கட்டத்திற்குச் செல்ல வில்லை. பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரம் பலிபீடத்தின் மேல் தகனிக்கப்பட அல்லது பலிசெலுத்தப்பட வேண்டியது அவசிய மாகும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடை வார்கள்''. பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரமாக உள்ளது, அது உண்மைதான். அது 'கன்னி'' என்ற சொல்லைப் போலுள்ளது, 'கன்னி'' என்ற சொல்லுக்கு, ''சுத்தமான, பரிசுத்தமான, கலப்படமில்லாத, பரிசுத்தமாக்கப்பட்ட'' என்று பொருள்படும். ஐந்து கன்னியரிடம் எண்ணெய் இருந்தது, ஏனைய ஐந்து கன்னியரிடம் எண்ணெய் இருக்கவில்லை. முதல் ஐந்து பேர்களும் ஆவியினால் நிரப்பப் பட்டிருந்தனர். ஏனைய ஐந்து பேர்களும் பரிசுத்தமாக்கப்படுத லோடு நின்று போய்விட்டனர். ஆவியினால் நிரப்பப்படுதலுக்கு கடந்து செல்லவில்லை. ஓ! பாப்டிஸ்டுகளே, ஓ! பிரஸ்பிடேரியன்களே, நீங்கள் 'விசுவாசிகளான பிறகு, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? ''பரிசுத்த ஆவி உண்டென்று நாங்கள் கேள்விப்படவே யில்லை“ என்று அவர்கள் (எபேசுவிலிருந்து சீஷர்கள்) கூறினார்கள். 'அப்படியென்றால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' ''அல்லாமலும் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்... அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட பிறகு, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். 136தண்ணீர், இரத்தம், ஆவி. இயேசு, தான் வந்து வாசம் பண் ணும்படி, ஒரு சபையைக் கழுவி, சுத்தம் செய்து, பரிசுத்தமாக்க வந்தார். அவர் தன் சொந்த இரத்தத்தினால், தேவனால் பரிசுத்தமாக பிறப்பிக்கப்பட்ட அந்த மனித சரீரத்தில் இருந்த தேவ இரத்தமான தன் சொந்த இரத்தத்தை, மாம்ச இச்சையில் பிறந்த நம்மை கழுவி சுத்திகரித்திடவும், நமக்கு பரிசுத்தமாக்கப்பட்ட, பரிசுத்த பாத்திரத்தை ஈந்து, அதில் வந்து அவர் தாமே வாசம் பண்ணவும், ஈந்தார். 137“இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது, ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உங்களுட னும், உங்களுக்குள்ளும் (நான் என்பது இந்த இடத்தில் இடப் பிரதி பெயராக உள்ளது) உலகத்தின் முடிவு பரியந்தமும் இருக்கிறேன்'' ஆமென். சகல நாட்களிலும் நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருக்கிறேன் என்று கூறினார். ''நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'', என்று கூறினார். ''விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின் செல்லும்'' என்றும் கூறினார். சபையினுள் தேவன் வாசம் பண்ணுகிறார். தெய்வீகம் எவ்வளவு அருமையாக உள்ளது. ''பரலோகத்தில் சாட்சியிடு கிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (குமாரன்), பரிசுத்த ஆவி. இம்மூன்றும் ஒருவர்தான். பரிசுத்தமாக்கப்படுதலுக்குள் வராமலே நீங்கள் ஒருவேளை இரட்சிக்கப்பட முடியும். மேலும், இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த மாக்கப்பட்டு இருந்தும், ஒருவேளை பரிசுத்த ஆவியைப் பெறா மலும் இருக்கக் கூடும். பரிசுத்தமாக்கப்பட்டிருந்தும் இன்னும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படாத நிலையில் இருக்கக் கூடும். உங்கள் இருதயத்தை கழுவி, சுத்திகரித்து இருந்தும் இன்னமும் ஏதோ ஒன்றால் நிரப்பப்படாத நிலை உள்ளது. இந்த நிலையில் தான் வேதத்தில் சொல்லப்படும் பின்வரும் காரியம் சம்பவிக்கிறது. ''அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல், நான் விட்டு வந்த என் வீட்டுக்குத் திரும்பி போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப் பட்டிருக்கக் கண்டு திரும்பி போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டு வந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலை மையிலும், அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்'' 138அவ்வாறு தான் உங்களுக்கும் சம்பவித்துள்ளது. ஓ, யாத்திரீகப் பரிசுத்த சபையோரே (Pilgrim Holiness), மற்றும் நசரேய சபையோரே (Nazarenes)மற்றும் ஏனைய அதைப் போன்ற சபையோரே! நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து நிரப்பியதால், மக்கள் அந்நிய பாஷைகளில் பேசவும், ஆவியானவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தபோது, நீங்கள் அதை 'பிசாசு'' என்றழைத்து, தேவனுடைய கிரியைகளுக்கெதிராகப் பேசி தேவதூஷணம் கூறினீர்கள். தேவனுடைய கிரியைகளை “அது அசுத்தமான காரியம்' என்றழைத்தீர்கள். அதினால் உங்களது சபையானது எங்கே போய் நிற்கிறது என்பதை பார்த்தீர்களா? அவைகளை விட்டு வெளியே வாருங்கள்! அந்த வேளையானது வந்து விட்டது இங்கே. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு போதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளை வந்திருக்கிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உண்டாகும் அவர் கிரியை நடப்பித்தல் மூலமாக தேவன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆமென். மீட்பின் நாள் சமீப மாயிருக்கிறது. தீமோத்தேயு 3:16ல் அவரின் தெய்வீகம் விவரிக்கப் பட்டுள்ளது. “அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்கிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கிப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார். 139நாம் இப்பொழுது எந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். 8ம் வசனத்தில் இறுதிப் பகுதிக்கு. இன்றிரவிலே நாம் பத்மு தீவு தரிசனம் என்ற தலைப்பில் 9ம் வசனத்திலிருந்து படிப்போம். நமக்காக மகத்தான காரியங்கள் ஆயத்தமாக உள்ளன. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேகிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் அவர் என்னை முந்தி நேசித்தாரல்லோ என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே கிரயத்திற்குக் கொண்டாரன்றோ நீங்கள் உண்மையிலே அதைச் செய்கிறீர்களா? தேவன் தம்மை உங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளாரா? இயேசு கிறிஸ்துவாகிய அவர் தேவ குமாரனென வெளிப்படுத்தப் பட்டுள்ளாரா? பாவத்தைப் போக்க தேவன் மாம்சத்தில் தோன்றினார். அவர் தனது சபைகளிலே இக்கடைசி நாட்களில் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் தன்னை அறியப்படுத்துகிறார். வேதத்தில் சொல்லப்பட்டுள்ளபடி சபையில் காரியங்கள் அப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அதை இச்செய்தியின் முடிவில் கவனியுங்கள். அப்படியே நடைபெறுகிறது. வேதத்தில் கூறப்பட்டுள்ளபடியே எபேசு சபைக் காலத்திலும், பெர்கமு சபைக் காலத்திலும், தீயத் தீரா சபைக் காலத்திலும், மற்றும் ஒவ்வொரு சபை காலத்திலும் நடைபெற்றிருக்கிறது. 140லூத்தர் என்ன செய்வார், வெஸ்லி என்ன செய்வார் என்பதைப் பற்றியும், எவ்வாறு இந்த பெந்தெகொஸ்தே சபை ஸ்தாபனமானது லவோதிக்கேயா சபைக் காலத்திற்குரிய வெது வெதுப்பான நிலைமைக்குள் போகும் என்பதைக் குறித்தும் சரியாக உரைக்கப்பட்டுள்ளது. அதுவுமல்லாமல், அதன் நடுவிலிருந்து தேவன் தன் ஜனங்களை வெளியே இழுப்பார் என்பதையும் குறித்து உரைக்கப்பட்டுள்ளது. அது சரிதான். அது மிகவும் சரியாக அமைந்துள்ளது. நாம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லாம் உடைந்து போவதையும், மற்றும் என் நண்பர்களையும், உலகம் இருக்கிற நிலையையும், உலகம் பெற்றுள்ள குழப்பமான நிலையையும் நான் பார்க்கிறேன். கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாயிருப் பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். காலத்தின் முடிவில் நாம் இருக்கிறோம். மனுஷருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகிறது. எங்கும் யாவரும் அந்த நிலையில் உள்ளனர். அடிக்கடி வானொலியில், விமானத் தாக்குதல் பற்றி எச்சரிக்கப்படுகிறோம்; அவர்கள், ''வான் ஊர்தி தாக்குதல் வரப்போகிறது, நிலவறைக் குள் போய் ஒளிந்து கொள்ளுங்கள்'' என்று எச்சரிக்கின்றனர். அந்த விதமான அணு ஆயுதத் தாக்குதல் வந்தால் அதினின்று தப்பும்படி எவரும் தன்னை மறைத்துக் கொள்ள முடியாது. பூமிக்கடியில் 150 அடி ஆழத்திற்கு அந்த குண்டுத் தாக்குதல் போய் எட்டும். 150 சதுர மைல் விஸ்தீர்ணத்திற்கு அத்தாக்குதல் போய் சேதம் விளைவிக்கும். அதன் தாக்கம் அல்லது அதினால் ஏற்படும் அதிர்ச்சி இண்டியானா போலிஸ் போன்ற இடத்தை தரைமட்டமாக்கும். லூயிவில்லையும் தாக்கும். அவைகளிலொன்றின் தாக்குதலைப் பற்றி பாருங்கள். அதன்னியில் இன்னும் என்னென்ன பயங்கர ஆயுதங்கள் இருக்கின்றனவோ, அதை சொல்ல கஷ்டமாக உள்ளது. 141ருஷியா போன்ற மாவல்லரசு அதைச் செய்ய வேண்டு மென்றில்லை. கியூபா போன்ற சிறு நாடு அதைச் செய்து விட முடியும். மிகச் சிறிய ஒரு பிரதேசம், சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாவிலுள்ள சிறிய தீவாகிய அல்கெட்ராஸ் போன்றதொரு மிகச் சிறிய பிராந்தியம் உலகத்தையே அழிக்கக் கூடிய அந்த குண்டை செய்துவிட முடியும். அதற்காக செய்ய வேண்டிய தெல்லாம், எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்திவிட்டு, ஒரு பொத்தானை அழுத்தினால் போதுமானது. உலகமனைத்தும் அழிக்க ஒரு பெரிய சைன்யம் தேவையில்லை. அதைச் செய்ய பிசாசின் கைகளில் கருவியாகவுள்ள ஒரு பைத்தியக்காரன் அதற்கு போது மானது. அப்படித்தான் காரியமானது உள்ளது. அவன் அதை செய்வான், அப்பொழுது உலகமனைத்தும் முடிந்து போகும். ஆனால், நான் இப்பொழுது, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட காரியத்தை உங்களுக்கு கூறட்டும். அந்தப் பயங்கர அழிவு சமீபமாகும் போது, காலைப் பொழுது வருவதற்கு முன்பாக, அந்தப் பயங்கர அழிவு சம்பவிக்கும் முன்னர், எடுத்துக் கொள்ளப்படுதல் உண்டாகும். அதற்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்படுதல் சம்பவிக்கும். நீங்கள் இந்தக் காரியத்தில் குழப்பமடையாமல் இருக்க இயேசு கூறியதை நினைவு கூருங்கள்; “நோவாவின் நாட்களில் நடந்ததைப் போல்...' '...லோத்தின் நாட்களில் சம்பவித்ததைப் போல...'' மழை பெய்வதற்கு முன்னர் நோவா பேழைக்குள் போய்விட்டான் என்பதை நினைவு கூருங்கள். ஜலப் பிரளயத் தினூடே அவன் பேழை மூலமாக எடுத்துச் செல்லப் பட்டான். நோவா யூதருக்கு முன்னடையாளமாயுள்ளான். ஆனால், ஏனோக்கு மரணத்தைக் காணாமல் போய்விட்டான். ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை நோவா உணர்ந்தான். ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதானது, நோவாவுக்கு ஒரு அடையாளமா யிருந்தது. புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டவுடன், அவர் தன்னை இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்துவார். பார்த்தீர்களா? அது சரியாக இருக்கிறது. 142லோத்தின் நாட்களைப் பற்றி இயேசு கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு துண்டு நெருப்புத்தணல் சோதோமின் மேல் விழுமுன், தூதன் லோத்தை நோக்கி, “இங்கிருந்து சீக்கிரம் புறப்படு, நீ இங்கிருந்து புறப்படும் வரைக்கிலும் என்னால் இந்த ஸ்தலத்தை அழிக்க முடியாது'' என்று கூறினான். அக்கினி விழுமுன், லோத்தும் அவனது குடும்பத்தினரும் சோதோமை விட்டு வெளியேறினர். எனவே, எடுத்துக் கொள்ளப்படுதல், உபத்திரவக்காலம் வருவதற்கு முன்னர் நேரிடும். உபத்திரவக் காலத்தைக் குறித்து அநேகர் தவறான அபிப் பிராயத்தில் இருக்கின்றனர். ஆனால், கர்த்தருக்கு சித்தமானால், இந்த வாரத்தில், கர்த்தருடைய உதவியைக் கொண்டு, அதைப் பற்றிய தவறான கருத்தை நீக்கி, தெளிவான - சரியான கருத்தைக் காண்போம். மகா உபத்திரவ காலத்தைக் குறித்து ஒரு முன்னடை யாளத்தை நீங்கள் வேதத்தில் காண்பீர்களாயீன், அதற்கு யாக்கோபின் இக்கட்டின் நாட்களைத் தான் சாயலாகக் கொள்ள முடியும். யாக்கோபின் இக்கட்டுக்கும், புறஜாதிகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. புறஜாதிகளுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. அவ்வாறாக வேதத்தில் முன்னடையாள மில்லை. உபத்திரவ காலத்திற்கு முன்பாக புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்படுகிறது. 143தண்ணீர் இரத்தமாக மாறுதல் போன்ற அற்புதத்தை நீங்கள் எதிர்நோக்குவீர்களாயின், இஸ்ரவேலருக்கு வருகிறது, மோசேயும் எலியாவும் அவர்களுக்காக வரும்போது. எலியா நான்காவது தடவையாக தோன்றும் போது, அது சம்பவிக்கிறது. அவர்களிரு வரும் மரித்தவர்களாயிருக்கவில்லை. இல்லை, மோசே மரித்தான், அவனை புதைத்த இடம் யாருக்கும் தெரியாது. மறுரூபமலையின் மேல் அவன் இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தான். ஆகவே இந்த சம்பவத்திற்கு முன்பாக எப்பொழுதோ அவன் உயிரோடு எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லையா? பார்த்தீர்களா? எனவே அவர்கள் திரும்ப வந்து கொல்லப்படுவார்கள், அவர்கள் உடல்கள், நமது கர்த்தர் சிலுவையிலறையப்பட்ட, “சோதோம்'' என்று ஞானார்த்தமாய் அழைக்கப்பட்ட எருசலே மின் வீதிகளில் கிடக்கும். அவர்கள் யூதர்களுக்கு பிரசங்கிப் பார்கள்; அவர்கள் பூமியை வாதைகளால் அடித்து, மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைப்பார்கள். அப்பொழுது புறஜாதிகளின் ஊழியமானது முடிவடைந்து, புறஜாதி சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். புறஜாதி சபையானது தன் வீட்டிற்கு திரும்பிப் போய்விடும். எல்லாவற்றின் அழிவும் அப்பொழுது உண்டாயிருக்கும். பூமியில் மூன்றில் இரண்டு பங்கினர் கொல்லப்படுவார்கள். அவ்விரு சாட்சிகளின் பிரேதங்கள் மூன்று நாட்கள் அத்தெருவில் கிடக்கும் பொழுது, அது எவ்விதமாக இருக்கும் என்பதைப் பாருங்கள். 144தென் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட, எனக்கு அங்கிருந்து கிடைத்த அந்த புகைப்படங்களைப் பாருங்கள். அது ஒரு பெந்தெகொஸ்தே மிஷனரியும், அவரது மனைவியும், இரு குழந்தைகளும் கொல்லப்பட்டு, அவர்களது பிரேதங்கள் தெருக் களில் கிடக்கிறதைக் காண்பிக்கிற புகைப்படமாகும். அதில் ஒரு பெண் குழந்தை வயிறு வீங்கிப்போன நிலையில் கிடக்கிறது. அவர்களை கொன்றவர்கள், அவர்களை புதைக்கக் கூடவில்லை. அப் பிரேதங்களின் பக்கமாக மக்கள் நடந்து சென்று, அதில் துப்பினர். இவ்வாறான நிலையில் அப்பிரேதங்கள் மூன்று அல்லது நான்கு நாட்கள் கிடந்தன. சகோதரன் கோப் என்பவர் அந்த புகைப் படத்தை எடுத்தார். அது என்னிடம் என் வீட்டில் உள்ளது. எவ்வாறு அவர்கள் செய்தார்கள் என்பதைப் பாருங்கள். இவ்வாறு செய்து விட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புகிறார்கள். வேதத்தில் இக்காரியமானது எவ்வாறு முன்னடையாளமாக குறிக்கப்பட்டிருக்கிறது என்பதை பாருங்கள். எந்த சபையானது அதைச் செய்யப் போகிறது என்பதை பாருங்கள். அது சரிதான். இப்பொழுது ஒரு பாம்பைப் போல் அது மிகவும் தந்திரமாக அசைந்து, மிகவும் நெருக்கமாக அது வந்து கொண்டிருக்கிறது. அதற்கான அடையாளங்கள் தோன்றியுள்ளன. 1933ம் ஆண்டில் கர்த்தர் எனக்குத் தந்த தீர்க்கதரிசனத்தைப் பாருங்கள். அதில், ''எவ்வாறு பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள், எவ்வாறு தங்களின் வாக்குரிமையினால் தவறான நபரைத் தேர்ந்தெடுப்பார்கள்'' என்பதைப் பற்றியெல்லாம் கூறப்பட்டது. ஏழு காரியங்கள் முன்னுரைக்கப் பட்டிருந்தது. அவற்றில் ஐந்து ஏற்கனவே நிறைவேறிவிட்டன. அடுத்த காரியமானது, பெரிய சக்தி வாய்ந்த ஒரு பெண்மணி எழும்பு கிறாள். அது ஒரு அதிகாரம் படைத்த சபையாக இருக்கலாம், அது இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளை ஆண்டு கொள்ளும். அதற்கு அடுத்ததாக, அமெரிக்க தேசமே அப்படியே சாம்பலாக ஆகி விட்டதாக கண்டேன். அங்கே தான் முடிவுண்டாகிறது. அது தான் முடிவு காலம். 145“அவர்களுக்கு ஒரு வாகனம் உண்டாயிருக்கும், ஆனால் அதை ஓட்டிச் செல்ல அதற்கு ஒரு ஓட்டுநர் தேவையேயில்லை'' என்பதாக எனக்குத் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. இப்பொழுது அப்படியொரு வாகனத்தை அவர்கள் ஆயத்தம் செய்து விட்டார்கள். பரிசுத்த ஆவியானவர், மாகினாட் அரண் கட்டப்படுவதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே ஜெர்மானியர் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி தெளிவாக முன்னுரைத்தார். அதை யாரும் மறுக்க முடியாது, அது சம்பவிக்கும் முன்னரே கூறப்பட்டது, அது சம்பவித்த பிறகு அதைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. பரிசுத்த ஆவியானவர் உரைத்தபடியே நடந்துள்ளது. ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அந்த விஷயத்தில் பெரும் பாதகனாயிருப்பான் என்று நான் கூறினேன். அவ்வாறே அது நடந்தது. ஜனநாயகக் கட்சியினரே, நான் உங்கள் உணர்வுகளை புண்படுத்த இவைகளைக் கூறவில்லை. நான் உங்களுக்கு கூறுகிறேன், அது ஜனநாயகக் கட்சியினனோ, அல்லது குடியரசுக் கட்சியினனோ, அவர்களைப் பற்றி நான் பேசவில்லை, நம் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் ஜனநாயகக் கட்சியையோ, அல்லது குடியரசுக் கட்சியையோ சார்ந்தவனல்ல, நான் ஒரு கிறிஸ்தவன். ஆகவே அப்பொழுது அவர்கள்... அது என்னவாயிருந்த போதிலும், ஆனால் நீங்கள் அங்கே கவனியுங்கள். 146எவ்வளவு பயங்கரமான நம்பிக்கை துரோகிகள் உள்ளனர் என்பதைப் பாருங்கள். ஒவ்வொரு தடவையும், நிக்சனுக்கு வாக்களிக்கும் பொழுது, அந்த மற்ற வேட்பாளருக்கும் உங்கள் வாக்குகள் விழும்படி இரகசியமாக அந்த இயந்திரத்தை அவர்கள் அங்கே அமைத்தனர் என்பதைப் பற்றி பத்திரிகைகளில் படித் தீர்களா? எல்லாப் பத்திரிகைகளிலும் அதைப் பற்றிய செய்தி வெளியாகியது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை இதிலிருந்து நீங்கள் அறிந்து கொண்டீர்களா? கிறிஸ்துவை தவிர வேறு எதுவும் உண்மையானதாக இருக்கவில்லை. ஆமென். ஓ! ஆசீர்வதிக்கப்பட்ட அந்த பழமை வாய்ந்த புத்தகம் தான், நீங்கள் யார் என்றும், நீங்கள் எங்கிருந்து வந்தீர்களென்றும், எங்கே போகிறீர்களென்றும் உங்களுக்குக் கூறுகிறதாயிருக்கிறது. ஆம், ஐயா! இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பழமையான புத்தகம் நான் அவரை நேசிக்கும்படி செய்கிறது. உங்களுக்கும் அப்படியில்லையா? பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்த ஆவியில் விசுவாசம் இம்மூன்றும் ஒன்றுதான். பிசாசுகள் நடுங்கும்; பாவிகள் உணர்வடைவார்கள், யேகோவாவில் வைக்கும் விசுவாசம் எதையும் அசைக்கும் (ஆமென்) எத்தனை மகத்துவமான நாளானது நமக்கு முன்பாக உள்ளது, நண்பர்களே, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலை தேவன் தம் தூதனுக்கு அளித்து, அவன் வந்து யோவானுக்கு அளித்து வெளிப்படுத்தினதினால், சபைக் காலங்கள் வழியாக நமக்காக ஆயத்தம் பண்ணி வைக்கப்பட்டுள்ளவைகள் என்ன வென்று அறியப்பட்டுள்ளது. 147நாம் எழுந்து நிற்கையில், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. பியானோ வாசிப்பவரே, “இயேசுவின் நாமத்தை உங்க ளோடு எடுத்துச் செல்லுங்கள்'' என்ற பாட்டுக்கு எங்களுக்கு சுருதி கொடுங்கள். இப்பொழுது கவனியுங்கள். இக்கூடாரத்தில் நம் மத்தியில் இக்காலையில், புதியவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேக மில்லை. அவர்களோடு நீங்கள் கைகுலுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உங்கள் இல்லங்களுக்கு அவர்களை அழையுங்கள், யாவருக்கும் நல்வரவு கூறிடுங்கள். இதை நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் செய்ய விரும்புகிறேன். இன்றிரவு ஆராதனை ஏழு மணிக்கெல்லாம் ஆரம்பித்து விடும். ஏழரை மணிக்கு நான் 'பத்மு தீவு தரிசனம்'' என்ற தலைப்பில் பிரசங்கிப்பேன். நாளையிரவு, நான், கர்த்தருக்கு சித்த மானால், முதலாம் சபைக் காலமாகிய எபேசு சபைக் காலத்தைக் குறித்து பேசுவேன். நாம் இப்பொழுது, நமது கூடாரத்தின் ஆராதனை முடிவின் பாடலாகிய 'இயேசுவின் நாமத்தை உம்மோடு ஏந்திச் செல்லுங்கள்'' என்ற பாடலை பாடப் போகிறோம். நல்லது, யாவரும் இப்பாடலை பாடுவோம். இயேசுவின் நாமத்தை ஏந்திச் செல்வீர் துன்பமும் நிந்தையும் சுமந்த மைந்தரே அவர் நாமம் மகிழ்வும் ஆறுதலும் அளிக்கும் உமக்கு, எனவே ஏந்திச் செல்வீர் அந்நாமத்தை எங்கணும் விலையேறப் பெற்ற இனிய நாமம் அது. இப்பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அதுவே, விலையேறப் பெற்ற இனிய நாமம் அது, இப்பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அதுவே. இப்பொழுது நாம் அடுத்த அடியை பாடு முன், உங்களுக்கு முன்னும், பின்னும், பக்கத்திலும் இங்குள்ள மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர், கத்தோலிக்கர், நசரேய சபையினர், யாத்திரீக பரிசுத்த சபையினர் ஆகியவர்களோடு கை குலுக்கி, ''கிறிஸ்தவ யாத்தீரீக நண்பரே, இக்காலையில் நீங்கள் இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். உங்களோடு தேவ காரியங்களில் ஐக்கியங் கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நமக்கு ஒரு மகத்தான வேளை உண்டாயிருந்தது, இன்றிரவும் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்'' என்று கூறுங்கள். இவ்விதமாக நீங்கள், உங்களுக்கு முன்னாலும், பின்னாலும், பக்கத்திலும் உள்ளவர்களைப் பார்த்துக் கூறுங்கள். இயேசுவின் நாமத்தில் அவர் பாதத்தில் முழங்கால் முடங்கட்டும் (சகோதரன், இன்றிரவு உம்மை மீண்டும் சந்திப்பேன்) பரத்தில் இராஜாதி இராஜாவாக அவரை நம் பயணத்தின் இறுதியில், முடிசூட்டுவோம் விலையேறப் பெற்ற இனிய நாமமது, இப்பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியும் அதுவே. இயேசுவின் பாதத்தில் நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை, நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உம்மோடிருப்பாராக. நாம் தலைவணங்குகையில், நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை! (சகோ. நெவில் அவர்கள் ஜெபம் செய்து முடிக்கிறார்ஆசிரியர்).